தலைவனாக தன்னை தகுதிப்படுத்திக்கொள்ளும் அரசியல்வாதிகள் உருவாவது அவசியம்!

 

 

 


 


 

 

அரசியல் விழிப்புணர்வு தேவை

 இந்தியாவின் வளர்ச்சி வேகம் குறிப்பிடத்தக்க வகையில் முன்னேற முடியாது போனதற்கு காரணம் சரியான நபரை முக்கியமான வேலைகளுக்கு தேர்ந்தெடுக்க முடியாத நுட்பமில்லாத தன்மையே காரணம். குறிப்பாக அரசியல் தளத்தில். ஏன் நாம் இப்படி இருக்கிறோம்? அரசியல்வாதி ஒருவரின் மகனை அடுத்த தலைவர் என்று ஏன் சமாதானம் செய்துகொள்கிறோம்? இதற்கு காரணமாக மூன்று சிக்கல்களைக் கூறலாம். ஒன்று, உணர்ச்சிரீதியாக சிந்தித்து முடிவுகளை எடுப்பது. ஒரே மாதிரியான எப்போதும்போலான மன்னிப்புகளைக் கேட்பது. ஆனால் இந்திய மக்கள் பெரிதும் உணர்ச்சிகரமானவர்கள். இதற்கு நமது திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் வரும் நிகழ்ச்சிகளே மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும். இந்த இயல்பே பொதுப்பணிக்கு உரியவர்களைத் தேர்ந்தெடுக்கும்போது, முன்வருகிறது. எனவே, இதன் முடிவுகள் எப்போதும் நியாயமானதாக, பகுத்தறிவுக்குரியதாக இருப்பதில்லை. நாம் பிக் பி யோடு உணர்வுபூர்வமாக இணைந்துள்ளதால், ஜூனியர் பிக்கும் வாய்ப்பினை அளிக்கிறோம்.

சினிமா என்ற வகையில் இதுபோன்ற முடிவுகள் மக்கள் வாழ்க்கையி்ல பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்திவிடப்போவதில்லை. ஆனால் நாட்டை நடத்தி செல்பவர்கள் என்ற வகையில் இவை பெரிய கொடும்விளைவை பின்னாளில் ஏற்படுத்திவிடும்.

அரசியலில் தேர்ந்தெடுப்பது குறித்து வாக்காளர்கள் பகுத்தறிவோடு சிந்தித்து முடிவு செய்யவேண்டும். பரம்பரையாக யாரும் இதனை சரியாகச்செய்யவில்லை என்று நான் கூறவில்லை. ராகுல்காந்தி, காங்கிரஸை மீண்டும் உயிர்த்தெழச்செய்ய முயன்றுகொண்டு இருக்கிறார். நன்றாகப்பேசுகிறார்; அமைதியாக செயல்படுகிறார்; மையமான பதவிக்கு உடனே தாவிவிடவில்லை. அவரை நிர்வாகரீதியாக காரணங்களுக்காக தேர்ந்தெடுக்கலாம். ஆனால் ராகுல்காந்தி தன் தந்தையை உங்களுக்கு நினைவுபடுத்தியதற்காக அல்ல.

நாட்டின் நிதிநிலைமையை மானியங்கள் குலைக்கின்றன என்று ராகுல்காந்தி பேசியதால், அவருக்கு வாக்களிப்பது குறித்து பரிசீலனை செய்யலாம். உங்கள் ஓட்டு என்பது நாட்டிற்கு முக்கியமான பங்காற்றக்கூடிய ஒன்று, அரசியல் தலைவர்கள் மீது உங்களது அன்பை வெளிக்காட்டக்கூடியதல்ல.

 இரண்டாவது, அரசியல்திறமையை வளர்ப்பதற்கான அமைப்புகளை வளர்ப்பதில் நம்நாட்டில் பற்றாக்குறை போதாமை உள்ளது. நாம் மருத்துவர்களை, பொறியாளர்களை உருவாக்கி வருகிறோம். ஆனால் கலை அறிவியல் படிப்புகளை தீவிரமாக எடுத்துக்கொள்வதில்லை. விரல் விட்டு எண்ணக்கூடிய அளவே கல்லூரிகள் சிறப்பாக இயங்குகின்றன. அவையும் பல்வேறு பற்றாக்குறையில் சிக்கி தடுமாறிவருகின்றன.

 அமெரிக்காவில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகம் போல, மாணவர்களுக்கு அரசியலை தங்களது வாழ்க்கையாக, குறிக்கோளாக கொள்ளுமாறு கற்றுத்தர இந்தியாவில் எந்த கல்விக்கழகங்களும் இல்லை. நம்மிடையே உள்ள பாடங்கள் காலாவதியானவை. அரசியல் அறிவியல் மாணவர்களை தற்போதைய இந்திய அரசியலின் நிலைமை குறித்து அவர்களின் தனிப்பட்ட கருத்துகளை அறியவும், என்ன மாற்றங்களை இங்கே சாத்தியப்படுத்தமுடியும் என்பதை அறியவும் சந்தித்தேன்.
கல்வியைத்தாண்டி நமது அரசியல் கட்சிகளிடம் இளைஞர்களை ஈர்க்கும்படியான திட்டங்களோ (அ) பயிற்சி வகுப்புகளை நடத்துவதோ (அ) சிறந்த திறமையாளர்களை மேன்மைபடுத்தும் திட்டங்களோ அறவே கிடையாது.

இந்த இல்லாமைகளைத்தாண்டி கட்சிகள் சில கவர்ச்சிகரமான மனிதர்களைக் கொண்டே தேர்தலைச் சமாளிக்கின்றன. பிறகு காலப்போக்கில் அவர்கள் இல்லாமல் போகும்போது, வெறுமையைத் தவிர்க்க அதுபோலவே ஒரு நகலை உருவாக்கி நல்ல தலைவர் உருவாகிவிட்டதாக நிலைநிறுத்துகின்றனர். இதனால், நிர்வாகத் திறமையுள்ள மனிதர்கள் தம் வாழ்வென  அரசியலைத் தேர்ந்தெடுக்க தயங்குகின்றனர். தேர்ந்தெடுத்து உழைத்தாலும் முக்கியமான பதவிக்கு என்றுமே வரமுடியாது என்று அறிகிறபோது அயர்ச்சி, மன உளைச்சலும் கொள்கின்றனர். தேவைப்படும் நல்ல மனிதர்கள் கிடைப்பதையும் இந்த நகல் செயல்பாடுகள் மோசமாக்குகின்றன.

 அரசியல் விழிப்புணர்வும் பற்றாக்குறையாக இருக்கிறது. ஜனநாயகம் குறித்த மிகச்சுருக்கமான அறிமுகமாக மக்களுக்கு, மக்களால், மக்களே நடத்துவது என்று பள்ளியில் படித்திருப்போம். பலகோடி இந்தியர்களில், பொருளாதாரத்தில் பலவீனமான பகுதியினர் ஜனநாயகத்தின் சக்தியை முழுமையாக புரிந்துகொள்ளவில்லை.

ஏகாதிபத்திய வரலாற்றில் ஜனநாயகம் என்பது இந்தியா அண்மையில் பெற்ற ஒன்றாகும். இதன்படி பல நூற்றாண்டுகளாக சாதி அமைப்புகள் இருந்த நிலையில் திறமை இருக்கும் யாரும் சமூகத்தில் உயர்ந்து நல்ல நிலைக்கு வந்துவிட முடியும் என்பது யோசித்துப் பார்க்கவே கடினமான கருத்தேயாகும். இந்த நிலைமையில் அரசியல் தலைவர்கள் மன்னர்கள் போலவும், அவர்களது சிறிய இளவரசர்களும் தானியங்காக  அரசியல் பதவிக்கு வரிசைக்கு வந்துவிடுகின்றனர்.

 நாம் இந்த பிரச்சனைகளில் கவனம் செலுத்த முயன்றால் வலுவுள்ள அரசியல் அமைப்பை உருவாக்கி, சிறந்த அரசியல் தலைவர்களையும் பெறுவதோடு, இந்தியாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் திறமையையும் நுட்பங்களையும் இவர்களின் வழியே பெறமுடியும். சிறிய இளவரசர்கள் பாலிவுட் வழியாக பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். பாரம்பரியம் என்பது உங்களுக்கு வாய்ப்பினைத் தந்திருக்கலாம். ஆனால் தொடர்ந்து இங்கே நிலைபெற்று இருக்க செயல்பாடுகளில் தீவிரம் தேவை.

தோல்விகள் பல பெற்றாலும் தந்தை பெயர் ஆதரவிற்கு நிற்கும். இளவரசராக சிலர் உருவாக்கினாலும், சமாளித்து உண்மையான நாயகனாக மாற, நீங்கள் செயல்பாடுகள் வழியாக தலைவராக வேண்டும். ஒளிவிளக்குகளும், கேமராவும் தயாராகி விட்டன. பார்ப்போம் நீங்கள் என்ன வெளிப்படுத்தப்போகிறீர்கள் என்று. ஆக்சன்!

           
 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்