சீனாவிடம் கற்போம் - விவசாயத்தில் சிறக்கும் டிராகன் தேசம்!





China GIF
giphy.com



விவசாயத்தில் சீனாவிடம் இருந்து என்ன கற்கலாம்?



இனி இந்தியாவுக்கு பாகிஸ்தான் பொருட்டில்லை. பாகிஸ்தான் பொருளாதார சிக்கலில் மூழ்கிவிட்டது. அதன் பட்ஜெட்டை விட இந்தியாவின் பட்ஜெட் அதிகம், வளர்ச்சிக்கான வேகமும் அதிகம். சீனாவைப் பார்ப்போம். சீனா, இந்தியர்களை விட குறைவான நிலத்தில அதிகளவு விவசாயம் செய்து உற்பத்தியை பெருக்கியிருக்கிறார்கள். நாம் 407 பில்லியன் உற்பத்தி என்றால் சீனர்கள் 1367 பில்லியன் டாலர்கள் மதிப்பில் உற்பத்தி செய்து வருகிறார்கள்.

சீனர்கள் 41 சதவீத நிலத்திலும், இந்தியர்கள் 48 சதவீத நிலத்திலும் விவசாயம் செய்து வருகிறார்கள். காரணம் சீனர்கள் ஆராய்ச்சிக்கு மட்டும் 7.8 பில்லியன் டாலர்களை செலவு செய்கின்றனர்.இந்தியாவில் இதன் அளவு 1.4 பில்லியன் டாலர்களாக உள்ளது. அப்புறம் எப்படி முன்னேற்றம் சாத்தியமாகும்? இந்தியாவில் இதுதொடர்பாக நடந்த ஆய்வில் விவசாயத்துறையில் செய்யும் 11.2 ரூபாய், முன்னூறுக்கும் மேற்பட்டவர்களை வறுமையிலிருந்து வெளியே கொண்டு வரும் என்று கூறுகிறது. 1990களில் நடந்த தாராயமயமாக்கள் அந்நிய முதலீடுகளை அதிகரித்தது. வியட்நாம் ரேஷரை நாம் பயன்படுத்த வைத்தது. இன்ஃபோசிஸ் போன்ற கம்பெனிகள் தொடங்கி வளர்ந்தன. ஆனால் உற்பத்திதுறை சார்ந்த முன்னேற்றங்கள் பெரிதாக வளரவில்லை.

சேவைத்துறை வளர்ந்தது என்பது நாட்டிற்கு நன்மை தரக்கூடிய விஷயமல்ல. இந்தியாவில ஹெக்டேருக்கு 166 கி.கி பயிர் வளர்ந்து அறுவடையானது என்றால் சீனாவில் 50 முதல் நாறு சதவீதம் அதிக வளர்ச்சி காணப்படுகிறது. மேலும் சீனா கடந்த ஆண்டு மட்டும் விவசாயிகளுக்கு நேரடியாக 20.7 பில்லியன் டாலர்களை பட்டுவாடா செய்திருக்கிறது. இந்திய அரசும் செய்கிறது என்றாலும் அதில் நிறைய தடுமாற்றங்கள், ஓட்டைகள் உள்ளன.

புரொட்டியூசர் சப்போர்ட் எஸ்டிமேட் எனும் முறையை உலகிலுள்ள 52 நாடுகள் பின்பற்றுகின்றன. இதன் விளைவாக, விவசாயிகளுக்கு சந்தையில் குறைந்த விலை பிரச்னை ஏற்படாமல், சீன அரசு பார்த்துக்கொள்கிறது. இதனால், விவசாயிகளின் எண்ணிக்கை குறையாமல் இருக்கிறது. சந்தையில் சரியான விலை கிடைக்காத காரணத்தினால்தான், இந்தியாவில் புதிய தலைமுறையினர் யாரும் விவசாயம் செய்வதில்லை.

சீனாவை முந்துவது அப்புறம்தான். ஆனால் நல்ல விஷயங்களை எதிரிகளிடமிருந்தும் காப்பி அடிக்கலாம். தப்பில்லை என்ற எண்ணத்திற்கு அரசு வருவது முக்கியம். இந்திய மக்கள் வெற்றிபெற, வெற்றி பெற்ற கான்செஃப்ட்களை காப்பியடிப்பது தவறு இல்லை. இம்முறையில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளாமல் பிழைத்திருப்பார்களே என்ற எண்ணத்தில்தான் இதனைக் கூறுகிறேன்.

நன்றி - ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ் -அசோக் குலாத்தி, சாக்சி குப்தா





பிரபலமான இடுகைகள்