இடுகைகள்

வாசிப்புவட்டம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தனிமைதான் குடிக்கு முக்கியமான காரணமா? - கடிதங்கள் - வினோத் பாலுச்சாமி

படம்
  அன்புள்ள  வினோத் அண்ணாவுக்கு, வணக்கம். நலமா? இந்த வாரம் வடபழனியில் உள்ள ஃபாரம் மாலுக்கு போனோம். நானும் மோகன்ராஜ் அண்ணாவும்தான் கூட்டணி. அங்குள்ள ஸ்பார் மார்க்கெட்டில் புத்தாண்டு டைரிகளை குவித்து வைத்துவிட்டனர். நான் டைரியை வாங்கவில்லை. வாங்கி எழுதுவதில்லை. பிறகு வாங்கி என்ன செய்வது என கர்ச்சீஃப், நோட்பேட் ஆகியவற்றை வாங்கினேன். அறையில் சமையல் செய்வது இல்லை. எனவே, பொருட்களை கெட்டுப்போகும் முன்னரே, அலுவலக சகா ஒருவருக்கு இலவசமாக கொடுத்துவிட்டேன். அவர் திருவல்லிக்கேணியில் உள்ள மேன்ஷனில் தங்கி அலுவலகம் வருகிறார்.  கொலைகுத்தாக வாசிப்பு வட்டம் நடத்தி என்னை மாட்டிவிட்ட நண்பர், வெட்கம், கூச்சமே இல்லாமல் விழா எப்படி என போன் செய்து கேள்வி கேட்டார்.  கொடுமை என்பதுதான் எனது மனக்குரல்.  ஆனால் என்ன செய்வது? மனதை மாற்றிக்கொண்டு பிரமாதம் என பொய்யை சொல்லிவிட்டேன். மனமகிழ்ந்து போய்விட்டார் அந்த நண்பர்.  முஸ்லீம்களின் வாழ்க்கையை மட்டுமே எடுத்து பேசிக்கொண்டிருப்பதில் வாசகர் வட்டம் என்று சொல்லி பொதுவான ஆட்களை வரச்சொல்லுவதில் என்ன அர்த்தம் இருக்கப்போகிறது? வாசிப்பு வட்டத்தை மசூதிக்குள்ளேயே நடத்திக்கொள்ளலாமே