சிறிய விஷயங்களை பேரன்போடு செய்யமுடியுமா? - அன்னை தெரசா
அன்னை தெரசா அன்னை தெரசா ஊக்கமூட்டும் வாழ்க்கைப் பயணம் அல்பேனியக் குடும்பத்தின் வாரிசு. 1910ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 அன்ற பிறந்தார். மாசிடோனியாவில் பிறந்தவரின் இயற்பெயர் ஆக்னஸ் கான்க்ஸா போஜாக்ஸ்ஹியூ. பனிரெண்டு வயதிலேயே மிஷனரி அமைப்பில் சேர்ந்து வேலை செய்யவேண்டும் என்ற முடிவை எடுத்துவிட்டார். பதினெட்டு வயதில் அயர்லாந்திலுள்ள லாரெட்டோ அமைப்பில் சேர்ந்து ஆங்கிலத்தை கசடற கற்றுக்கொண்டார். பிறகு தெரசா என பெயர் மாற்றப்பட்டது. 1929ஆம் ஆண்டு முதல் தனது குடும்பத்தை துறந்தார். பதினேழு ஆண்டுகள் கன்னியாஸத்ரீயாக பணியாற்றினார். அப்போது அவரை சுற்றி வாழ்ந்த மக்களின் வறுமை அவரது மனத்தை வருத்தியது. எனவே இந்த காலத்தில்தான் அவரது மனதில் கேட்ட குரலுக்கு செவி சாய்த்தார். வறுமையில் வாடுபவர்களுக்கு உதவி தேடுபவர்களுக்கு உதவ நாம் தெருவில் இருக்கவேண்டும் என முடிவெடுத்தார். எனவே வாடிகனில் அனுமதி பெற்று தி மிஷனரிஸ் ஆப் சாரிட்டி என்ற அமைப்பைத் தொடங்கினார். செயல்பாடு 1950ஆம் ஆண்டு முதலே தொடங்கியது. இந்த அமைப்பின் நோக்கமே யாரும் கவனிக்காத மக்களை கவனித்துக்கொள்வதுதான். அன்பும், பராமரிப்பும...