இந்தியர்களுக்கு வர்க்க மனப்பான்மை அதிகம்! - அபிஜித் - எஸ்தர் டஃப்லோ




Image result for abhijit banerjee and esther duflo marriage




நேர்காணல்


அபிஜித் பானர்ஜி - எஸ்தர் டஃப்லோ


நோபல் பரிசு பெற்றிருக்கிறீர்கள். எதிர்காலத்தில் உங்களது ஆராய்ச்சி இதனால் சிறப்பு பெறுமா?

எங்களது திட்டமே ஆர்சிடி முறையை அனைவரும் செய்யவேண்டும் என்பதுதான். நாங்கள் இந்த விருது பெற்றுள்ளதின் மூலம் எங்கள் குழுவில் உள்ள இளம் ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் பெரும் ஊக்கம் பெற்றுள்ளனர். எதிர்காலத்தில் இது சிறந்த விஷயங்களைச் செய்யும் என நம்புகிறோம்.


இந்திய அரசு உங்களை அழைத்தால் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவீர்களா?

நாங்கள் கட்சி சார்ந்து எங்கள் ஆய்வுகளை செய்வதில்லை. நாங்கள் குஜராத் மாநில அரசு, மேற்கு வங்க அரசு ஆகியோருடனும் ஆய்வுகளைச்செய்து வருகிறோம். மத்திய அரசின் ஆதரவு என்று நாங்கள் தனியாக எதையும் கேட்கவில்லை. மாநிலங்களில் ஆய்வு செய்வதற்கான விஷயம் ஏதேனும் ஈர்த்தால் நாங்கள் ஆய்வுகளைச் செய்கிறோம். இதில் அரசுகளிடம் நாங்கள் வேண்டுவது ஆர்வத்தையும் நிறைய பொறுமையை மட்டுமே.

எஸ்தர் - எங்களுடைய வறுமை ஒழிப்பு செயல்பாட்டு மையத்தின் ஊழியர்கள் பிரமாதமாக வேலை பார்த்து வருகிறார்கள். எங்களுக்கு கிடைத்த பரிசு அவர்களுக்கும் ஊக்கம் தருவதோடு அவர்களின் பணியைப் பற்றி மக்களுக்கும் நல்ல கவனத்தை ஏற்படுத்தியிருக்கும் என நம்புகிறேன்.

இந்திய ஊடகங்களில் அபிஜித் பானர்ஜிக்கு விருது கூடுதலாக அவரது மனைவியும் விருது பெற்றார் என்று குறிப்பிட்டிருந்தார்கள். இது உங்களுக்கு சங்கடமாக இருந்ததா?

இந்தியர்களின் மனநிலையில் எப்போதும் வர்க்கம் உண்டு. மேல், கீழ் என்று பார்ப்பதைக் குறிப்பிடுகிறேன். பிரெஞ்சு ஊடகங்களில் எஸ்தர் டஃப்லோ, மற்றும் இருவர் நோபல் பரிசு வென்றார்கள். அதில் எஸ்தரின் கணவரும் அடக்கம் என்று எழுதினார்கள். இதனை நீங்கள் ஊடகங்கள் காட்டும் தேசிய பெருமையாக எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். இந்திய பிரதமர், அபிஜித்திற்கான ட்விட் பாராட்டை அனுப்பிவிட்டு என்னை அடுத்த ட்விட்டில் பாராட்டினார்.

உங்களை நோபல் பரிசு வென்றதற்கு பாராட்டிய உங்களது சகோதரர், விரைவில் மாஸ்டர் செஃப் போட்டியில் வெல்வீர்கள் என்று கூறினாரே?

எஸ்தர்: உண்மைதான். அவர் பொருளாதாரத்தை பகுதிநேரமாகத்தான் செய்கிறார். வீட்டிற்கு நண்பர்களை அழைக்கும்போது முன்னர் செய்த சமையல் ஐட்டங்கள்மீண்டும் வராதபடி சமைப்பதில் வல்லவர். அவரிடம் நான் வியப்பது அவரின் அபாரமான நினைவாற்றல். அதில் நான் அவரிடம் போட்டி போடவே முடியாது. எப்போதும் உணவு பற்றியே நினைத்துக்கொண்டிருப்பாரோ என்று கூட நினைப்பதுண்டு.

இவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே நான் உணவு பற்றித்தான் யோசித்துக்கொண்டிருப்பேன் என்று சிரிக்கிறார் அபிஜித்.

அதிகவரியை அரசு விதிப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? மக்களின் இடம்பெயர்வுக்கு அது முக்கியக் காரணம்தானே?

உண்மைதான். நீங்கள் உங்கள் வருமானத்தை அதிக காலம் மறைத்துக்கொண்டிருக்க முடியாது. உற்பத்தி தொடர்பாக இதைப் பார்த்தால் சில பொருட்களை வெளிநாடுகளில் தயாரித்து அதனைப் பெறுவதே நல்லது. பொருளின் உற்பத்தியோடு, அதற்கு வரி என அனைத்தும் நாடுகளைப் பொறுத்து மாறும்.

எஸ்தர்: அமெரிக்காவில் குடிமகனாக இருந்தால், அங்குள்ள வரிச்சட்டத்திற்கு நீங்கள் கட்டுப்பட்டே ஆகவேண்டும்

இப்போது இந்தியாவில் பணக்காரர்களுக்கு 43.5 சதவீதம் வரி விதிக்கிறார்கள். இது அதிகமான வரிச்சுமை இல்லையா?

அதிகம் என்று கூறிவிட முடியாது. காரணம். அமெரிக்காவின் முன்னாள் அதிபரான எய்சன்ஹோவர் காலத்தில் பணக்கார ர்களுக்கான வரி 95 சதவீதம் இருந்தது. நிக்சன் காலத்தில் இந்த வரி 70 சதவீதமாக இருந்தது. இதனை நீங்கள் கம்யூனிச சிந்தனை என்று நீங்கள் பொருள் கொள்ளக்கூடாது. 40 சதவீத த்திற்கு மேல் வரிவிதித்தால் பொருளாதார பாதிப்பு ஏற்படும் என்பது எங்கும் ஆதாரப்பூர்வமாக பதிவாகவில்லை. இதுபற்றி தெளிவாக முடிவுக்கு வர வாரன் ப ஃபட் இந்திய பற்றி பேசியுள்ளதை நீங்கள் படிக்க வேண்டும்.

எஸ்தர்: பணக்கார ர்கள் மட்டும்தான் அதிக வரி கட்டுகிறார்கள் என்று நீங்கள் நினைக்க வேண்டியதில்லை. இப்போது அமெரிக்காவில் நூறு ஆண்டுகளில் முதன்முறையாக 2018 இல் பணக்காரர்கள் கூலித்தொழிலாளிகளை விட குறைவாக வரி கட்டியிருக்கிறார்கள். இது பற்றி இம்மானுவேல் சாஸ், கேப்ரியல் ஸக்மன் ஆகியோரின் பொருளாதார ஆய்வு நூல் குறிப்பிடுகிறது.


நன்றி - டைம்ஸ்