இடுகைகள்

பாலுறவு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்படும் காந்தி- வரிசைப்படுத்தப்படும் அரசியல், அந்தரங்க தவறுகள்

படம்
  காந்தியை இன்று பின்தொடர்பவர்கள் இருவகையாக உள்ளனர் . காந்தியவாதிகளாக நூல்களில் காந்தியைப் பற்றிய கருத்துகளைப் படித்துவிட்டு அவரைப் பின்பற்றுபவர்கள் . அடுத்து , காந்தியின் புனித தன்மை மனதை குற்றவுணர்ச்சிக்கு உள்ளாக்க , அவரை தனிப்பட்ட வாழ்க்கை , அரசியல் என இரண்டிலும் உள்ள தவறுகளை எடுத்து அதனை விமர்சித்து வருபவர்கள் . காந்தியைப் பின்பற்றுபவர்களை விட அவரை விமர்சிப்பவர்களே இன்றும் அவரை உயிரோடு வைத்திருக்கிறார்கள் . இல்லையென்றால் ஒருவர் இறந்து 150 ஆம் ஆண்டுகளாகியும் கூட ஒருவரைப் பற்றி பேசி விவாதித்துக்கொண்டிருக்க முடியுமா ? காந்தி தலித்துகளுக்கு தனி தொகுதிகள் கூடாது என்று கூறியது உண்மை . உண்மையில் அவர் அப்படிக்கூறியது , இந்தியா எதிர்காலத்தில் பிளவுபட்டு போகக்கூடாது என்ற நோக்கில்தான் . காந்தி , அம்பேத்கரின் பேச்சு , எழுத்துகள் மூலமாகவே தலித்துகளின் பிரச்னைகளை ஆழமாக புரிந்துகொண்டார் . கிறிஸ்துவம் , சமணம் , இந்து ஆகிய மதங்களின் நூல்களை காந்தி படித்துள்ளதால் , அவை பற்றிய அறிவு காந்திக்கு உண்டு . அம்பேத்கர் , அதிகாரங்கள் மத்திய அரசிடம் இருக்கவேண்டுமென விரும்பினார் . அரசு அதிகாரம் மூலம் சாதி இழிவ

இந்தியர்கள் அன்பான தொடுதலை அறியாதவர்கள்! - அய்லி சேகட்டி

படம்
  அய்லி சேகட்டி காதல் உறவுக்கான பயிற்சியாளர்  நீங்கள் ஃபின்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்தானே? இந்தியாவுக்கு வருவதற்கு என்ன காரணம்? இங்கு நீங்கள் காதல் உறவுக்கான பயிற்சியையும் வழங்குகிறீர்கள் நான் பின்லாந்து, இத்தாலி, லண்டனில் வாழ்ந்துள்ளேன். எனது பதினெட்டு வயதிலேயே லண்டனுக்கு சென்றுவிட்டேன். பிறகுதான் இந்திய தத்துவங்கள் மீது ஆர்வம் பிறந்தது. மதரீதியான படிப்புகளை படிப்பையும், இந்தி மொழியையும் கற்றேன். பிறகுதான் 2007இல் மும்பைக்கு சென்றேன். பிராண்டுகள் மற்றும் வாடிக்கையாளர் மனநிலை பற்றிய ஆராய்ச்சி செய்தேன். கூடவே, சோமாட்டிகா எனும் படிப்பைப் படித்தேன். சைக்கோதெரபி, விபாசனா ஆகியவற்றைப் பற்றி ஆழமாக கற்றேன். இதற்குப் பிறகு எனக்கு மணமானது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மணவாழ்க்கை கெட்டுப்போனது. எனவே, நான் எங்கள் வாழ்க்கையை பிறருக்கு முன் வைக்கத் தொடங்கினேன். அப்படித்தான் காதல் உறவு பயிற்சியாளராக மாறினேன்.  2012இல் உலகம் முழுக்க டேட்டிங் ஆப்களின் மீதான மோகம் பெருகத் தொடங்கியது. நானும் பிஏ இந்தி படிப்பை கைவிட்டு பாலுறவு மற்றும் காதல் உறவு பற்றிய ஆராய்ச்சிக்கு மாறினேன்.  இந்தியர்கள் தங்கள் உறவில் எந்த

அறிவியலாளர்களுக்குக் கூட பாலுறவு பற்றி பேச கூச்சமும், தயக்கமும் இருக்கிறது! - பிரான்ஸ் டி வால், மானுடவியலாளர்

படம்
  ஃபிரான்ஸ் டி வால் (Frans de waal) பேராசிரியர், எமோரி பல்கலைக்கழகம், ஜார்ஜியா. பொதுவாக மனிதக்குரங்குகளைப் பற்றி நாம் கேள்விப்படும் செய்திகள் பாலுறவு மற்றும் சண்டை சம்பந்தமாகவே இருக்கும். அதன் வாழ்க்கையில் வேறு விஷயங்களைப் பற்றி அதிகம் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். இதுபற்றிய ஆராய்ச்சியில் தான் பேராசிரியர் ஃபிரான்ஸ் டி வால் ஈடுபட்டிருக்கிறார். போனபோ, சிம்பன்சி ஆகியவற்றுக்கும் மனிதர்களுக்கும்  நிறைய வேறுபாடுகள் இருக்கிறதென கூறுகிறார். பிறர் மீதான கரிசனம், கூட்டு முயற்சி ஆகிய இயல்புகளைக் கொண்டதாக மனித குரங்கு உள்ளது என்று கூறுகிறார். பாலின அடையாளங்கள் பற்றி டிஃப்ரன்ட் வாட் ஏப்ஸ் கேன் டீச் அஸ் அபவுட் ஜென்டர் என்ற நூலை எழுதியிருக்கிறார். அவரிடம் பேசினோம்.  கலாசாரம் சார்ந்து பாலின அடையாளங்கள் மாறுவதாக எப்படி கூறுகிறீர்கள். டோனா என்று சிம்பன்சியை உங்கள் கருத்துக்கு ஆதரவாக கூறுகிறீர்கள். இதைப்பற்றி விளக்குங்கள்.  டோனா, ஒரு பெண் சிம்பன்சி. ஆனால் ஆணைப் போன்ற உடல் அமைப்பு. பெரும்பாலான நேரங்களில் ஆண்களோடு சுற்றிக்கொண்டிருப்பாள். பாலின அடிப்படையில் பெண் என்றாலும் பெரும்பாலான நேரங்களில் ஆண்போலவே செயல

கரிச்சான் குஞ்சுவின் பசித்த மானிடம் ஆங்கில மொழிபெயர்ப்பில்.... - புதிய நூல்கள் அறிமுகம்

படம்
  புதிய நூல்கள் அறிமுகம் வீ மூவ் குர்நாய்க் ஜோகல் செர்பன்ட் டெய்ல் 499 இங்கிலாந்தில் குடியேறிய ஆசிய மக்கள் பற்றிய கதைகளை நூலில் கூறுகிறார்கள். மேற்கு லண்டன் பகுதியில் ப்ரீத்தி வாழ்கிறாள். இவளது பாட்டி பஞ்சாபி மொழியைப் பேசுகிறாள். இருவருக்குமான இடைமுகமாக இருப்பது ப்ரீத்தியின் அம்மாதான். இவர்களது உலகம் சார்ந்த சிக்கல்களை ஆசிரியர் விவரித்திருக்கிறார்.  நியூ அனிமல் எல்லா பாக்ஸ்டர் பிகாடர் 799 அமெலியா, இறந்து போனவர்களின் உடல்களை அலங்கரிக்கும் தனது குடும்ப நிறுவனத்தில் வேலை செய்கிறாள். அவள் ஆன்லைனில் தனது காதலைக் கண்டுபிடிக்கிறாள். இடையில் அந்த உறவை இழக்கிறாள். பாலுறவு, இறப்பு, துக்கம் என பல்வேறு விஷயங்களை அவள் எப்படி அடையாளம் காண்கிறாள் என்பதே கதை. வலி என்பது உடல்தோறும் மாறிக்கொண்டே இருப்பதை வாசிக்கையில் வாசகர்கள் எளிதாக உணரலாம்.  லாஸ்ட் கேர்ள் சனா ஷெட்டி ஹார்ப்பர் கோலின்ஸ் இந்தியா 299 சிம்லாவில் நடைபெறும் திரில்லர் கதை. இங்கு பணியில் ஓய்வு பெற்ற அதிகாரி வனெஸ்ஸா தனது கணவர் அடியனோடு வாழ்கிறார். ஒருநாள் சாலையோரத்தில் உள்ள புதர்ப்பகுதியில் பெண் ஒருவர் அடிபட்டு குற்றுயிராக கிடப்பதைப் பார்த்து அ

திகில் படங்களின் மீது ஏன் ஆசை வருகிறது? உளவியல் பார்வை இதோ!

படம்
டாக்டர் எக்ஸ் சிலர் திகில் படம் பார்க்க ஏன் ஆசைப்படுகிறார்கள்? சாகச அனுபவ விரும்பிகளாக இருப்பார்கள். வேறென்ன, இப்போது பாருங்கள். என் அருகில் அமர்ந்துள்ள ஓவியர், எப்போதும் போகும் டீக்கடைக்கு போகாமல் தூரமாக போய் டீ குடித்துவிட்டு வேறு வழியாக ஆபீசுக்கு வருகிறார். என்ன ஆச்சுங்க சார் என்றால், போரடிக்குது ப்ரோ என்றார். ஆம். அதுதான். காரமான உணவு சாப்பிடுவது, ஸ்கை டைவிங் செய்வது, மலையில் கயிறு கட்டி மிஷன் இம்பாசிபிள் படம் காட்டுவது எல்லாமே இதையொட்டி ஏற்படுவதுதான். ஆபீஸ் வாழ்க்கையில் நீங்கள் என்ன சாகசத்தை அனுபவிக்க முடியும். அப்படி சாதிக்கும் வெறியில் தட்டினாலும் தலைமுறைக்கே உழைக்கும் டிவிஎஸ் பாரத் கீபோர்டைக் கொடுத்துவிடுவார்கள். ஒன்றும் செய்யமுடியாது. பொதுவாக ஆண்கள் பெண்களைத் தவிர வேறு யாருக்கும் பயப்படுவது கிடையாது. எனவே திகில் படங்களான ஈவில் டெட், கான்ஜூரிங் வகையறாக்களை ஊதித்தள்ளுவார்கள். ஆனால் டேட்டிங்கில் பெண்கள் பயத்தில் கட்டிப்பிடிக்க ஆள் வேண்டுமே? அதற்கு ஆண்கள் உதவுகிறார்கள். ஆண்கள் தம்மை பாதுகாவலராக காட்டிக்கொள்ளவும் இந்த சந்தர்ப்பங்கள் உதவுகின்றன என்கிறார் உளவியலாளரா