எனக்கென தனி கொலை உலகம் - டீன் கோரல் கோரதாண்டவம்!










Dean Corll Portrait
ராணுவத்தில் டீன் கோரல்










அசுரகுலம்

டீன் கோரல்


இளைஞர்களை செக்சுக்கு பயன்படுத்திவிட்டு தூக்கியெறிந்த டீன் கோரல், மொத்தம் 27 பேரை வைகுண்டம் அனுப்பி வைத்துவிட்டு நல்ல பிள்ளையாக இருந்திருக்கிறார். பிள்ளைகள் காணாமல் போனால் போலீஸ் என்ன செய்கிறது என்று கேள்வி வருகிறதா? அங்கிருந்த போலீஸ் எண்ணிக்கை மிக குறைவு. இருபது லட்சம் மக்களுக்கு 2,200 போலீசார்தான். எனவே,  காணவில்லையா கண்பிடிப்போம் என எதிர்கால வார்த்தைகளைப் போட்டு பதில் சொல்லி பெற்றோர்களை அனுப்பிவிட்டு ரெகுலர் வேலைகளைப் பார்த்தனர்.

அவர்கள் கொஞ்சம் உஷாராக இருந்திருந்தால், முதலிலேயே ஹென்லியை பிடித்திருக்கலாம். நிறைய பேர் தனக்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் பலியாகி இருக்கவும் மாட்டார்கள். இப்போது நாம் வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம்?
கோரலின் கதையைப் பார்ப்போம்.

டெக்சாசின் மேற்குப்பகுதியிலுள்ள ஹூஸ்டனில் வாழ்ந்த டீன் கோரல் நேர்த்தியான ஆள். தனது தாய் நடத்தி வந்த மிட்டாய்கடையில் மிட்டாய்களை தயாரித்து பக்கத்திலுள்ள குழந்தைகளுக்கு இலவசமாக கொடுப்பான். இதனால் மிட்டாய்காரன் என அப்பகுதியில் கோரலுக்குப் பெயர். 1973 ஆம் ஆண்டு அவன் எல்மர் வெய்ன் ஹென்லியால் சுட்டுக்கொல்லப்படாதவரை, அவன் செய்து வந்த திகில் வேலைகளை யாருமே அறியவில்லை.


1939 ஆம் ஆண்டு பிறந்த டீன் கோரலின் வாழ்க்கை இளமையில் இனிமையாக இல்லை. காரணம் எம்டன் அப்பா. இந்தியானாவில் ஃபோர்ட் வெய்னில் பிறந்தவரின் பெற்றோர் இருமுறை விவகாரத்து பெற்றவர்கள். அப்பாவுக்கு ஒழுக்கம் முக்கியம் என்பதால், மகன் எதையும் செய்ய அனுமதிக்கவில்லை. அப்படி செய்தால் தவறு ஏதாவது வந்துவிட்டால் என்ன செய்வது? என்ற மனப்பான்மை கொண்டிருந்தார். இதனால் டீன் உருப்படியான விஷயங்களையும் செய்ய முடியவில்லை.

பள்ளியில் சரி, பெண் தோழிகளிடமும் சரி டீன் எங்கெங்கு எப்படி நடக்க வேண்டுமோ அப்படி நடந்த ஆள்தான். ஆனால் தந்தை அர்னால்டு தன் குழந்தைகளிடமிருந்து தள்ளியே இருந்தார். இது தாய் மேரியை வருத்தப்பட வைத்தது. டீனையும்தான். குடும்ப செலவுகளுக்கு பணம் கொடுப்பதையும் மெல்ல குறைக்கத் தொடங்கினார் டீனின் தந்தை. இதனால் குடும்பத்தில் பிரச்னைகள் தொடங்கின.

இச்சமயத்தில் தனி உலகில் சஞ்சாரிக்கத் தொடங்கினார் டீன் கோரல். அப்போது தாயின் கதாபாத்திரத்தை தனக்குள் ஒரு ஆளுமையாக உருவாக்கிக்கொண்டார். ஆனால் அதை அப்படியே எதிர்மறையாக மாற்றிக்கொண்டார். அம்மா குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுத்து பாதுகாப்பு அளிக்கிறாள். அதனை அப்படியே எதிர்மறையாக மாற்றி,  குழந்தைகளைக் கொன்றால் எப்படி இருக்கும்? பெற்றோரின் அன்பின்றி தன்னைத்தானே பார்த்துக்கொண்டு வளர்ந்த டீன் மெல்ல மனதளவில் சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டதாக உணர்ந்தான். எனவேதான், தனக்கு கிடைக்காத பாசத்தை வெளியில் உள்ள குழந்தைகளுக்கு இலவச மிட்டாய் மூலம் தருகிறான். அதேசமயம் அவர்களை கூட்டி வந்து சித்திரவதை பலகையில் படுக்க வைத்து வல்லுறவு செய்து வெட்டிக் கொல்வதும் நடக்கிறது. இதனை அவனுடைய மனதில் உள்ள இன்னொரு பாத்திரம் செய்ய வைக்கிறது. இப்படித்தான் டீன் கோரலை வரையறை செய்து உள்ளனர் உளவியலாளர்கள்.

இதில் டீனுக்கு உதவிய ஹென்லியை போலீஸ் பிடித்து விசாரித்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியது. 594 ஆண்டுகள் சிறை தண்டனை. இதை எதிர்த்து அப்பீல் செய்தார் ஹென்லி. ம்ஹூம் தண்டனை அதுதான் என நீதிமன்றம் மனமிரங்கவில்லை. அவர் இப்போது சிறையில்தான் உள்ளார்.

தொகுப்பும் எழுத்தும்

வின்சென்ட் காபோ







பிரபலமான இடுகைகள்