இடுகைகள்

சாவர்கர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தேசியவாதத்தின் தந்தைகள் உருவானது இப்படித்தான்!

படம்
மொழிபெயர்ப்பு நேர்காணல் பேராசிரியர். சுனில் பி இளையிடோம் கேரளத்தின் முக்கியமான கலாசார விமர்சகர் சுனில், எழுதுவதை விட இவரின் பொதுமேடைப் பேச்சு அனைத்து மக்களாலும் ரசிக்கப்படுகிறது. இவரின் முக்கியமான படைப்பு  political unconsciousness of Modernism .  மார்க்சியத்தை புகழ்ந்து மட்டும் பேசாமல் அதன் பிரச்னைகளை பட்டென போட்டு உடைப்பதோடு அண்மையில் பாஜக முன்னெடுத்து வரும் தேசியவாத வரலாறு, நாராயணகுரு என பொதுமேடையில் அசத்தலாக பேசிவருகிறார். இசை, இலக்கியம், நடனம் என்பதைத் தாண்டி தேசியவாதம், அதன் வரலாறு வரை பேசுகிறீர்கள். உங்களது எழுத்திலும் பேச்சிலும் கூட தத்துவத்தின் சாயல் உள்ளது. எப்படி இப்படி ஒரு பாணியை பிடித்தீர்கள்.  கலாசார வரலாற்றில் நவீனத்தன்மையை ஆராய்வதே என்னுடைய பாணி. நான் இதுவரை செய்த ஆராய்ச்சிகளை இம்முறையில் செய்துள்ளேன். ஒரே ஒரு கருத்தை எடுத்துக்கொண்டு அதை  நோக்கியே எழுதவேண்டும் பேசவேண்டும் என்பதில்லை. மார்க்சும் இம்முறையில் எதையும் வலியுறுத்தியவரில்லை. நான் கைக்கொள்ளும் முறையில் தத்துவத்தில்  சிக்கிக்கொள்ளும் வாய்ப்பும் உள்ளதால், நான் இம்முறையை அனைவருக்கும் பரிந்துரைக்க