இடுகைகள்

சமூக மாற்றம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சமூக மாற்றம் ஏற்படுத்திய படங்கள் - கிங் ரிச்சர்ட், சக்தே இந்தியா, இறுதிச்சுற்று, ராட்சசி, தங்கல்

படம்
              சமூக மாற்றம் ஏற்படுத்திய திரைப்படங்கள் தாரே ஜமீன் பர் அமோல் குப்தா தனது ஓவிய ஆசிரியரை மனதில் வைத்து படத்தில் வரும் பாத்திரத்தை உருவாக்கியிருந்தார். படத்தில் டிஸ்லெக்சியா குறைபாடு கொண்ட சிறுவன் இருப்பான். அவனுக்கு ஓவியத்திறமை இருக்கும். அதை பள்ளியில் உள்ள கலை ஆசிரியர் ராம் சங்கர் நிகும்ப் கண்டறிந்து அவனை ஊக்கப்படுத்துவார். படம், அறிவுசார் குறைபாடு கொண்டவர்கள், மாற்றுத்திறனாளிகளை நாம் எப்படி பார்க்கிறோம், எப்படி நடந்துகொள்கிறோம் என்பதை காட்சிபடுத்தி குற்றவுணர்வுக்கு ஆளாக்கியது. ஹிச்கி இதில் ஆசிரியர் பாத்திரத்தை ராணி முகர்ஜி ஏற்றிருந்தார். குறும்பான மாணவர்களின் திறமையை வெளியே கொண்டு வருவதுதான் படத்தின் மையக்கதை. இதில் பிரச்னை என்பது பள்ளியில் உள்ள குறும்பான மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியருகே டூரெட் சிண்ட்ரோம் பாதிப்பு இருக்கும். இந்த குறைபாடு உள்ளவர்கள் பேசுவதில் உடல் மொழியில் வினோத செய்கைகள் இருக்கும். இதோடு ராணிக்கு அவரது அப்பாவுடன் உறவு சீராக இருக்காது. இதையெல்லாம் படம் பேசி ரசிகர்களை கவர்ந்தது. சூப்பர் 30 கணித ஆசிரியர்  ஆனந்த் குமார் பற்றிய படம். நாயகன் பாத்திரத்தை ஹிரித்திக