இடுகைகள்

தனியார்மயம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சாதனை செய்யும் நவரத்னா நிறுவனங்கள் பற்றி அறிந்துகொள்வோம்!

படம்
  சாதனை செய்யும் நவரத்னா நிறுவனங்கள் நாளிதழ்களை படிக்கும்போது சில அரசு நிறுவனங்களின் விளம்பரங்களைப் பார்த்திருப்பீர்கள். நிறுவனத்தின் பெயருக்கு கீழே நவரத்னா விருது பெற்றது என்று அச்சிட்டிருப்பார்கள். பல்வேறு நிறுவனங்கள், தங்களின் சிறப்பான செயல்பாட்டிற்காக விருதுகளைப் பெறுகிறார்கள். குறிப்பிட்ட நிறுவனங்கள் மட்டும் அப்படி விருது பெற்றது என்று குறிப்பிடுவது எதற்கு என யோசித்திருக்கிறீர்களா? பொதுத்துறை நிறுவனங்களை இந்திய அரசு மூன்று பிரிவாக பிரிக்கிறது. மினிரத்னா, நவரத்னா, மகாரத்னா.  இவற்றை அவற்றின் மதிப்பு, வருமானம், பங்குச்சந்தை மதிப்பு ஆகியவற்றைப் பொறுத்து வகைப்படுத்துகிறார்கள். இதில், செபி அமைப்பின் விதிமுறைகளையும் பின்பற்றுகிறார்கள். மினிரத்னா மினி ரத்னா நிறுவனங்கள் இரண்டு வகையாக பிரிக்கப்படுகின்றன. பிரிவு 1 இல் உள்ள நிறுவனங்கள் மூன்று ஆண்டுகளுக்கு சிறப்பான லாபத்தைப் பெற்று இருக்கவேண்டும். அவை சார்ந்த தொழில்துறையில்  500 கோடி ரூபாய் முதலீட்டைப் பெற்றிருக்கவேண்டும்.  பிரிவு 2 இல், நிறுவனங்கள் மூன்று ஆண்டுகளுக்கு குறிப்பிட்ட இலக்கிலான லாபத்தை பெற்றிருக்கவேண்டும். தற்போது இந்தியாவில் மினி

மத்திய பட்ஜெட் 2021-22 டேட்டா கார்னர்

படம்
            மத்திய அரசு தனது பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது . இதன் விசேஷன் அதன் அம்சங்களை விட தாக்கல் செய்யப்பட்ட முறையில் உள்ளது . இதுதான் இந்தியாவின் முதல் காகிதமற்ற பட்ஜெட் . நிதிநிலை அறிக்கை தொடர்பான அனைத்து தகவல்களையும் மொபைல் செயலி மூலமே பெற முடியும் . பட்ஜெட்டை அச்சிடுவது கொரோனா காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது . இதனால் நிர்மலா சீதாராமன் கூட டேப்லெட்டில் பட்ஜெட்டை வைத்திருந்தார் . இதிலுள்ள முக்கியமான அம்சங்களை மட்டும் இப்போது பார்ப்போம் . சுகாதாரம் 2,23, 846 கோடி நீர் , சுகாதாரத் திட்டங்களுக்காக இத்தொகை செலவிடப்படுகிறது . கடந்த ஆண்டை விட 137 சதவீதம் அதிகம் . சந்தையில் பெறும் நிதி 9,67,708 சந்தையில் பற்றாக்குறைக்காக பெறவிருப்பதாக அரசு சொன்ன தொகை இது . கடந்த ஆண்டை விட 137 சதவீதம் இத்தொகை அதிகரித்துள்ளது . பணப்பற்றாக்குறை சதவீதம் 6.8 சதவீதம் நடப்பு ஆண்டில் பணப்பற்றாக்குறை சதவீதம் 9.5 ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது . காப்பீட்டுத்துறையில் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடு 74 சதவீதமாக உள்ளது . சிறுகுறு தொழில்துறைக்கான ஒதுக்கீடு 15,7

இந்திய ரயில்வே விரைவில் தனியார்மயம் ஆகிறது! - டேட்டா கார்னர்

படம்
ரயில்வே தனியார்மயம் - வினவு ரயில்கள் தனியார்மயம்! விரைவில் 151 ரயில்கள் இந்தியாவில் தனிப்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சொந்தமாக செலுத்தப்படவிருக்கின்றன. இதற்கென 109 வழித்தடங்கள் இந்திய ரயில்வேயால் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஒரு ரயிலில் குறைந்தபட்சம் 16 கோச்சுகள் இணைக்கப்பட்டிருக்கும். 12 முனையங்களிலிருந்து ரயில்கள் இயக்கப்படும் வாய்ப்பு உள்ளது. ரயில்களின் வேகம் 160 கி.மீ. என திட்டமிடப்பட்டுள்ளது. ரயில்கள் தனியார்மயம் ஆவதால், இத்துறையில் 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு கிடைக்கும் என மத்திய அரசு எதிர்பார்க்கிறது. ஜூலை 1, 2020 ரயில்களை இயக்க முன்வரும் நிறுவனங்களை தேர்ந்தெடுப்பதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. நவ – டிச. 2020 ஏலத்தொகை அடிப்படையில் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்படும். ஏப்ரல் 2021 ஒப்பந்தம் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் ஏப்ரல் 2023 தனியார் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் ரயில்கள் இயங்கத் தொடங்கும்.  எகனாமிக் டைம்ஸ்

அரசின் இயந்திரத்தில் தேசியவாத இஞ்சின் மட்டுமே இயங்குகிறது!

படம்
நேர்காணல் வளர்ச்சி இல்லாத தேசியவாதம் கேலிக்கூத்தானது முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், மாநிலங்கள்அவை உறுப்பினருமான ஜெய்ராம் ரமேஷ் அவர்கள், ஆட்சியில் இருந்தபோதும், இல்லாதபோதும்  தன் மனதில் தோன்றிய கருத்துகளை வெளிப்படையாக முன் வைக்க கூடியவர். அவரிடம் பேசினோம். தற்போதைய பொருளாதார மந்தநிலையைப் பற்றி என்ன சொல்லுகிறீர்கள்? பாஜக அரசு, தன் பட்ஜெட்டின்போதே மக்களின் எதிர்ப்பைச் சந்தித்தது. இப்போது கார்ப்பரேட் நிறுவன வரிவிதிப்பைக் குறைத்தபின்னும் மக்களின் எதிர்ப்பு குறையவில்லை. இந்த வரி குறைப்பு ஐந்து அல்லது பத்து ஆண்டுகள் கழித்தால்தான் பலன் கொடுக்கும். இதுவும் கூட யூகம்தான். மக்களின் தேவை என்பது இன்று குறைந்துவிட்டது. முதலீடு, ஏற்றுமதி ஆகியவை ஏறத்தாழ தேக்கமடைந்துவிட்டன. அரசின் வாகனத்திலுள்ள ஒரே இயக்கம் கொண்ட இஞ்சின் தேசியவாதம் மட்டுமே. அதுவும் கூட பொருளாதார வளர்ச்சியைக் கொடுக்கவில்லை. காங்கிரஸ் இதற்கு மாற்றான தீர்வாக என்ன வைத்திருக்கிறது? காங்கிரஸ் கட்சி எப்போதும் மக்களுக்கு ஆதரவான பொருளாதார முடிவுகளை எடுத்து வந்தது. அரசிடம் இருக்கும் பொதுத்துறை நிறுவனங்களில் முதலீடுகள்

ரயில்வே உள்வாடகைக்கு விடப்படும்!

படம்
அரசு தற்போது பராமரித்து நஷ்டத்துடன் நடத்தி வரும் ரயில்வே துறை விரைவில் தனியார்களுக்கு வாடகைக்கு விடப்படவிருக்கிறது. இதற்கான ஏலம் நடைபெறவிருக்கிறது. தற்போது முதல்கட்டமாக குறிப்பிட்ட சுற்றுலா தல ரூட்டுகள் மட்டும் ஏலம் விடப்படவிருக்கின்றன. ஐஆர்டிசியில் வழங்கப்படும் டிக்கெட்டுகளின் கட்டணங்களும் இனி மாற்றப்படும் வாய்ப்பு உள்ளது. தனியார்களின் கையில் ரயிலின் இயக்கம் செல்லும்போது, அரசு விதிக்கும் கட்டணம் மாற்றப்படும் என்பதை சொல்லவேண்டியதில்லை. இதில் சாதுரியமாக மானியத்துடன், மானியம் இல்லாமல் என இருமுறைகளில் டிக்கெட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு கூறியுள்ளது. அடிப்படை வசதிகளை செய்து தராமல், வேறு தனியார் நிறுவனங்கள் இருந்தால் அனைத்தும் சரியாக நடக்கும் என்று எண்ணத்தை உருவாக்குவது அரசின் தந்திரம். இதனை அரசு போக்குவரத்து, அரசு சேவைகள் அனைத்திலும் பார்க்கலாம். இனி சென்னை - கோவை ரூட் ஒரு நிறுவனம், ஹைதராபாத் - சென்னை என பல்வேறு ரூட்டுகளை தனியார் நிறுவனங்கள் ஏலத்தில் ஜெயித்து நடத்த முன்வரலாம். இதன் விளைவாக டிக்கெட் விலை, பேருந்து விலையைப் போலவே மாறுவதோடு நிறுத்தங்களில் நிறுத்தும்