திகில் படங்களின் மீது ஏன் ஆசை வருகிறது? உளவியல் பார்வை இதோ!








டாக்டர் எக்ஸ்

சிலர் திகில் படம் பார்க்க ஏன் ஆசைப்படுகிறார்கள்?

சாகச அனுபவ விரும்பிகளாக இருப்பார்கள். வேறென்ன, இப்போது பாருங்கள். என் அருகில் அமர்ந்துள்ள ஓவியர், எப்போதும் போகும் டீக்கடைக்கு போகாமல் தூரமாக போய் டீ குடித்துவிட்டு வேறு வழியாக ஆபீசுக்கு வருகிறார். என்ன ஆச்சுங்க சார் என்றால், போரடிக்குது ப்ரோ என்றார்.

ஆம். அதுதான். காரமான உணவு சாப்பிடுவது, ஸ்கை டைவிங் செய்வது, மலையில் கயிறு கட்டி மிஷன் இம்பாசிபிள் படம் காட்டுவது எல்லாமே இதையொட்டி ஏற்படுவதுதான். ஆபீஸ் வாழ்க்கையில் நீங்கள் என்ன சாகசத்தை அனுபவிக்க முடியும். அப்படி சாதிக்கும் வெறியில் தட்டினாலும் தலைமுறைக்கே உழைக்கும் டிவிஎஸ் பாரத் கீபோர்டைக் கொடுத்துவிடுவார்கள். ஒன்றும் செய்யமுடியாது.

பொதுவாக ஆண்கள் பெண்களைத் தவிர வேறு யாருக்கும் பயப்படுவது கிடையாது. எனவே திகில் படங்களான ஈவில் டெட், கான்ஜூரிங் வகையறாக்களை ஊதித்தள்ளுவார்கள். ஆனால் டேட்டிங்கில் பெண்கள் பயத்தில் கட்டிப்பிடிக்க ஆள் வேண்டுமே? அதற்கு ஆண்கள் உதவுகிறார்கள். ஆண்கள் தம்மை பாதுகாவலராக காட்டிக்கொள்ளவும் இந்த சந்தர்ப்பங்கள் உதவுகின்றன என்கிறார் உளவியலாளரான விஸ்கான்சின் பல்கலைக்கழக உளவியல் பேராசிரியர் ஜோன் கான்டர்.

சிலர் பேய்ப்படங்களை தெலுங்கு ஜாலி சினிமாக்களைப் போல பார்த்து ரசிப்பார்கள். அவர்களுக்கு பயம்  போன்ற விஷயங்கள் இருக்காது. இப்போது என்ன மேற்குலக நாடுகளில் ஹாலோவீன் சீசன். ஜாலியாக பயப்படலாம். காதலியை, காதலரைக் கட்டிப்பிடிக்கலாம். அட்ரினலின், கார்டிசோல், எபின்பிரைன் ரத்தத்தில் சுரக்கட்டும். மூச்சு வேகமாகட்டும். ப்ரோ வேறு எதையும் நினைக்காதீர்கள். நான் திகில் படம் பார்க்கும் அனுபவத்தைத்தான் சொல்கிறேன்.

இளமையில் ஏற்பட்ட அனுபவங்கள் இதுபோல திகில் படங்கள் பார்ப்பதில் தாக்கம் ஏற்படுத்துகின்றன என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். எனவே வறுமை, வசதி என்ற வாழ்க்கையில் திகில் பட டேஸ்ட் மாறிப்போகலாம்.


நன்றி- க்யூரியாசிட்டி










பிரபலமான இடுகைகள்