இடுகைகள்

கோரிக்கை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பேசுவது என்பது தேவையை நிறைவேற்றும் கோரிக்கை!

படம்
           அகிம்சை மொழி 3 பேசுவது என்பது தேவையை நிறைவேற்றும் கோரிக்கை! புகழ்பெற்ற கோவிலில் லட்டு, மாட்டு கொழுப்பில் செய்யப்பட்டுள்ளது என கோவில் தலைவர் கூறுகிறார். இந்த வாசகத்தைப் பார்த்தால் அவர் என்ன எதிர்பார்க்கிறார், என்ன வேண்டுகிறார் என்றே தெரியாது. நெய், தாவர நெய்யில் செய்யப்படவேண்டுமா?, மாட்டுக் கொழுப்பில் செய்ததற்காக யாரையாவது தண்டிக்க வேண்டுமா என நிறைய கேள்விகள் நமக்குள் எழுகின்றன. ஆனால், எதற்கும் எந்த பதிலும் இல்லை. இவற்றை இழிவான மலிந்த அரசியல் நோக்கங்களை மையமாக கொண்டு கூறப்படும் குற்றச்சாட்டு என கூறலாம். பொதுவாக ஒன்றைக் கூறுவது என எதையும் கூற முடியாது. ஒருவர் ரயில் மெதுவாக போகிறது என சலிப்புடன் கூறுகிறார். அவருடன் அருகில் உள்ள மனைவி அதற்கு எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை. அதே வாக்கியத்தை மூன்று முறை உரக்க கூறுகிறார். உடனே மனைவி, இப்போது நான் என்ன செய்யட்டும்? கீழே இறங்கி தள்ளனுமா என்று கேட்டால், அந்த உரையாடலில் பிழை உள்ளது என்று அர்த்தமாகிறது. கணவர், ரயில் தாமதமாக சென்றால், விமானத்தை பிடிக்க நேரமாகிவிடும் என்பதைக் கூற நினைத்திருக்கலாம். ஆனால், அதை மன...