தீவிரவாதிக்கு மதமில்லை, ஊழல் அரசியலுக்கு கட்சி பேதமில்லை

 

 

 

 



 

 

 

ஊழல்களுக்கு கட்சி பேதமில்லை!

 பல காங்கிரஸ் அமைச்சர்கள் ஊழலில் குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறார்கள். 2ஜி ஊழல் என்பது இதில் முக்கியமாக குறிப்பிடலாம். ஊழலில் ஈடுபட்ட அரசியல்வாதிகளைக் காப்பாற்ற காங்கிரஸ் கட்சி, பெருமளவு விவாதங்களில் ஈடுபட்டுவருகிறது. இதில் ஈடுபட்ட சிலரைக்காப்பாற்ற பெரும் தலைவர்களின் அறிக்கைகள் போதுமானதல்ல. இதோடு நின்றுவிடப்போவதுமில்லை. சராசரி இந்தியர்களுக்கும் அரசியலில் அறமின்மை புகுந்தது கண்டு வெறுப்பு கொள்வதற்கான காரணமாக இவை அமைந்துவிட்டது. பல்வேறு ஊடகங்களின் சம்மட்டி அடி போன்ற ஊழல்களின் மீதான செய்திதொகுப்புகள், தெருவில் உள்ள கடைசி மனிதர் வரைக்குமான விழிப்புணர்வை தந்துவிட்டிருக்கிறது.

 உண்மையில் ஊழல் செய்திகளை,  டி.வியில் பார்ப்பது பெரும் பொழுதுபோக்காக மாறிவருகிறது. சேனல்களுக்கான நிகழ்ச்சிக் கருக்களை அரசியல்வாதிகளே தந்துதவுகிறார்கள். டி.வி பார்க்கும் பார்வையாளர்கள் யாரும் குற்றம் சாட்டப்பட்ட தலைவரை அப்பாவி என்று நம்புவதில்லை. அரசியல்வாதிகள் யார்தான் குற்றம் செய்யவில்லை என்று கூறப்படும் வழக்கமான செவ்வியல் வாக்கியத்தோடு, ஆமைபோன்ற நீதிமன்ற நடவடிக்கைகளில் கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் தம்மை காத்துக்கொள்ளும் அவர்களின் முனைப்பு வேடிக்கையாகத்தான் உள்ளது. இன்றுவரையிலும்  கவனத்தை இழுக்கும் யதார்த்தமாக டி.வியில் தளர்வறியாத நம்பிக்கைச் சிரிப்பு மற்றும் கர்வமான அவர்களது நடவடிக்கைகள் உலகத்திற்கு அவர்களின் குற்றத்தை அவர்களே ஒப்புக்கொள்வது போல இருக்கிறது.  
நிச்சயமாக, நான் ஏன் பதவி விலகவேண்டும்? என  அகந்தையுடன் கேட்பது கூட அவர்களின் செயல்களாக விரைவில் மாறக்கூடும்.  இது ஈராக் வெற்றியை அந்நாட்டு செய்தித்துறை அமைச்சர் அறிவித்துக் கொண்டிருக்கும்போது, காட்சியில் அமெரிக்க டாங்கிகள் வலதுபுறம் சென்றுகொண்டிருக்கும் நிகழ்ச்சியை நினைவுபடுத்துகிறது. அப்போரில் மிகச்சிறந்த பொழுதுபோக்கு பகுதிக்கு உறுதி அளித்தவர் அவர்தான்.

 ஆம், காங்கிரஸ் கட்சியின் பாதுகாப்பு முயற்சிகள் அக்கட்சியினை மேலும் மோசமாக்கவே செய்யும். குற்றங்கள் குறித்து பெருமளவு மறுப்பு என்பது பல்வேறு செய்திக்கதைகளை வாழச்செய்து, டி.ஆர்.பி அதிகரிக்கச்செய்யும் விதமாக ஊழல்வாதி ஊடகவெளியில் பெரிதுபடுத்தப்பட்டு வறுபடும் வரை நீடிக்கிறது.

 இதுபோன்ற பதவி விலகல்கள் ஊடகங்களின் செய்திகளை குறைக்கப் போதுமானதில்லையா? பழைய இந்தியாவின் வளர்ந்து வரும் தருணத்தில் கடைபிடிக்கப்பட்ட உத்தியே அது. ஒரு உதாரணத்தைப் பார்ப்போம், கொலையாளி ஒருவனை சுட்டுக்கொல்கிறான். அவனைப் பிடித்துவிட்டபின் தனது துப்பாக்கியை ஒப்படைத்துவிடுவதாக (அ) தன் உயிர் நண்பனுக்கு தந்துவிடுவதாக கூறுகிறான். இதுபோலத்தானே இந்திய அரசியல்வாதிகள் தண்டிக்கப்படுகிறார்கள். இன்னொரு உதாரணமாக, தன் மனைவியை கடுமையாக தாக்கிய ஒருவனை பிடித்துவிட்டபின், தான் அந்த அறையை விட்டு வெளியேறிவிடுவதாக கூறுகிறான். இதனைக்கொண்டு எப்படி அவர் சீர்பட்டவர் என்று கூற முடியும்?  எதிர்காலத்தில் மனைவியைத் தாக்குதலுக்கு உட்படுத்தும் கணவர்களுக்கு சொல்ல வலுவான கருத்து இதில் என்ன இருக்கிறது?

 ராஜினாமாக்கள் பழைய இந்தியாவில் தூர்தர்ஷன் பார்த்துக்கொண்டு இருந்தவர்களை சாந்தப்படுத்த முன்னர் கையாண்ட முறைகளாகும். ஆனால் விஷயங்கள் இன்று பெருமளவு மாறிவிட்டன. ஊடகங்கள் நெருப்பு போல செயல்படுகின்றன. குற்றத்திற்கான தண்டனை மற்றும் வெற்றுப்பேச்சுகள் குறித்த வேறுபாட்டை இளைய தலைமுறையினர் புரிந்துகொண்டிருக்கின்றனர். மேலும் அவர்கள் முந்தைய தலைமுறையைக் காட்டிலும் தொடர்பு கொள்வதில் முன்னேறியுள்ளனர். ஆட்சி செய்யும் கட்சி குற்றத்திற்கான தண்டனையை அளிக்காமல், பதவி விலகல் என்பது எதிர்காலத்தில் கட்சிக்கு எதிரான விளைவையே உருவாக்கும்.

காங்கிரஸ் அரசு கடினமான முடிவாக தன் ஆட்சியை முற்றிலும் விட்டுக்கொடுத்துவிட்டு தன்னை சுத்தமாக்கிக்கொண்டு அடுத்த தேர்தலில் போட்டியிட முயற்சிக்கலாம். அதிகாரத்தில் தொடர்வது அவர்களுடைய சுதந்திரம் என்றாலும், அது கடுமையான சுமையாகவே இருக்கக்கூடும். எடை தூக்குபவர் காயமுற்றார் என்றால், தன்னை குணமாக்கிக்கொண்டுதான் மீண்டும் எடை தூக்கும் பயிற்சியில் ஈடுபடுவார். ஊழலில் ஈடுபட்ட மனிதர்களை வைத்துக்கொண்டு அதிகாரத்தில் இருப்பதும், தொடர்வதும் பாதுகாப்பானது அல்ல. ஊழல் செய்த அமைச்சர்கள் அனைவருமே வெடித்துச் சிதறக் காத்திருக்கும் வெடிகுண்டுகளைப் போன்றவர்கள்.

இறுதியாக எதிர்க்கட்சிகளுக்கு சில வார்த்தைகள் கூறவேண்டும். ஊழலுக்குப்பிறகு செய்யக்கூடிய சரியான செயல்பாடுகள் குறித்தவைதாம் அவை. ஆனால் அது காங்கிரஸ் கட்சி முழுவதையும் ஒவ்வொரு முறையும் பழிகூறுவதோ, குற்றம்சாட்டுவதோ என்றில்லாமல் தீர்வை நோக்கிச்செல்வதாக இருக்கவேண்டும். குற்றத்திற்கான தண்டனையை நோக்கி கவனத்தை திருப்பவேண்டும். தீவிரவாதிகளுக்கு மதமில்லை என்பது போல ஊழல் அரசியல்வாதிகளுக்கும் கட்சி பேதமில்லை. நிகழ்காலத்தில் தேவைப்படுகிற நடவடிக்கை இதுவேயாகும். அனைத்து கட்சிகள், ஊடகங்கள், குடிமகன்கள் என நமது கடமையை சரியாக செய்தால் நாட்டினை தூய்மைப்படுத்த முடியும். குழந்தைகள் ஊழல் என்பதை தங்கள் தாத்தா பேசிக்கொண்டிருக்கும் போது கேட்டதாக கூறும்படியான சிறந்த இந்தியாவை அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்ல முடியும்.

             

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்