இடுகைகள்

பயணி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மறந்துபோன சீனப்பயணி

சீனாவின் மிகப் பெரும் நாடுகாண் பயணியின் மறக்கப்பட்ட மரபு 15ஆம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில், சீனாவின் அரசவையைச் சேர்ந்த ஒரு அரண்மனை அதிகாரி, தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்தியப் பெருங்கடல் முழுவதும் ஏழு மகத்தான கடற்பயணங்களை மேற்கொண்டார், மேற்கில் செங்கடல் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கக் கரைகள் வரை சென்றடைந்தார். இந்தப் பயணங்கள் பொறியியல் மற்றும் கப்பற்பயணத்தின் அற்புதமான சாதனைகளாகும். கிறிஸ்டோபர் கொலம்பஸ் அல்லது வாஸ்கோ ட காமாவைவிட பல தசாப்தங்களுக்கு முன்னரே பயணத்தைத் தொடங்கிய ஜெங், 200 கப்பல்கள் கொண்ட பிரம்மாண்டக் கடற்படையின் தலைமையில் பல ஆண்டுகள் கடல்களைக் கடந்து பயணம் செய்தார். அந்தக் கப்பல்களில் சில 70 மீட்டர் நீளம் வரை இருந்தன — அது கொலம்பஸின் கப்பல்களைவிட மூன்று மடங்கு பெரியது. பலருக்கு, ஜெங் வரலாற்றின் மிகச் சிறந்த நாடுகாண் பயணிகளில் ஒருவராக தகுதி பெறுகிறார். ஆயினும், அந்தப் பயணங்களைப் பற்றியும், ஜெங்கைப் பற்றியும் அதிகம் மர்மமாகவே உள்ளது. சீனாவின் மிங் வம்ச (1368–1644) அதிகாரப்பூர்வப் பதிவுகளில் அவர் அரிதாகவே இடம்பெறுகிறார்; அரசவை வரலாற்றாசிரியர்கள் அவரது பயணங்களை ஈர்க்கக்கூடியவை எ...

சீனமொழியின் அடிப்படை வாக்கியங்களை கற்றுத்தரும் நூல்!

படம்
 சீனமொழியில் உள்ள 21 எளிய வாக்கியங்கள் பயணிதரன் பயணி.காம் பக்கம் 70 இலவச நூல் இந்த நூலை பயணி.காமில் மின்னஞ்சல் முகவரி பதிந்து தரவிறக்கி படித்தது. எழுத்தாளர் பயணி சீனமொழி கற்று அங்குள்ள இலக்கியங்களை தமிழில் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சீனமொழி கற்கவென தனி நூல்களை எழுதி வருகிறார். அந்த வகையில் இந்த நூல் சீனமொழிக்கான அறிமுக நூலென்று கூறலாம்.  சீனமொழி கற்பதற்கான அடிப்படை இலக்கண, இலக்கியங்களை பயணி கற்றுத்தரவில்லை. அவர் பொதுவாக உரையாடலுக்கான எளிய நூலை எழுதியிருக்கிறார். மும்பை நாயகிகள் தமிழை இந்தியில் எழுதி வைத்து பேசுகிறார்களே அதுபோல, கொச்சையாக இருந்தாலும் தமிழ் வருகிறதே போதுமல்லவா? அதுபோலத்தான் நீ ஹாவ் என்பது உச்சரிப்பு எப்படி இருந்தாலும் அதை சொன்னாலே சீனர்கள் புரிந்துகொண்டு வேற்று நாட்டவர் என்ற வேற்றுமையை விரோத உணர்வை சற்று தளர்த்திக் கொள்வார்கள்.  பயணி எழுதியுள்ள நூலை ஒருவர் வாசிப்பதன் வழியாக நடைமுறை ரீதியாக கிடைக்கும் நன்மை, அடிப்படையான விஷயங்களை எப்படி கேட்பது, பதில் பெறுவது, அதற்கு நன்றி சொல்வது, பிறகு விடைபெற்றுச்செல்வது ஆகியவற்றை தெரிந்துகொள்வதுதான். எனவே, இலவச நூல்...