இடுகைகள்

. முருகானந்தம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நம்பிக்கை தரும் மொபைல் நிறுவனத்தின் கதை! - கடிதங்கள்

படம்
  அன்புள்ள முருகு அவர்களுக்கு, வணக்கம். நலமா? சீன மொபைல் நிறுவனமான ஹூவெய் பற்றிய நூலை படித்து முடித்துவிட்டேன். பீடிஎப் நூலை முழுக்க போனிலேயே படித்துவிட்டேன். நூலின் பக்கங்கள் 300. ஹூவெய் நிறுவனம் எப்படி உருவானது, அதன் நிறுவனர் என்ன நோக்கத்திற்காக நிறுவனத்தை உருவாக்கினர், அதற்கும் பிற நிறுவனங்களுக்குமான வேறுபாடு, சந்தையில் எப்படி தாக்குபிடித்தனர், அதன் கொள்கைகள் என ஏராளமான விஷயங்களை பற்றி பேசி இருக்கிறார்கள். நம்பிக்கை தரும் நூல் எனலாம்.  அடுத்து தொழில்நுட்பம் சார்ந்த நூலை படிக்க நினைக்கிறேன். நாகரிகங்களின் பண்பாடு ஏராளமான மேற்கொள்களுடன் எழுதப்பட்டு உள்ளது. வேகமாக படிப்பதில் சிரமம் உள்ளது. ஏராளமான சம்பவங்களை குறிப்பிட்டு நூலின் அத்தியாயங்கள் நகர்கின்றன.  டிஸ்கோ ராஜா என்ற தெலுங்குப்படம் பார்த்தேன். அறிவியல் சமாச்சாரங்களைக் கொண்ட கேங்க்ஸ்டர் படமாக வந்திருக்கிறது. தமிழ் வசனங்களும் உண்டு. கதையில் வரும் பாத்திரங்களோடு கிளைமேக்ஸ் சுவாரசியமாக உள்ளது. தமனின் இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு பெரும் பலம்.  எங்கள் பத்திரிகையில் வேலை பார்க்கும் பலரும் இதுவரை எழுதிய நூல்களை கிண்டிலில் பதிவு செய்யத்