தனிமைதான் குடிக்கு முக்கியமான காரணமா? - கடிதங்கள் - வினோத் பாலுச்சாமி

 



















அன்புள்ள  வினோத் அண்ணாவுக்கு, வணக்கம்.

நலமா? இந்த வாரம் வடபழனியில் உள்ள ஃபாரம் மாலுக்கு போனோம். நானும் மோகன்ராஜ் அண்ணாவும்தான் கூட்டணி. அங்குள்ள ஸ்பார் மார்க்கெட்டில் புத்தாண்டு டைரிகளை குவித்து வைத்துவிட்டனர். நான் டைரியை வாங்கவில்லை. வாங்கி எழுதுவதில்லை. பிறகு வாங்கி என்ன செய்வது என கர்ச்சீஃப், நோட்பேட் ஆகியவற்றை வாங்கினேன். அறையில் சமையல் செய்வது இல்லை. எனவே, பொருட்களை கெட்டுப்போகும் முன்னரே, அலுவலக சகா ஒருவருக்கு இலவசமாக கொடுத்துவிட்டேன். அவர் திருவல்லிக்கேணியில் உள்ள மேன்ஷனில் தங்கி அலுவலகம் வருகிறார். 

கொலைகுத்தாக வாசிப்பு வட்டம் நடத்தி என்னை மாட்டிவிட்ட நண்பர், வெட்கம், கூச்சமே இல்லாமல் விழா எப்படி என போன் செய்து கேள்வி கேட்டார்.  கொடுமை என்பதுதான் எனது மனக்குரல்.  ஆனால் என்ன செய்வது? மனதை மாற்றிக்கொண்டு பிரமாதம் என பொய்யை சொல்லிவிட்டேன். மனமகிழ்ந்து போய்விட்டார் அந்த நண்பர்.  முஸ்லீம்களின் வாழ்க்கையை மட்டுமே எடுத்து பேசிக்கொண்டிருப்பதில் வாசகர் வட்டம் என்று சொல்லி பொதுவான ஆட்களை வரச்சொல்லுவதில் என்ன அர்த்தம் இருக்கப்போகிறது? வாசிப்பு வட்டத்தை மசூதிக்குள்ளேயே நடத்திக்கொள்ளலாமே? பொது ஆட்களாக பங்கேற்ற என்னைப் போன்றோருக்கு சல்லிப்பைசா பிரயோஜனமில்லை.ஞாயிற்றுக் கிழமை இரண்டு மணிநேரம் என் நினைவுக்கு தெரிந்தே வீணாகிப்போனது. 

சூசைட் ஸ்குவாட் படம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். படத்தில் கம்ப்யூட்டர் போல ரத்த த்தை தெறிக்க விட்டிருக்கிறார்கள். தாரகை நாவல் இன்னும் நூறு பக்கங்கள் பாக்கி உள்ளது. நூலை சுவாரசியமான முறையில் ரா.கி. ரங்கராஜன் எழுதியுள்ளார். முழுக்க வெளிநாட்டில் நடக்கும் கதை என்பதுதான் நாம் அறியவேண்டியது.  இன்று அலுவலகத்தில் உள்ள  கிறிஸ்தவ நண்பர்கள், பிளம் கேக்குகளாக கொடுத்து திணறடித்து விட்டனர். ஒரு துண்டு பிளம் கேக் மெக்ரெனட்டில் ரூ.33. இப்படியும் வியாபாரம் செய்கிறார்கள். நன்றி!

அன்பரசு 





அன்புள்ள வினோத் அண்ணாவுக்கு, வணக்கம். 

நலமா?

சில ஆண்டுகளுக்குப் பிறகு இன்றுதான் சாப்பாட்டிற்கு வழங்கிய அப்பளம் ஒன்றை முழுதாக சாப்பிட்டேன். திருவண்ணாமலை வந்திருந்தபோது, இறைச்சி சாப்பிடும் எண்ணம் கிடையாது. ஆனால் செஞ்சி கோட்டை ஏறி இறங்கியபிறகு,உ டல் வலி தாங்கமுடியவில்லை. அதிலிருந்து விடுதலை பெற இறைச்சி உதவும் என நினைத்தேன். எனவே, கோழி இறைச்சியை நானே வாங்கிக் கொடுத்து ஆலிவர் அண்ணாவை சமைக்கச் சொன்னேன். ஆனால் நான் தொடர்ச்சியாக இறைச்சி சாப்பிடும் செரிமானத் திறன் கொண்டவனல்ல. 







ஆலிவர் அண்ணா, எனக்கு போன் செய்தார். 500 ரூபாய் கடன் கேட்டார். நான் என்னுடைய புகைப்படம் எடுத்ததால் இருநூறு ரூபாய் தருவதாக சொன்னேன். கூடவே நூறு ரூபாய் சேர்த்து அனுப்பினேன்.  அவர் தினசரி மது அருந்துகிறார். அதைப்பற்றி எனக்கு எந்த விமர்சனமும் இல்லை. ஆனால், அதற்கு தனிமைதான் காரணம் என கூறுவது வினோதமாக இருக்கிறது. அவர் மனதில் ஏதோ துயரத்தைத் தேக்கி வைத்துக்கொண்டு இருப்பதுபோல இருக்கிறது. நான் அவரிடம் பழகியது இருநாட்கள்தான். எனவே, முறையாக அவர் சொல்லுவதற்கு முன்னரே தூரம் தள்ளி நிற்பதே சரி என நினைக்கிறேன். இனிதான் உங்களிடம் பெற்ற கடிதங்களை டிஜிட்டல் வடிவில் எழுத வேண்டும். 

ஆலிவர் அண்ணாவிடம் இரவல் வாங்கிய தெருக்களே பள்ளிக்கூடம் என்ற நூலை படித்து முடித்தேன். 203 பக்க நூல் ரூ. 200. ஜூன் 1995 முதல் ஜூன் 1996 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ராகுலின் பயணம்தான் நூலின் மையப் பொருள். சூழலியல் உலகு பற்றி நிறைய தெரிந்துகொள்ளும் அவர், அதுபற்றி தனது நாட்குறிப்பிலும் பதிந்திருக்கிறார். அவையெல்லாம் சேர்ந்துதான் ஆங்கிலத்தில் ஃப்ரீ ஃபிரம் ஸ்கூல் எழுதப்பட காரணம். நன்றி! 

அன்பரசு 

20.1.2022

--------------------------
pinterest

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்