காந்தி புழங்கிய இடங்கள் - ஒரு பார்வை!
காந்தி 150
காந்தி இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களுக்குச் சென்றுள்ளார். தென் ஆப்பிரிக்காவிலுள்ள நகரங்களிலும் புழங்கியுள்ளார். அவர் அப்படி சென்று வந்த இடங்கள் ஒரு பார்வை.
போர்பந்தர்
காந்தி 1869 ஆம் ஆண்டு பிறந்த இடம். இவரது தந்தை திவானாக இருந்தார். தற்போது இந்த இடம் மியூசியமாக உள்ளது.
குஜராத் தண்டி
1930 ஆம் ஆண்டு உப்பு சத்தியாகிரகம் செய்த இடம். இங்கு காந்திக்கு சிலை உண்டு. இந்த இடத்தை சுற்றுலாப்பயணிகள் வரும்படி ஈர்க்க தண்டி பாரம்பரிய காரிடாராக மாற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளது.
சம்பரான்
காந்திய போராட்ட ங்களில் ஒன்றான சத்தியாகிரகத்தை காந்தி இங்கிருந்தான் தொடங்கினார். ஆங்கிலேயர்கள் விவசாயிகளுக்கு உதவினர் என்ற காந்தியின் எண்ணம் நொறுங்கியது.
கௌசானி
காந்தி இங்கு அனசக்தி யோகம் நூலை எழுத தங்கியிருந்தார்.
டெல்லி
காந்தி, தன் வாழ்க்கையில் இறுதி 144 நாட்களை கடும் மனவேதனையுடன் கழித்த இடம் இது. இங்குள்ள சாலையின் பெயர் 30 ஜனவரி மார்க். ஆம். காந்தி இறந்த நாள்தான் சாலையின் பெயரும் கூட. பிர்லாஹவுஸ் என்ற இடத்தில் தங்கியிருந்தார். அந்த இடத்தின் இன்றைய பெயர் காந்தி ஸ்மிருதி.
அகமதாபாத் சபர்மதி ஆசிரமம்
தண்டி உப்பு சத்தியாகிரகத்தை காந்தி இங்கிருந்துதான் தொடங்கினார். 1917 – 1930 வரையில் காந்தி இங்கு வாழ்ந்தார். இந்த இட்டைத மியூசியமாக சார்லஸ் கொரியா வடிவமைத்துள்ளார்.
மகாராஷ்டிராவிலுள்ள சேவா கிராமம்
கிராம சுயராஜ்யம், தீண்டாமை ஒழிப்பு போன்ற விஷயங்களை பரிசோதனையாக செய்து பார்த்த இடம் இது. 1934 – 1940 வரையிலான காலகட்டத்தில் காந்தியின் வாழ்விடம் இது. இங்கு மியூசியமும், ஆசிரமும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டிலுள்ள மதுரை
இங்கு காந்தி இந்து அமைப்பைச் சேர்ந்த நாதுராம் கோட்சேவால் சுட்டுக்கொல்லப்பட்டபோது, அவர் வைத்திருந்த பல பொருட்கள் சேகரிக்கப்பட்டு சேமிக்கப்பட்டு வருகின்றன. அதில் ரத்தக்கறை படிந்த காந்தியின் உடைகளும் அடக்கம்.
லண்டன்
காந்தி, 1888-1891 காலகட்டத்தில் லண்டன் பல்கலைக்கழகத்தில் வழக்குரைஞர் படிப்பைப் படிக்க சேர்ந்திருந்தார். பின்னர் படிப்பை முடித்தபின்னர் அங்கு செல்லவே இல்லை. இரண்டாம் வட்டமேஜை மாநாட்டிற்காகத்தான் காந்தி லண்டனுக்குச் சென்றார்.
டார்வின்
1931 ஆம்ஆண்டு காந்தி அழைப்பின் பேரில் சென்ற இடம் இது. மில் வைத்திருந்த டேவிஸ் குடும்பத்தினர் காந்தியை அங்கு வரவழைத்தனர். லங்காசையரில் சுதேசி துணிகள் அழிக்கப்படுவதை இக்குடும்பம் பதிவு செய்த்து.
தென் ஆப்பிரிக்கா
டர்பன்
1893 ஆம் ஆண்டு மே 24 அன்று தன் 24 வயதில் தென் ஆப்பிரிக்காவுக்கு பயணமானார் காந்தி. தாதா அப்துல்லா என்ற குஜராத்தி வணிகருக்காக வாதாட வழக்குரைஞராக அங்கு சென்றார்.
பீட்டர்மரிட்ஸ்பர்க்
1893 ஆம் ஆண்டு ஜூன் 7 அன்று காந்தி பிரிடோரியாவுக்கு ரயிலில் சென்றார். பாகுபாட்டை உணர்வதற்கான வாய்ப்பு அன்றுதான் அவருக்குக் கிடைத்தது. முதல் வகுப்பு டிக்கெட் வைத்திருந்தவர், ரயிலில் இருந்து கீழே இறக்கிவிடப்பட்டார்.
பீனிக்ஸ்
டர்பனிலிருந்து 20 கி.மீ தொலைவிலிருந்த இடம் இது. இங்கு காந்தி குடும்பத்துடன் வசித்து வந்தார்.
ஜோகன்னஸ்பர்க்
1906 ஆம் ஆண்டு ஆசியர்கள் தம் கைரேகையை பதிவு செய்யும் சட்டத்தை தென் ஆப்பிரிக்க இனவெறி அரசு உருவாக்கியது. 1908 ஆம் ஆண்டு காந்தி தன் சத்தியாகிரக போராட்டத்திற்காக கைது செய்யப்பட்டார். காந்தி போராட்டக்காரர்களை தம் ஆவணங்களை எரித்துவிடுமாறு வலியுறுத்தினார்.
நன்றி- அவுட்லுக், காந்தி 150 வது இதழ்