தலையில் அடிபடுவதால் மூளையில் ஏற்படும் பாதிப்பு!

 


 

அறிவுப்பற்று

மிஸ்டர் ரோனி

 
கான்கஷன் என்றால் என்ன?
தலையில் அடிபடுவதால் மூளையில் ஏற்படும் பாதிப்பு. இதன் காரணமாக ஒருவருக்கு உயிரபாயம் ஏற்படாது. ஆனால் சிலருக்கு சுயநினைவு இருக்கும். சிலருக்கு இருக்காது. ஆனால் மெல்ல பாதிப்பிற்கான அறிகுறிகள் தெரியத்தொடங்கும் அவற்றைப் பார்ப்போம்.

தலைவலி, கழுத்துவலி எப்போதும் இருக்கும்.
முடிவெடுப்பது, நினைவில் வைத்துக்கொள்வது, கவனத்தை குவிப்பது கடினமாக மாறும்.
சிந்திப்பது, பேசுவது, வாசிப்பது ஆகிய செயல்கள் மெதுவாக மாறிவிடும்
எப்போதும் உடலில் களைப்பு இருக்கும்.
மனநிலை மாறிக்கொண்டே இருக்கும்.
தூங்கும் பழக்கம் மாறும்
மயக்கம், உடல் சமநிலை தவறும் சூழல் உருவாகும்.
வாந்தி வருவது போல தோன்றும்
கண் பார்வை மங்கும், கண்ணில் எளிதாக சோர்வு தோன்றும்.
ஒளி, ஒலி சார்ந்து கவனக்குறைவு ஏற்படும்
வாசனை, சுவையறியும் திறன் இழப்பு
காதில் ஓலி கேட்கத் தொடங்கும்

இரண்டு வகை வாதங்கள் உள்ளனவா?

ஐசீமிக், ஹெமோர்ஹேஜிக் என இரு வாதங்கள் உள்ளன. ஐசீமிக், மூளையில் செல்லும் ரத்தம் தடைபடுவதால் உண்டாவது. இந்த வகையில் மனிதர்களுக்கு எண்பது சதவீத வாதம் உருவாகிறது. அடுத்து, ஹெமோர்ஹேஜிக் வாதம், மூளையில் ரத்தம் கசிவதால் உண்டாகிறது. இவ்வாதம், இருபது சதவீதம் பேருக்கு உருவாகிறது. ஒருவருக்கு வாத பாதிப்பு உடலில் ஒரு பகுதியில் அல்லது இருபகுதியில் ஏற்படுகிறது. இதன் விளைவாக பேச முடியாமல் அல்லது பேச்சை புரிந்துகொள்ளும் தன்மை, பார்க்கும் திறன் குறைவு, நடக்க முடியாமல் கால் செயலிழப்பு, சோர்வு, உடல் சமநிலை இழப்பது, தலைவலி ஆகிய பிரச்னைகள் உருவாகின்றன.

அல்சீமர் நோயின் அறிகுறிகள் என்னென்ன?

ஒரே கேள்வியை திரும்ப திரும்ப கேட்பது, அன்னைக்கு வெள்ளிக்கிழமை காலையில ஆறு மணி இருக்கும் என ஒரே கதையை பலமுறை சொல்லிக்கொண்டே இருப்பது, எப்போதும் செய்துவந்த செயல்பாடுகளை மறந்துபோவது, குறிப்பாக சமையல், இயந்திரங்களை பழுதுபார்ப்பது ஆகியன. திசை, முகவரி தெரியாமல் தொலைந்துபோவது, கட்டணங்களை கட்ட தடுமாறுவது, வங்கி இருப்பு புத்தகத்தை பராமரிக்க இயலாமை, குளிக்க மறப்பது, ஒரே உடையை அழுக்கானாலும் உடுத்துவது, முடிவெடுக்க மனைவியை நம்புவது.

இந்த அறிகுறிகளை ஒருவர் கவனித்தால் மருத்துவ உதவியை அவசியம் நாடிச்செல்ல வேண்டும். நரம்பியல், மூளை தொடர்பான ஆலோசனைகளைப் பெறுவது நோயாளிக்கு நல்லது.

டெனர். காம்

 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்