இடுகைகள்

பசுமை பேச்சாளர்கள் தொடர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பசுமை பேச்சாளர்கள் இறுதிபகுதி!

படம்
பசுமை பேச்சாளர்கள் 55 ச . அன்பரசு ஆலவ் கர்ஸ்டாட் நார்வே ஆயில் நிறுவனமான ஸ்டேட் ஆயிலில் பணிபுரியும் ஆலவ் கர்ஸ்டாட் , கார்பன் டை ஆக்சைடு வாயுவை சேமிப்பதில் உலகின் முன்னணி வல்லுநர்களில் ஒருவர் . மின்நிலையங்களில் வெளியிடப்படும் கார்பனை குழாய் மூலம் சேமித்து அதனை திரவ வடிவாக்கி ஆழ்கடலிலுள்ள பாறைகளில் செலுத்துவது இவரின் திட்டம் . 90 சதவிகித கார்பன் வெளியீட்டை குறைக்கும் இத்திட்டத்திற்கு பல மில்லியன் செலவு என்றாலும சூழல் பாதுகாக்கப்படுவதை முக்கியமாக கருத்தாக இதில் வலியுறுத்துகிறார் ஆலவ் கர்ஸ்டாட் . கார்மேக் மெக்கார்த்தி 1933 ஆம் ஆண்டு பிறந்த புலிட்சர் பரிசு வென்ற எழுத்தாளர் , சூழல் குறித்த கவனம் கொண்டுள்ளவர் . தன் கதைகளில் வசனங்களுக்கு மேற்கோள் குறிகளைப் பயன்படுத்தாமல் எழுதுபவர் , டைம் உள்ளிட்ட பல்வேறு இதழ்களின் பாராட்டுகளை தன் எழுத்திற்காக பெற்றவர் . பீட்டர் ஹெட் கட்டுமான பொறியாளரான பீட்டர் ஹெட்   Ecological Sequestration Trust   அமைப்பைத் தொடங்கி பசுமைக் கட்டி

ஜெர்மனை பசுமையாக்கிய ஹெர்மன் ஷீர்!

படம்
பசுமை பேச்சாளர்கள் ஹெர்மன் ஷீர் ச . அன்பரசு ஜெர்மனியின் சமூக ஜனநாயக கட்சி உறுப்பினராக செயல்பட்டு மறைந்த ஹெர்மன் ஷீர் (1944-2010), அணுஉலைகளுக்கு மாற்றாக புதுப்பிக்கும் ஆற்றல்முறைகளை அரசு கைக்கொள்ளவேண்டும் என்று பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்ட சூழல் ஆளுமை . தற்போது மூன்று சதவிகிதத்திற்கும் அதிகமாக மின்சாரம் சூரியனிலிருந்து பெறப்பட்டு வருவதற்கும் , மக்களிடமிருந்து தனியார் மின்சார நிறுவனங்கள் மார்க்கெட் விலையில் மின்சாரத்தை வாங்குவதற்கும் ஹெர்மன் ஷீர் எடுத்த முயற்சிகள் முக்கியமானவை . போர்ச்சுக்கல் , ஸ்பெயின் , க்ரீஸ் , பிரான்ஸ் , இத்தாலி ஆகிய நாடுகள் ஹெர்மனின் ஆற்றல் கொள்கையை பின்பற்றும் முயற்சியைத் தொடங்கியுள்ளன . 1999 ஆம் ஆண்டு ஹெர்மன் ஏற்படுத்திய German feed-in tariffs என்ற திட்டம் பின்னாளில் புதுப்பிக்கும் ஆற்றல் ஆதாரங்களில் அரசு முதலீடு செய்வதற்கான நிர்பந்தத்தை ஏற்படுத்தியது . தன் ராணுவப்பணியை நிறைவு செய்த ஹெர்மன் 1965 ஆம் ஆண்டு சமூக ஜனநாயக கட்சியில் இணைந்தார் .  ஹெய்டல்பெர்க் பல்கலையில் பொருளாதாரமும் சட்டமும் படித்த ஹெர்மன் , அரசியல் அறிவியலில் டாக்டர் பட

மக்களின் வீடற்ற நிலைக்கு அரசுதான் காரணம் - ஜோக்கின் அற்புதம்

படம்
பசுமை பேச்சாளர்கள்  ஜோக்கின் அற்புதம் ச . அன்பரசு 1963 ஆம் ஆண்டிலிருந்து மும்பையின் குடிசைப்பகுதியில் வசித்து வரும் ஜோக்கின் அற்புதம் , தேசிய குடிசைவாசிகளின் சங்கத்தின் தலைவராகவும் செயல்பட்டு அங்கு ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க தளர்வுறாமல் செயல்பட்டுவருகிறார் . வறுமை , அரசியல் சமச்சீரின்மை ஆகியவற்றால் 2030 ஆம் ஆண்டு குடிசைவாழ் மக்களின் அளவு 2 பில்லியன் அளவுக்கு அதிகரிக்கும் என தகவல் தெரிவிக்கிறார் ஜோக்கின் அற்புதம் . 1947 ஆம் ஆண்டு கர்நாடாகவிலுள்ள கோலாரில் தமிழ்நாட்டுப் பெற்றோருக்கு பிறந்த ஜோக்கின் அற்புதம் , கார்பென்டராகவும் , பின்னர் பணி ஒப்பந்ததாரராகவும் பணியாற்றினார் . தாங்கள் வாழ்ந்த ஜனதா காலனியை அரசு அகற்ற முயற்சித்தபோது அதற்கு எதிராக போராடியதுதான் ஜோக்கின் அற்புதத்தின் முதல் போராட்டம் . பின்னர் குடிசைவாழ் மக்களுக்கான நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக போராடியவர் ஐம்பதுக்கும் மேற்பட்ட முறை காவல்துறையால் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டுள்ளார் .  " நாங்கள் வாழ்வது குடிசைப்பகுதி என்பதாலேயே , எங்கள் மீது திருடன் , ஒழுக்கமில்லாதவன் என அரசு உள்பட பல்வேறு அமைப்புகள

இயற்கையைவிட இன்ஸ்பிரேஷன் வேறென்ன இருக்கிறது? - கென்யாங்

படம்
பசுமை பேச்சாளர்கள் கென் யாங் ச . அன்பரசு உலகின் புகழ்பெற்ற பசுமை கட்டிட பொறியாளரான   கென்யாங் , தன் கட்டுமானத்தில் 30 சதவிகித ஆற்றலை சேமிக்கும்படி கட்டிடங்களை திட்டமிட்டு கட்டி வருகிறார் . அதிநுட்ப காற்றுவசதி , சன்ஷேடுகள் , தாவர சுவர்கள் என பயன்படுத்தி கட்டிடங்களை அழகோடு அலங்கரிக்கும் வழக்கம் கொண்டவர் இவர் . " உலகில் இயற்கையைவிட எனக்கு வேறு எதுவும் இன்ஸ்பிரேஷனே கிடையாது " என்பவர் ஈகோ டிசைன் என்ற வார்த்தையை கட்டுமானத்துறையில் பிரபலமாக்கினார் . மலேசியாவின் பினாங்கில் 1948 ஆம் ஆண்டு பிறந்த கென் யாங் , 1971 ஆம் ஆண்டிலிருந்து பசுமை கட்டிடங்களை கட்டி வருகிறார் . மலேசியா , லண்டன் , சீனா ஆகிய இடங்களில் கென் தனது கட்டுமான நிறுவன அலுவலகங்களை திறந்துள்ளார் . பினாங்கு ஃப்ரீ ஸ்கூலில் படித்து , பின்னர் செல்ட்டன்ஹாம் கல்லூரியில் பட்டம் பெற்றார் . லண்டன் ஆர்க்கிடெக்ச்சர் கல்லூரியில் வடிவமைப்பு பட்டம் வென்ற கென் , உலகிலுள்ள 12 உயரமான கட்டிடங்களை கட்டியுள்ளதோடு , முப்பதிற்கும் மேற்பட்ட நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களிலும் உரையாற்றியுள்ளார் . எ . கா . இலினாய்ஸ