இடுகைகள்

லவ் இன்ஃபினிட்டி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

லவ் இன்ஃபினிட்டி மின் நூலாக....

படம்
coverart: canva.com இனிய நண்பர்களுக்கு, இந்த வலைத்தளத்தில் வெளியான லவ் இன்ஃபினிட்டி தொடர்  மின் நூலாகிறது. தமிழ் பிரதிலிபி தளத்தில் இந்நூலை நீங்கள் வாசிக்கலாம். நன்றி.  https://tamil.pratilipi.com/story/%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-LJdd976Q5LL7

லவ் இன்ஃபினிட்டி: காதல் கனவு நிறைந்த மனது

படம்
25 லவ் இன்ஃபினிட்டி குமார் சண்முகம் தொகுப்பு: சரசா, தீரன் குமார். ஆண்டவனின் அருள்தான் என்று சொல்லவேண்டும். அப்போது என்றோ அனுப்பிய இமெயிலுக்கு கதிர் பத்திரிகையிலிருந்து அழைத்தார்கள். அழைத்தவர் பெயர் கண்ணன். அன்று அடைந்த சந்தோஷத்தை பின்னொரு நாளில் அடைவேனா என்றளவு சந்தோஷப்பட்டேன். இத்தனைக்கும் நான் காக்கை அமைப்பில் மொழிபெயர்த்திருந்தது ஒரே ஒரு நூல்தான். அதற்கும் இரண்டாயிரம் ரூபாயைத் தாண்டி வேறு எதுவும் தரவில்லை. அங்கு வேலை செய்ததற்கு அதுவும் சரியாக போனால் எனக்கு என்ன மிஞ்சும்? இதைப்பற்றியெல்லாம் கவிக்குமாரும் கவலைப்படவில்லை. நூறு பர்சென்ட் கலைஞன் பாபுவும் யோசிக்கவில்லை. என்னைப் பற்றி யோசித்து உருப்படுவானா என்று யோசித்தது மூன்று பேர்தான். என்னை பெத்தவர்கள், அடுத்து பிருந்தா. சோத்துக்கே சாகிறப்போ இவ வேற என எரிச்சல் மூலாதாரத்திலிருந்து முட்டிக்கொண்டு கிளம்பியது. ஆனால் இந்த பிரியத்தை உரிமையை கோபத்தை நீ காதலித்த ஒரு பெண்ணிடமாவது பார்த்தாயா என மனசாட்சி கேள்வி கேட்டது. எப்படியோ, 120 ரூபாயைத் தேற்றி சென்னை வந்து சேர்ந்தேன். பத்திரிகை உலகை உய்விக்க சூரியன் வந்துவிட்டான் என்

லவ் இன்ஃபினிட்டி: காதலை இப்படியும் சொல்லலாம்!

படம்
vicky m\pinterest 24 லவ் இன்ஃபினிட்டி  குமார் சண்முகம் தொகுப்பு: ககன்சிங், சசாங் கௌர் உண்மையில் பிருந்தாவிடம் இரண்டு மாதங்களாக பேசவில்லை. திடீரென அவளிடம் பேசவேண்டுமென தோன்றியபோது, காக்கைகள் அமைப்பில் அதிகாரப் போட்டி தொடங்கியிருந்தது. ஓர் அமைப்பு, புகழ்பெறாதவரை காசு கிடைக்காதவரை யாரும் அதனைத் தலையில் தூக்கி திரியமாட்டார்கள். ஆனால் புகழடைந்து விட்டால் ஏற்றிய கிரீடத்தை கீழிறக்குவது கடினம். நான், என்னால் என்ற வார்த்தைகளை மெல்ல பல நாக்குகளிலிருந்து வரத்தொடங்கியவுடன் அங்கு இடத்தை காலிசெய்துவிட்டேன். அங்கிருந்தபோது போனில் டவர் கிடைப்பது கடினம். எனது சாம்சங் குரு, எப்போது முடங்கும் என்றே தெரியாத நிலையில் இருந்தது. இதனால் அங்குள்ள போஸ்ட் ஆபீசில் அஞ்சல் அட்டைகளை வாங்கி வீட்டுக்கு அம்மாவுக்கு மட்டும் கடிதம் எழுதி வந்தேன். அப்போது நான் தங்கியிருந்த இடத்தின் முகவரியை எழுதி அனுப்பினேன். ஏன் அப்படிச் செய்தேன். அப்பன் நம்ப வேண்டுமே? அதற்காகத்தான். அதை பிருந்தா வாங்கியிருப்பாள் என்று எனக்கு எப்படித் தெரியும்? சாரங்கியோடு சமாளித்து நாட்களை ஓட்டுவதே சிரமமாகிக்கொண்டிருக்க, இந்

லவ் இன்ஃபினிட்டி: காதல் இதயத்தை உடைத்தேன்!

படம்
monina moreno\pinterest 23 லவ் இன்ஃபினிட்டி குமார் சண்முகம் தொகுப்பு: அரசு கார்த்திக், விபானா arasyputri திருவண்ணாமலையில் கவிக்குமார் எனக்கு கற்றுக்கொடுத்தது பலரையும் எப்படி வேலை வாங்குவது என. பேசிப்பேசியே ஒருவரின் மனதைக் கரைத்து...அவரின் இயல்பை சின்னாபின்னமாக்கி இயற்கையே எல்லாம் என நம்ப வைப்பதை மிக இயல்பாக செய்து வந்தார். ஏறத்தாழ சதுரங்கவேட்டை நாயகனைப் போல என்று வைத்துக்கொள்ளுங்கள். திடீரென காலையில் பக்தி பெருகும்போது காக்கை அலுவலகத்திலிருந்து நடப்போம். பாதி தூரம் வந்ததும், நடக்க வேண்டாம். டைம் இல்ல என ஷேர் ஆட்டோ பிடிப்பார். இதெல்லாம் இரும்புக்கை மாயாவின் ஆக் சன் வேகத்தில் நடக்கும். அதேசமயம் கார்த்திக்கின் ஸ்க்ரீன் பிரிண்டிங் ஆபீசில் இருந்து சுமக்க முடியாத அளவு புத்தகங்களை, சரவணா ஸ்டோர் பையில் சுமக்க வைப்பார். அவரும் கூடவே சும ப்பார் என்று வையுங்கள். அப்போது ஆட்டோ நிச்சயம் தேவைப்படும் சூழல். ஆனால் நடந்தே போகலாம் என்பார். திருவண்ணாமலை பகலில் இருப்பது போல இரவில் இருக்காது. அதன் முக்கிய வருமானமே அண்ணாமலையார் கோவில்தான். நாள்தோறும் கூட்டம் குவிந்துகொண்டே இ

லவ் இன்ஃபினிட்டி: சோறு முக்கியம் ப்ரோ!

படம்
etsy/pinterest 22 லவ் இன்ஃபினிட்டி குமார் சண்முகம் தொகுப்பு: லவ் ரஞ்சன். சதீஸ் நிர்வானா வினோத் நல்லவர்தான். ஆனால் தான் இப்படி இருக்கிறோமே என்று நினைக்கும்போது பொங்கி விடுவார். கூட நாம் இருந்தால் எரிமலை லாவா நம்மீது கொட்டிவிடும் இல்லையா? அதேதான் நடந்தது. எனக்கு எப்போதும் சாப்பாடு என்பதைவிட படிப்பு என்பது மீது தனிக்கிறுக்கு இருந்தது. அதற்காக வேலராம மூர்த்தி, பூமணி என்று யோசிக்காதீர்கள். நண்பர்கள் கொடுப்பதை எனக்கு படிக்கலாம் என்று நம்பிக்கை தரும் நூல்களை படிப்பேன். இதனால் ஏற்படும் அவமானங்களை, கிண்டல்களைப் பற்றியெல்லாம் அணுவளவும் கவலைப்படாதிருந்தேன். அது அப்போது. அன்று நன்றாகத்தான் விடிந்தது. சரியாக வியாழக்கிழமைகளில் அதுவும் ஒன்று. நான் கையில் இருந்த வேலை செய்து கிடைத்த பணத்தை சாப்பிட்டு, டீ குடித்தும் கரைத்திருந்தேன். கூடவே தங்கியிருந்த வினோத் அண்ணாவின் நண்பர், சாரங்கிநாதன். என்ன வேலை, ஏதோ பிசினஸ் செய்து நஷ்டமாகி விரக்தியில் இருந்தார். அங்கே வினோத் அண்ணாவின் வீட்டில் ஒருவாரமாக டென்ட் அடித்துவிட்டார். என்னைப்போலவேதான். ஆனால் முடிந்தவரை ஒரு வார்த்தை பேசுகிறாரா

லவ் இன்ஃபினிட்டி 21: சுடும் வாழ்க்கையைப் பழகினேன்

படம்
மாங்கா. டோக்கியோ 21 லவ் இன்ஃபினிட்டி குமார் சண்முகம் தொகுப்பு:  உத்தம் சிங், சிக்கந்தர் இதுநாள் வரை மைதிலி ஏன் அவ்வளவு தூரம் விலகி நின்றாள் என்பது அந்த கணம் புரிந்துவிட்டது. என்ன செய்வது? காலம் கடந்துவிட்டது. ஒருவாரம் மருத்துவமனையில் வைத்திருந்தார்கள். நான் நண்பர்களோடு ஒருநாள் போய் பார்த்தேன். மெலிதாக இருந்த தேகத்தில் உயிர் கபடி விளையாடிக் கொண்டிருந்தது. முகத்தில் அனைத்தும் முடியப்போவதற்கான நிம்மதி அதிகரித்திருந்தது. உடலில் புரிந்துகொள்ளமுடியாத ஒளி தெரிந்தது. நான் வெடித்து அழுதுவிடுவேனோ என்று பயந்தேன். மெல்ல சமாளித்து, மைதிலியின் பெற்றோர் முகம் பார்க்காமல் கவனமாக வெளியே வந்தேன். மருத்துவமனையில் நோயாளி மட்டுமல்ல, அங்கிருப்பவர்களின் முகங்கள் கூட இருள்சாயத்தில் முழுகிவிடுகின்றன. இருள்சாயத்தில் நம்பிக்கையின் ஒளியை எங்கே போய் தேட.... அவள் இறந்த மாதம் நவம்பர் வேறு. எனக்குப் பிடித்த மாதம் என்பதோடு, மழையின் ஈரம், மண்ணின் அணுக்களில் சொட்டிக்கொண்டே இருக்கும் நேரமும் அதுவே. மெல்ல கரைந்தழுந்துகொண்டே பைக்கில் காங்கேயத்தில் இருந்து பைக்கில் வீடு திரும்பினேன். பாப்பினி பிரிவ

லவ் இன்ஃபினிட்டி: காதல் தேசம் நானும் கடந்தேன்

படம்
அனா கரோலினா\ பின்ட்ரெஸ்ட் 20 லவ் இன்ஃபினிட்டி 20 குமார் சண்முகம் தொகுப்பு: இளங்கண்ணன், விசாலாட்சி பிருந்தாகிட்ட நான் என்ன சொன்னேன். நான் எதுவுமே சொல்லல. நீ அருகம்புல்லு மாதிரியான அழகின்னேன். சார், என்ன நான் பின்னாடி சுத்தும்போதெல்லாம் ரெட் சிக்னல் கொடுப்பாரு. இப்ப க்ரீன் கிடைச்சுரும் போலயே  ன்னு சிரிச்சா. கள்ளி! ஐஸ்க்ரீம் அவளோட கழுத்தில இறங்கிறது தெரிஞ்சுது.  அவளுக்கு எல்லாமே தெரியும். எனக்கு தெரிஞ்சு கவிக்கு அடுத்தபடியா ஏதாவது கிஃப்ட் அனுப்பிக்கிட்டே இருக்கிற ஒரே ஜீவன் அவதான். திடீர்னு காலேஜூக்கு ஒரு பார்சல் வந்தது. எடுத்துப் பார்த்தா, சட்டை. இவளோட பேரும் நம்பரும் மட்டும் இருந்தது. எதுக்கு இதெல்லாம் பணறேன்னு கேட்டேன். ஐபிசி படி இதெல்லாம் தப்பா? ன்னு ஒரு கேள்வி கேட்டா. அசந்துட்டேன். அப்பவே முடிவுக்கு வந்துட்டேன். இது ஸ்கூல்ல படிச்சப்ப பார்த்த பிருந்தா இல்லன்னு. என்ன அப்டேட். வேகம். அதனால்தான் சொல்றேன். பெண்களிடம் ஆண்கள் போட்டி போட்டு ஜெயிக்கவே முடியாது. அவர்களாக விரும்பினால் தோற்கிற மாதிரி தன்னைக் காட்டிக்குவாங்க. ஆனால் உண்மையில் தோற்கிறது ஆண்கள்தான்

லவ் இன்ஃபினிட்டி: காதல் சொல்லப் போறேன்!

படம்
behance 19 லவ் இன்ஃபினிட்டி குமார் சண்முகம் தொகுப்பு: ராஜா தேசிங்கு, மியான் வாட்ஸ் நாம எல்லாத்தையும் படிச்சிருப்போம் தெரியும்னு நினைப்போம். ஆனா, உண்மை என்னன்னா, தேவைப்படும்போது அதனை மறந்திருவோம். நம் அனுபவத்துல பதிஞ்ச விஷயங்கள் மட்டும்தான் நம்மை எப்போதுமே காப்பாத்தும். மத்த விஷயங்கள் எல்லாம் நெருக்கடியான சந்தர்ப்பங்களில் நம்மை கைவிட்டுவிடும். இங்க அறிவுங்கறதும், அனுபவம்கிறதும் வேறுவேறு. நீங்க ஓஷோ, வேதாத்திரின்னு பல பண்டல் புத்தகங்கள ஷெட்யூல் போட்டு படிக்கலாம். இப்போ பாருங்க, காதலோ, காமமோ, ஒரு உறவு குறித்தோ நெருக்கடி வருது. அதில் எடுக்கிற முடிவு உங்க வாழ்க்கையை மாத்தப்போவுது. இதில நீங்க என்ன செய்ய முடியும்? உங்க அறிவு உதவும்னு நினைக்கிறீங்களா? நிச்சயம் இல்லை. நான் சந்திச்ச எல்லா பெண்களிடம் நான் இந்த விஷயத்தைப் பார்த்தேன். அதாவது, நாம சாதிக்க முடியாததை இவன் சாதிக்கணும்னு ஒரு எண்ணம். தூண்டுதல் இருக்கு. ஆனால் அது ஏன்? அப்படி இருக்கணும்னு என்ன இருக்கு? நான் அவங்களுக்கு  எழுதின letter லேயும் அன்னைக்கு அப்படித்தான் எழுதியிருக்கேன். ஆகா வைரஸ் எப்படி பரவுது பாத்தீங்

லவ் இன்ஃபினிட்டி: அன்பைத் தவிர வேறெதுவுமில்லை

படம்
18 லவ் இன்ஃபினிட்டி  குமார் சண்முகம் தொகுப்பு: ஹர்வீன் கௌர், ரிதேஷ் -மாதேஷ் டயரியில் இருந்து... உனக்கு கடிதம் எழுதும்போதெல்லாம் எனக்கு... நிறைய எழுதணும்போல இருக்கும். எழுதுவேன். ஆனாலும் எதிலும் நேர்த்தி கைகூட மாட்டேன்கிறதே. . இப்படி கிழித்து போட்ட காகிதங்களைப் பார்த்து எங்க அம்மா கூட திட்டினாள். நோட்டு வாங்கறதுக்கே சொத்த  அழிச்சிருவே போல ன்னு. இதை ஸ்லோமோஷன்லே பாத்தேன். அம்மா கூட அம்புட்டு அழகு. எல்லாமே உன்னால்தான். என்னை எப்படி இப்படி மாற்றினாய்? 26.2.2002 அன்று எழுதி உன்னிடம் கொடுக்காத கடிதம். உன் இல்லத்தில் உள்ளவர்களும், இதயத்தில் உள்ளவர்களும் நலமாக இருக்க வேண்டும் என்பதே இறைவனை நான் வேண்டிக் கேட்கும் வரம். இந்தக் கடிதம் நான் உனக்கு கொடுத்த கவிதை புக் உடன் சேர்ந்திருக்க வேண்டியது. காலம் தாழ்த்தி கிடைத்தாலும் பரவாயில்லை. நான் உனக்கு கொடுத்த Note இல் எழுதியிருந்ததைப் படித்து பதில் எழுது. வழக்கம்போல் இல்லாமல் விரிவாக! ரைட்.. வெரி வெல், நன்றாகச் சாப்பிடு. உடம்ப பத்திரமா பாத்துக்க. அதிகநேரம் படிச்சு தூங்காம இருக்காத. பாரு, உன்கிட்ட பேசும்போது உன்னோடு அம்மாவ

லவ் இன்ஃபினிட்டி: காலம் வழிவிடுமா?

படம்
http://t.co/YIlRU8s0mw லவ் இன்ஃபினிட்டி குமார் சண்முகம் தொகுப்பு: ரித்திக் சிங் டயரியில்... புதிரா புனிதா என்று நீங்கள் மனதிற்குள் பட்டிமன்றம் நடத்தலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் நான் எனக்குப்பிடித்தத்தைத்தான் செய்து வந்தேன். அப்பா சொன்னார், சுப்பா சொன்னார் என்பதெல்லாம் நான் விரும்பவில்லை. எனக்கு பெண்களை விதிவிலக்கின்றி பிடிக்கும் என்பதை முன்னாடியே சொல்லிவிட்டேன். ஆனால் எந்த பெண்ணை ரொம்ப பிடிக்கும் என்பதையும் லேசாக சொல்லிவிட்டேன். கடிதம் எழுதுவது, கடிதம் எழுதிய நோட்டைக் கொடுப்பது என நட்பு ஆண், பெண் இருவரிடமும் வளர்ந்து வந்தது. 25.2.2002 இந்த புள்ளியளவு எனக்கு உன் மனதில் இடமிருந்தால், போதும். Pongal சந்தோஷமாக கொண்டாடிக் கொண்டிருப்பாய். நீ Kavi யை  மட்டும் பொங்கலுக்கு கூப்பிட்டாய். ஆனா என்னை கூப்பிடலை. அதனாலென்ன, பரவாயில்லை விடு. நேரில் உன்னோடு பேசணும். என்னிக்கு அப்படிப் பேச சந்தர்ப்பம் அமையும்? பக்கத்தில் உன்னோடு அமர்ந்துகொண்டு நிறைய சண்டை போடணும்.  கவிதை, கதை, பூக்கள், பூமி, இந்த வாழ்க்கை, உன் வாழ்க்கை, உன் வீட்டு பருத்திச்செடி, உன் bus, பயணங்கள், உன் சந்

லவ் இன்ஃபினிட்டி: காதல் சொல்லிப் பழகு!

படம்
weddingchicks.com லவ் இன்ஃபினிட்டி குமார் சண்முகம் தொகுப்பு: இனியன், கவிதவன் பிரகாஷ் கவிதைகள் பற்றி பேசினேன் அல்லவா? அதுதான் என்னை உயிரோடு வைத்திருப்பதாக வெகுநாள் நினைத்திருந்தேன். ஆனால் அப்படி அல்ல; அம்மா போட்ட சோறுதான் என்னை அப்படி நினைக்க வைத்திருந்தது என பின்னால் தெரிந்துகொண்டேன். கவிதை எழுதுகிறவர்கள் கண்டிப்பாக காதலிக்கவேண்டும் என்பது என்ன விதியோ? நான் என் மாமன் பொண்ணு பிரியா முதற்கொண்டு காதலிக்க முயன்று தோற்றுக்கொண்டே இருந்தேன். ஒருத்தரை பிடித்திருக்கிறதென சொன்னால், அவர் என்ன சாதி என்பது முதல் கேள்வி. அடுத்து, அவர் சொந்த சாதி என்றால் பொருளாதாரம் குறுக்கே நந்தியாய் நின்றால் என்ன செய்வது? அப்போது காலேஜில் ஒரே ஆறுதல், ஏடாகூட மூர்த்திதான். காலையில்  பேப்பர் போட்டுவிட்டு வேலைக்கு அசால்டாக வருபவன், படிப்பில் சாதிப்பான். ஆனால் எதுவுமே தெரியாது. சுறுசுறுவென ஓடுவான். நினைத்த நேரத்தில் மோட்டரோலா போனில் ஸ்டோர்மி டேனியல்ஸின் படத்தை மின்னலாக முடுக்கி பார்த்துக்கொண்டிருப்பான். எப்படிடா? அதெல்லாம் அப்படித்தான். என்பான். அவனுக்கு முரடன் செந்தில் பழக்கமானதிலிருந்திலிருந்து ந

லவ் இன்ஃபினிட்டி: பிரம்மச்சரியத்தை உடைத்த நண்பன்

படம்
pinterest லவ் இன்ஃபினிட்டி 15 குமார் சண்முகம் தொகுப்பு: ராக்கி, தேஜஸ்வின் ராஜ் சுமதி தன்னோடு கருத்தை தெளிவா சொல்லிட்டா. எனக்கு ஆசையிருக்குன்னு. அவ ரொம்ப போல்ட். சில சமயங்களில் நான்தான் விலக வேண்டியிருந்தது. ஒருவகையில் அது இயற்கைதான். எனக்கு அப்போ புனிதமானவன்னு ஒரு பிடிவாதம் இருந்தது. என் உடம்பும் மனசும் ஒண்ணுக்கொண்ணு சண்டை போட்டது அவளோட இருக்கும்போதுதான். உண்மையில் அவளோட ஆர்வம் வேற வகையில் யோசிக்க வெச்சாலும் நான் யூ சர்டிஃபிகேட் வாங்கின பையன். அந்த மாதிரியெல்லாம் கல்யாணத்துக்கு அப்றம்தான்னு சொல்றவன். ஆனாலும் இயற்கை ஜெயிக்கிறது முடியுமா? ஃப்ரெண்டா, அதுக்கும் மேலயான்னு உடம்பு விவாதிக்க விடல. ஆனால் என்னோட கூட்டாளி கில்டி குணா, மீட்டர் வட்டி விட்ட ஜெகன்கிட்ட மூவாயிரம் ரூபாய் காசு வாங்கிட்டுப் போய், பிரம்மச்சரியத்தை உடைத்து எங்க வயித்தெரிச்சலை சம்பாதிச்சான். அப்போ அங்க இந்த விஷயத்துல ஃபேமஸா இருந்தது, திட்டுப்பாறை ஸ்வேதாதான். இதையெல்லாம் என்னோட ஃபிரண்டு மங்கை முருகன்கிட்ட சொன்னா சிம்பிளா ஒரு த த்துவம் சொன்னான். கோவம்தான். பட் அவன் சொன்னதுல ஒரு நேர்மை இருந்துச்சு பல்லு

லவ் இன்ஃபினிட்டி: பெண் தோழிகளிடம் கவனம்!

படம்
kelly oneal/pinterest லவ் இன்ஃபினிட்டி  குமார் சண்முகம் தொகுப்பு: ஹவில்தார் கேசரி, ரிஷ்விதா கௌர் நீங்கள் நான் பேசுவது, யோசிக்கிறது இதையெல்லாம் வெச்சு பெரிய ஸ்த்ரீ லோலன் அப்படியெல்லாம் யோசிச்சிருப்பீங்க. ஏன்னா அதுதான் நம்மோட இயல்பு,  ஒருத்தரை பார்க்கும்போதே டிரஸ், முகம், தலை சீவியிருக்கிறதுன்னு கணக்குப்போட்டு கேரக்டரை செட் பண்றது. ஆனால் நான் இதில் எதிலயும் வரமாட்டேன். சேரமாட்டேன். ஏன்னா, நான் கும்பலாச் சேர்ந்து காரியம் செய்றதைவிட தனியாக செய்யணும் என்பதுதான் என்னோட பேராசை. சுமதி, கிராமத்துப் பொண்ணுதான். என்னோட ஒப்பிட்டா அவ கேள்வி மூலமாகவே நிறைய தெரிஞ்சு வெச்சிருந்தா. பிளஸ்டூ படிக்கிறான்னா அவ உடம்பு பத்தி அவளுக்கு தெரியாதா என்ன, பீரியட் வரும், அதுக்கு நாப்கின் யூஸ் பண்றதுன்னு அவளும் அப்ப தொடங்கியிருந்தா. அவளச்  சமாளிக்கிறதுல எது கஷ்டம்னா, அவ ஒரு இடத்துல இருந்தான்னு வெச்சுக்கோங்க. எதேச்சையா நானு அங்க இருந்து தொலைக்கிறேன். உடனே என்னைக் கண்டுபிடிச்சு, கவனிக்க ஆரம்பிச்சிருவா.  அவள் முழு உடம்பிலும் கண்கள் முளைச்சா மாதிரி பார்க்கிறான்னு என்னோட ஆறாவது அறிவு கண்டுபிடிச்சிடும்.

லவ் இன்ஃபினிட்டி: ஒவ்வொரு பொண்ணும் ஒவ்வொரு டேஸ்ட்!

படம்
Autumn Rager லவ் இன்ஃபினிட்டி குமார் சண்முகம் தொகுப்பு: லக்கிலுக், கம்மவார் பாலாஜி 2002 ஆவது வருஷம்  மறக்க முடியாத பல விஷயங்கள் நடந்தது.அதில் முக்கியமானது, ரஞ்சனி அக்காவைச் சந்திச்சது. இவங்களுக்கு கணவர் கிடையாது. பெண் குழந்தை மட்டும்தான். கவி மூலமாக கிடைச்ச நட்பு இது. எங்கே நட்பு எனும் ட்ரெயினில் ஏறினோம்னா? நான் கவிதைன்னு ஈரோடு, அரச்சலூர், சிவகிரின்னு திரிஞ்சப்பவே வேதாத்ரி மகரிஷி எங்க ஊர்ல செம ஃபேமஸ். உடனே அவரோட கிளாஸ்ல சேருன்னு கவி பணம் கூட கொடுத்தா. சரி, என்னடா இதுன்னு கிளாஸ்ல சேர்ந்தேன். வித்தியாசமாக இருந்தது. அங்க சொன்ன பல விஷயங்களை பின்னாடி ஸ்டீபன் ஹாக்கிங் புக்ல படிப்பேன்னு நான் நினைச்சுக்கூட பார்க்கலை. நான் காலேஜ் போனபோது, தாமரைப்பாளையத்துல வேதாத்திரி வகுப்புல சேர்ந்தேன். அங்கேயும் காதல் என்னை சும்மா விடலை. சுமதின்னு ஒரு பிளஸ்டூ படிக்கிற பொண்ணு வந்துக்கிட்டிருந்தது. ஊராளிக்கவுண்டர் வீட்டு புள்ள. வாளிப்புக்கு கேட்கணுமா. இந்த தடையெல்லாம் தாண்டித்தான் கற்கண்டு இனிப்பை நெத்தியில் தக்க வைக்க முயற்சி பண்ணினேன். முதலில் கண்களுக்குள் 89 வீடியோக்கள் ஓடி, சவீதா பீவி அ

லவ் இன்ஃபினிட்டி: கவி எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்!

படம்
imgur.com லவ் இன்ஃபினிட்டி குமார் சண்முகம் தொகுப்பு: விதேஷ் தேஷ்முக், ஷிரவந்தி ஸ்கூல் லவ் எல்லாம் பார்த்தோம். அதை பின்னாடி நான் எழுதுவேன். முதலில் என் தோழி கவியைப் பற்றி சொல்லிவிடுகிறேன். கவி சொந்தக்காரின்னாலும் டவுனில் வளர்ந்தவள். காசு வித்தியாசம் எப்பவும் சொந்தங்களுக்கிடேயே கத்தி மாதிரி இருக்கும. சாதின்னாலும் கல்யாணம்னு வரும்போது அந்தஸ்து பார்த்து தூரத்து சொந்தங்களுக்கு பொண்ண குடுக்கிறாங்களே அது எதுக்கு? சொந்தம்கிறதை விட காசுங்கிறது எப்பவும் அல்டிமேட். கவியோட வசதியும் அப்படித்தான். காசு வெச்சிருக்கிறவங்க கொஞ்சம் அதுக்கேத்தா மாதிரி அலட்டலா இருப்பாங்க. ஆனா கவிகிட்ட அதுமாதிரி பந்தா ஏதும் கிடையாது. பிரியமா எல்லார்த்துக்கிட்டேயும் பேசுவா. எப்பவும் உற்சாகமா இருக்கிற அவளோ முகத்தை நான் போன் வாங்குனா ஸ்கீரின் சேவரா வால்பேப்பராக வைக்கணும்கூட நினைச்சிருந்தேன். எனக்கு கிடைச்ச 1100 வில, வால்பேப்பர் செட்டிங்கே கிடையாது என்ன செய்வேன்? பள்ளிக்கூட பாடங்களைப் பொறுத்தவரை கவி சுமார்தான். ஆனா மத்த விஷயங்களில் செம கெட்டி. அதுவும் ஃஅவளோடு ஃபிரெண்ட்ஸா உயிரையே விடுவா. பணக்காரங்ககிட்

லவ் இன்ஃபினிட்டி: ஸ்கூல்லயே நாங்க காசனோவா கேங்!

படம்
pinterest/alexa mathews லவ் இன்ஃபினிட்டி குமார் சண்முகம் தொகுப்பு: கோமாளிமேடை டீம் என்னடா இது நேரடியாக காலேஜ் லவ், துயரம்னு போயிட்டேன்னு நினைக்கறீங்களா? நான் ஆல்வேஸ் காதல், பிரியத்திற்காக ஏங்கிக் கிடந்தவன்தான். பொண்ணுங்க மேல ஆண் இன்ட்ரெஸ்ட் காட்டுறது இயல்பானதுதானே ப்ரோ!  ஆனா கிராமத்துல அது பெரிய பிரச்னையாயிரும். ஒண்ணு மண்ணா திரியறதுனால என்ன பண்றீங்க அப்படீங்கிறதுன்னு ஒடனே வீட்டுக்கு வாட்ஸ்அப் வேகத்துல போயிரும். சம்பே பையன்தானுங்க இப்படி பண்ணிப்போட்டானுங்க ன்னு ஒரு நியூஸ் பரவுச்சுன்னு வைங்க. ஆல்ட் நியூஸ் செக்பண்ணிட்டு எங்கப்பா இருக்கமாட்டாரு. பராத்து கையி. ஒரே அப்பு. ரைட் செவுளு லெஃப்ட்ல ஒதுங்கிரும்.   எங்க ஸ்கூல்ல நாங்க படிக்கும்போதே செம டீம். அதாவது ஒரு கெத்தா சுத்துற கேங்குன்னு வெச்சுக்கோங்களேன். எங்களுக்கு அப்புறம் வந்த செட்டு பசங்க எல்லாம் தம்மாத்துண்டா இருந்தாங்க சைசுல மட்டும் இல்ல. தில்லா சைட் அடிக்கிறது, ஸ்கூல கட் அடிக்கிறதுன்னு எல்லாத்திலயும்தான். நான், பாலா, வித்யா, ரங்கன், குமரேசன், ராஜூ, ராம மூர்த்தி, பாலாஜின்னு செம செட். ஜில்லெட் ஷேவிங் செட்டு மாதிரி அவ

லவ் இன்ஃபினிட்டி: நட்பே துணை

படம்
Pinterest/andrzej nowak லவ் இன்ஃபினிட்டி குமார் சண்முகம் தொகுப்பு: சரஸ் உன்னுடைய Book போடணும்கிற ஆசை நிறைவேறியதில் எனக்கு ரொம்ப சந்தோஷம். ஆனா பெரிய வருத்தம் என் பேர்ல வந்த கவிதை. கடவுளே! அந்த கவிதை நான் எழுதல. படிச்சதை புக்கில் Note பண்ணி வெச்சிருந்தேன். Atleast நீ என்கிட்ட ஒருமுறை கேட்டிருக்கலாம். இன்னும் மனசுக்குள் அது பெரிய உறுத்தலா இருக்கு. உமா அண்ணிக்கிட்ட கேட்டேன், Book பத்தி. ரொம்ப நல்லாருக்குன்னு சொன்னாங்க. அதிலிருந்த mistakes  பத்தி சொல்றதா சொன்னாங்க. நான் கேட்டுச் சொல்றேன்.  உன்னுடைய Diary யை கொடுத்து விடட்டுமா? உன்னை நேர்ல பார்த்து கொடுக்கணும்னு நினைச்சேன். நான் என்னுடைய டைரியில் எழுதறமாதிரியே உன்னுடைய டைரியில் எழுதிட்டேன். அப்புறம்தான் இதை Loosuதனமா எழுதறேன்னு நினைச்சேன். படித்த கவிதைகள், Wordings சில எழுதியிருக்கேன். அப்பப்ப  என்னென்ன தோணுதோ அதையெல்லாம் எழுதினேன்.  என்னைப் பத்தி ஏதாவது வருத்தம் உள்ளதா? அப்படின்னு எழுதியிருந்தாய். அப்படி எதுவும் கிடையாது. சில கேள்விகள் உன்னிடம் எனக்கு புரியவில்லை. நீ Diary இல் எழுதிக்கொடுத்த கவிதையை Friends படிச்சாங்க. ந

லவ் இன்ஃபினிட்டி: என் ஆயுசுக்குமான தோழியடி நீ!

படம்
pinterest/behance லவ் இன்ஃபினிட்டி குமார் சண்முகம் தொகுப்பு: சரஸ், வித்யா பாலன் எனக்கு கவி எழுதிய கடிதங்கள் அனைத்தும் விசேஷமானவை. அவளின் அன்பு முழுக்க முழுக்க எனக்கே கிடைத்த காலம் அது. பயன் எதிர்பார்க்காத பாசம் சாதாரணமா என்ன? கவி எப்போதும் எனக்கு ஸ்பெஷல்தான். மணிரத்னம் எப்படி ஏ.ஆர். ரஹ்மானுக்கு முக்கியமோ அதேபோல்தான் என வைத்துக்கொள்ளுங்கள். அன்புத் தோழனுக்கு, ப்ரியமுடன் தோழி எழுதிக்கொள்வது, நீ நலமாக உள்ளாயா? வீட்டில் எல்லோரும் நலமா? அப்பாவுக்கு இப்போது எப்படி உள்ளது? நீ திடீர்னு உன்னைப் பத்தி கேட்டதும் எனக்கு செம Shock. எனக்கு என்ன எழுதறதுன்னே தெரியல. உன் பிரார்த்தனையில் கொஞ்சம் நிறைவேறியிருக்கு. குழப்பமெல்லாம் தீர்ந்துவிட்டது. ஆனால் மனசுதான் என்னவோ பாரமா இருக்கு.. எனக்கே தெரியுது. எல்லார்கிட்டேயும் பேசறேன். சிரிக்கிறேன். ஆனா எதிலேயும் ஒட்டாம உள்ளுக்குள்ள நான் நார்மலா இல்ல. சந்தோஷப்படறதுக்கு நிறைய விஷயங்கள் நடந்தது. ரொம்ப ரொம்ப சந்தோஷமான விஷயங்கள். ஆனா... அதையெல்லாம் என்னால சந்தோஷமாக அனுபவிக்க முடியல. யோசிச்சுப் பார்த்தேண்டா.. இதைப்பத்தியெல்லாம் நான் உன்கிட்ட இதுவர