பொருளாதார நோபல் பரிசு 2019! - சாதித்த இந்தியர் அபிஜித்!
இதுவரையில் நோபல் பரிசை வென்றவர்கள் பற்றி நாம் எழுதவில்லை. காரணம், குறிப்பிட்ட மருத்துவம், வேதியியல், இயற்பியல் கண்டுபிடிப்புகள் உடனடியாக மக்கள் வாழ்க்கையில் தாக்கம் ஏற்படுத்துபவை அல்ல. ஆனால் பொருளாதாரம் தொடர்பான விஷயங்கள் முன்பே பரிசோதிக்கப்பட்டவை. அதுதொடர்பான ஆய்வறிக்கைகள் அடிப்படையில் பரிசுக்கு சிபாரிசு செய்யப்படுகின்றன.
இந்த ஆண்டு மூன்று பேர் பொருளாதார நோபல் வென்றிருக்கிறார்கள். இருவர் கணவர் மனைவியராக பணியாற்றி பொருளாத வல்லுநர்கள். மூன்றாவது நபர் அமெரிக்க பொருளாதார வல்லுநர்.
அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டஃப்லோ ஆகிய இருவரும் அமெரிக்காவின் எம்ஐடி தொழில்நுட்ப மையத்தைச்சேர்ந்தவர்கள். மைக்கேல் கிரிமெர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர். இம்மூவரும் பொருளாதாரத்திற்கான நோபலைப் பெறுகிறார்கள். மேற்சொன்ன கணவர் மனைவி தம்பதியினர் வறுமை ஒழிப்புக்காகவும், மைக்கேல் கிரிமெர் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக உள்ளவை என்ற தலைப்பில் செய்த ஆராய்ச்சிக்காவும் பரிசு பெறுகிறார்கள்.
இப்போது இந்திய - அமெரிக்க பொருளாதார வல்லுநரான அபிஜித் பானர்ஜி பற்றிய டேட்டாவைப் பார்ப்போம்.
1961 ஆம்ஆண்டு பிப்ரவரி 21 அன்று மும்பையில் பிறந்தார். தந்தையும் பொருளாதார வல்லுநர்தான். பிபெக் பானர்ஜி - நிர்மலா பானர்ஜி அவர்களது பெயர்.
கொல்கத்தாவிலுள்ள சவுத் பாய்ண்ட் பள்ளி மற்றும் பிரசிடென்சி கல்லூரியில் படித்தார். இதே பிரசிடென்சி கல்லூரியில் படித்தவர்கள்தான் அமர்த்தியா சென் என்பதும், அவர் விருது வென்ற 21 ஆண்டுகளுக்குப் பிறகு அபிஜித் பானர்ஜி விருது பெறுகிறார் என்பதும் முக்கியமானது.
தற்போது எம்ஐடியில் பொருளாதாரத்துறை பேராசிரியராக உள்ளார். இவருடன் இணைந்து பரிசு பெறும் சக ஆராய்ச்சியாளரும் இவரது மனைவி எஸ்தர் டஃப்லோ, 46 வயதில் விருது பெறும் பெண் என சாதனை படைத்திருக்கிறார். இந்தியாவிலிருந்து பரிசு பெறும் 9 வது நபர் அபிஜித் பானர்ஜி.
நன்றி - டைம்ஸ் - தி கார்டியன்