இடுகைகள்

பேராசிரியர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எனது அனுபவம் சார்ந்து உணர்ந்த அறிவியல் உண்மைகளை பேசுகிறேன்! ஆண்ட்ரூ ஹூயூபர்மன், ஆய்வாளர்

படம்
  ஆண்ட்ரூ ஹூயூபர்மன், நரம்பியல் ஆய்வாளர் ஆண்ட்ரூ ஹூயூபெர்மன் நரம்பியல் ஆய்வாளர், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் பல்லாயிரம் மக்கள் உங்களது அறிவியல் பாட்காஸ்டை கேட்கத்தொடங்கியுள்ளார்களே எப்படி? மக்கள் புதிய விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும் என நினைக்கிறார்கள். அறிவியலைக் கற்க வேண்டுமென விரும்புகிறார்கள். இப்போது நான் கூறுவது சற்று உணர்ச்சிகரமான வாசகங்களாக தோன்றலாம்.   உயிரியல் என்பது அழகானது. அதிலுள்ள உயிரினங்கள் போலவே நாமும்   உருவாகி வந்தவர்கள்தான். நம்மைப் பற்றிய அறிவியலும், நம்மைக் கடந்து பிற உயிரினங்களையும் பார்ப்பது சுவாரசியமான ஒன்று. பொதுவான அறிவியலாளர்களை விட ஹூயூபர்மன் லேப் பாட்காஸ்டிற்கு மக்கள் மத்தியில் நம்பிக்கை அதிகமாக உள்ளது. இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் இதை பாட்காஸ்ட் கேட்கும் நேயர்களிடம்தான் கேட்க வேண்டும். நான் இதற்கு காரணம் என நினைப்பது, மக்களிடம் நேரடியாக கருத்துகளை பகிர்வதுதான் என்பேன். ஆடியோவாக இருந்தாலும், செய்தி துணுக்காக இருந்தாலும் என்னுடைய அனுபவம் சார்ந்து அதை பேசுகிறேன். ஆழமான கவனித்தலின் அடிப்படையில் இருப்பதால், மக்கள் நம்பிக்கை கொள்கிறார்கள்

தனது கிராம மக்களுக்கு அறிவுபுகட்ட நூலகத்தை அமைத்த பேராசிரியர்!

படம்
  pixabay கிராம மக்களுக்காக நூலகம் அமைத்த பேராசிரியர்!  உத்தரப் பிரதேசத்தின் கல்யாண்பூரில் கிராம மேம்பாட்டு நூலகம் தொடங்கப்பட்டுள்ளது. இதனை இங்கிலாந்தின் நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் அருண்குமார் உருவாக்கியுள்ளார். அருணின் பூர்விக வீடு, இங்குதான் உள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், 750 நூல்களைக் கொண்ட நூலகத்தை கிராமத்தினருக்கு  அமைத்துக்கொடுத்துள்ளார். அருண், டில்லி பல்கலைக்கழகத்தில் படித்தபோது அங்கு முதல்முறையாக நூலகத்திற்கு சென்றார்.  அங்கு அடுக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நூல்களை பார்த்து வியந்திருக்கிறார். அதற்கு முன்பு வரை அவர் நூலகத்திற்கு சென்றதேயில்லை. அவரது கிராமத்திலும் நூலகம் அமைந்திருக்கவில்லை என்பதுதான் இதற்கு முக்கியமான காரணம்.  நூலகத்தைப் பயன்படுத்தும் மாணவர்களுக்கும் அவருக்கும் நிறைய இடைவெளி இருப்பதை உணர்ந்தார். “நூலக வாசிப்பு, மாணவர்களுக்கு பாடநூல்களைத் தாண்டி இலக்கிய அனுபவத்தையும் தரும் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன் ” என்றார் பேராசிரியர் அருண்குமார்.  கல்யாண்பூரில் தொடங்கிய கிராம நூலகத்திற்கு முன்னோடி,  பன்சா கிராம நூலகம் ஆகும்.   இந்த நூல

மத அடிப்படைவாதிகளால் ஏற்பட்ட உடல் வலியை விட நண்பர்களால் ஏற்பட்ட உள வலி பெரிது! - டிஜே ஜோசப்

படம்
  டிஜே ஜோசப்  எழுத்தாளர் 2010ஆம் ஆண்டு கேரளத்தைச் சேர்ந்த பேராசிரியர் டி.ஜே. ஜோசப் தேர்வுத்தாள் ஒன்றை தயாரித்தார். அதில் அவர் தேர்ந்தெடுத்த கேள்வி அவரது வாழ்க்கையை தலைகீழாக மாற்றியது. இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கம் இதற்காக அவரை பொதுவெளியில் கடுமையாக விமர்சித்தது. அந்த அமைப்பின் தொண்டர்கள் ஜோசப்பின் மணிக்கட்டை வெட்டி எறிந்தனர். அண்மையில் தனது சுயசரிதையை எழுதியிருக்கிறார். அதனை ந ந்தகுமார் மொழிபெயர்த்திருக்கிறார். இந்த நூலில் தனது மனைவி, வேலை, மணிக்கட்டை இழந்தது பற்றி உணர்ச்சிகரமாக எழுதியிருக்கிறார்.  உங்களது சுயசரிதை பிரசுரமானது தொடங்கி பரபரப்பாக விற்று வருகிறது. மலையாளத்தில் இந்த நூல் 2020ஆம் ஆண்டு வெளியானது.  இப்போது அதன் மொழிபெயர்ப்பு எ தவுசண்ட் கட்ஸ் ஏன் இன்னோசன்ட் கொசின்ஸ் அண்ட் டெட்லி ஆன்ஸ்ர்ஸ் வெளியாகயுள்ளது. என்ன தாக்கம் ஏற்படுத்தியுள்ளது என நினைக்கிறீர்கள்? மத அடிப்படைவாதம், தீவிரவாதம் ஆகியவைதான் என்மீது பதினொரு ஆண்டுகளுக்கு முன்னர் தாக்குதல் நடத்தப்பட காரணம். இன்று அதே தன்மை இயல்பானதாக பார்க்கப்படுகிறது.  என்னுடைய வாழ்க்கையைப் பார்க்கும் ஒருவர் தீவிரவாதம் பற்றிய கருத்தை இரண்டாவத

தடுப்பூசி விலை நிர்ணயித்தல் விவகாரத்தில் மத்திய அரசு தவறு செய்துவிட்டது! - அமர்த்தியா லகிரி

படம்
                அமர்த்தியா லகிரி பேராசிரியர் , பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம் பொதுமக்கள் மத்திய அரசின் தடுப்பூசி திட்டம் மீது நம்பிக்கை இழந்துள்ளனர் . ஏப்ரல் மாதத்தில் தடுப்பூசிகளை மாநிலங்கள் பெறும்படி மத்திய அரசு உத்தரவிட்டது விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது . இதில் என்ன பிரச்னை இருக்கிறது என்று நினைக்கிறீர்கள் ? இந்தியாவின் தடுப்பூதி திட்ட முறை கடுமையான தேக்கத்தை சந்தித்துள்ளது . தொடக்கத்திலேயே இந்திய அரசு தேவையான தடுப்பூசிகளை தயாரிக்க ஆர்டர் கொடுக்கவில்லை . இந்தியாவுக்கு இரண்டு பில்லியன் டோஸ்கள் மருந்து தேவை . இதில் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 12 சதவீதத்தினர் மட்டுமே முதல் டோஸ் மருந்தைப் பெற்றுள்ளனர் . அரசு இப்போதுதான் கோவிஷீல்டு மருந்திற்கான நூறு மில்லியன் டோஸ் ஆர்டர்களை அளித்துள்ளது . சீரம் இன்ஸ்டிடியூட்டின் மருந்து தயாரிப்புத் திறன் 700 மில்லியன் டோஸ்களாக உள்ளது . பாரத் பயோடெக் நிறுவனத்தின் திறன் 150 மில்லியன் டோஸ்களாக உள்ளது . இங்கு கூறியிருப்பது நிறுவனங்களில் ஆண்டு தயாரிப்பு . ஆனால் மத்திய அரசு பற்றாக்குறையைப் போக்க மருந்துகளை இறக்குமதிசெய்வதற்கான முயற்