அரிய நோய்களுக்கான மருந்துகள்!

 


 

அறிவுப்பற்று
மிஸ்டர் ரோனி
ஆர்பன் ட்ரக் என்றால் என்ன?

மக்கள்தொகையில் குறைவான எண்ணிக்கை கொண்டவர்களை தாக்கும் நோய்களுக்கான மருந்துகளை ஆர்பன் ட்ரக் என்று கூறுகிறார்கள். இந்த மருந்துகள் அதிக லாபத்தை மருந்து கம்பெனிகளுக்கு கொடுப்பதில்லை. ஆனால், அரிய நோய்களுக்கு மருந்துகள் அவசியம் தேவை. எனவே, அமெரிக்க அரசு ஆர்பன் ட்ரக் ஆக்ட் 1983 என தனிச்சட்டம் போட்டு மருந்து நிறுவனங்களுக்கு நிதி உதவியை அளிக்கிறது. மருந்துகளை தயாரிக்க வைத்து வெளியிட உதவுகிறது.

ஆன்டிபயாடிக் என்ற சொல்லை முதலில் பயன்படுத்தியவர் யார்?

செல்மன் வாக்ஸ்மன் என்பவர், நோய்க்கு பயன்படுத்தும் பாக்டீரிய நுண்ணுயிரிகளை ஆன்டி பயாடிக் என்று கூறினார்.கூறிய காலம் 1940களின் மத்தியில் என வைத்துக்கொள்ளலாம். இவருக்கு முன்னதாக ஆன்டிபயாசிஸ் என்பதை கூறியவர், பால் வுயில்மன். இவர் பாக்டீரியங்களின் வளர்ச்சிக்கு உதவும் ப்யோசைனின் என்ற வேதிப்பொருளைக் கண்டுபிடித்து தனியாக பிரித்தெடுத்தார். இந்த வேதிப்பொருள் ஆய்வகத்தில் சோதனைக்குழாயில் பாக்டீரியா வளர்வதை ஊக்கப்படுத்துகிறது. மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் விஷம் இது.
 


 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்