துண்டு துண்டாக வெட்டி.. சமைத்து - ஆல்பிரெட் ஃபிஷ் அட்டூழியம்!



Albert Fish Confession
புன்னகையுடன் ஆல்பிரெட் ஃபிஷ்




ஆல்பிரெட் ஃபிஷ்

ஃப்ராங்க் ஹோவர்டு என்ற பெயரில் ஆல்பிரெட், திருமதி டெலியா பட்டின் வீட்டுக்குச் சென்றார். எதற்கு என்கிறீர்களா? அவர்தான் தன் மகன் எட்வர்ட் வீட்டு வேலை செய்வான் என விளம்பரம் கொடுத்திருந்தார். எட்வர்டை வீட்டுவேலை என்று சொல்லி கூட்டிவந்து சித்திரவதை செய்யலாம் என ஆல்பிரெட்டுக்கு தோன்றியது.

ஆனால் திருமதி டெலியாவின் வீட்டுக்குச் சென்றதும், அவரது எண்ணம் மாறிவிட்டது. காரணம், அங்கு டெலியாவின் பின்னால் ஒட்டி நின்ற கிரேசி பட் என்ற பத்து வயது சிறுமிதான். உடனே தன்னுடைய சகோதரன் வீட்டில் பார்ட்டி ஒன்று நடக்கிறது. உங்கள் மகன் சில நாட்கள் கழித்து என்னுடைய பண்ணைக்கு வரட்டும். இப்போது உங்கள் மகளை நான் பார்ட்டிக்கு அழைத்து சென்றுவிட்டு கொண்டு வந்து விடுகிறேன் என்றார் ஆல்பிரெட். அதன் பின்னாலுள்ள பயங்கரத்தை திருமதி டெலியா உணரவில்லை. அப்புறம் என்ன போன கிரேசி போனவர்தான்.


கிரேசியை தன் வீட்டுக்கு நேராக அழைத்துச்சென்றார் ஆல்பிரெட். அங்கு சென்று, வீட்டுக்குள் நுழைந்தார். எட்வர்ட் பட்டுக்கு ரெடி செய்த சித்திரவதை அறையை ஒருமுறை சுற்றிப் பார்த்துவிட்டு மேல் அறைக்கு வந்தார். கீழே வீட்டுக்கு வரும் வழியில் இருந்த தோட்டத்தில் பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தாள் கிரேசி.

அவளை உள்ளே வரச்சொல்லிவிட்டு, ஆல்பிரெட் தன் உடைகளை களைந்து நிர்வாணமாக நின்றார். பூக்களுடன் உள்ளே நுழைந்த கிரேசி ஆல்பிரெட்டை பார்த்து அழத் தொடங்கி ஒட முயன்றாள். இனி கடிதமாக அந்த சூழ்நிலையை எப்படி ஆல்பிரெட் எழுதினார் என்று பார்ப்போம்.

என்னைக் கடித்து, கைகளால் குத்தியபடி ஓட முயன்ற கிரேசியை மடக்கிப் பிடித்து அவளது உடைகளைக் கைகளால் கிழித்தெறிந்தேன். பின்னர் அலறிக்கொண்டிருந்த அவளது மூச்சை நிறுத்தினேன். பின்னர் அவளது உடல் உறுப்புகளை காய்கறிகள் போல சன்னமாக நறுக்கி, அதை எடுத்துக்கொண்டு சமையலறைக்குச் சென்று சமைத்து சாப்பிட்டேன். அவளது முழு உடலையும் சாப்பிட்டு முடிக்க எனக்கு ஒன்பது நாட்கள் தேவைப்பட்டன.

எப்படி போலீஸ் கண்டுபிடித்தது. அவர் தன் கையெழுத்தில் எழுதிய கடிதத்தை வைத்துத்தான். சாஃபர் பெனவலன்ட் அசோசியேஷன் எனும் அமைப்பின் முத்திரை அக்காகித த்தில் இருந்தது. அவர்களின் என்வெலப் காகிதம் அது. அதை போலீஸ் விசாரிக்க உண்மை வெளியானது. குறிப்பிட்ட அறையை வாடகைக்கு எடுத்து தங்கி வந்த ஆல்பிரெட் ஃபிஷ் என்ற நபர் அதனை எழுதியது பின்னர் எளிய விசாரணையில் வெளிப்பட்டது.

மிரட்டவோ அடிக்கவோ இல்லை. கடிதத்தை நீங்கள்தான் எழுதினீர்களா என்று டிடெக்டிவ் வில் கிங் என்பவர் கேட்டதும் ஆல்பிரெட் ஆமாம் என ஒப்புக்கொண்டு விட்டார். கிரேசி பட் என்பது பெரியளவு வெளித்தெரியாத கொலைதான். ஆனால் அதற்கு முன்பே 1927 பிப்ரவரி 17 அன்று ப்ரூக்ளினில் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் பில்லியைக் கடத்திச் சென்று கொன்றார் ஆல்பிரெட். இதனை போலீசில் சொல்ல பக்கத்துவீட்டுச் சிறுவன் எவ்வளவோ முயற்சித்தான். பொடிப்பயல் கதை விடுகிறான் என போலீஸ் நினைத்துவிட்டது.

இதன் விளைவாக மூன்று சிறுவர்களின் உயிர் பறிபோனது.

வீட்டிலேயே தயாரித்து கருவிகளைக் கொண்டு பில்லியை அடித்துக் கொன்றேன். முதலில் என் பெல்டை அறுத்து, பில்லியை அடித்தேன். பின்னர் கத்தியை அவன் இடுப்பில் குத்தி, அப்படியே வாய் வைத்து ரத்தத்தை குடித்தேன். காது, தொண்டை, கண்களை என வெட்டி பிறகே அவன் இறந்தான் என ஆல்பிரெட் எழுதி வைத்துள்ள குறிப்புகள் அவருக்கு எதிரான வலுவான ஆதாரமாக மாறின.


தன் மீதான குற்றச்சாட்டுகளை புன்னகையுடன் ஆல்பிரெட் பார்த்தார். அவருக்கு டிடெக்டிவ் வில் கிங் படித்துக் காட்டினார். மரணதண்டனை விதிக்கப்பட நிறைய சாட்சிகள் உருவாகியிருந்தன. பத்திரிகையாளர்களுக்கு அவர் ஏதாவது கூற விரும்பினால் கூறலாம் என்று கோர்ட் கூறியது. அதற்கு அவர் எழுதி தந்த செய்தியை அவரது சார்பான வழக்குரைஞரே கிழித்துப் போட்டுவிட்டார். ஏன் என்றதற்கு அவ்வளவு அருவெருப்பாக உள்ளது அந்த செய்தி என்று கூறிவிட்டார்.


1936ஆம்  ஆண்டு ஜனவரி மாதம் மின்சார நாற்காலியில் மரணதண்டனை ஆல்பிரெட்டிற்கு நிறைவேற்றப்பட்டது.


வின்சென்ட் காபோ 


நன்றி - ஆல்தட் இன்ட்ரஸ்டிங்

சீரியல் கில்லர்ஸ் பைல்ஸ் நூல்.














பிரபலமான இடுகைகள்