டெக் புதுசு! - மார்க்கெட்டில் புது டெக் ஐட்டங்கள்!



Image result for iball musi boom


Image result for apple watch 5






Image result for asus rog phone 2





ஆப்பிள் வாட்ச் 5

ரெட்டினா திரை பார்க்க ரம்மியமாக இருக்கிறது. இதில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள சென்சார்களின் உதவியால் பேட்டரி  பதினெட்டு மணிநேரம் தாங்குகிறது. எங்கு இருக்கிறோம், அந்த இடத்தின் அட்ச தீர்க்க ரேகைகள் என்ன ஓடுகின்றது வரையிலும் பார்க்க காம்பஸ் உள்ளது. கீழே விழும் அபாயத்தைச் சொல்லும் அம்சமும் இதில் உள்ளது. இசை காதலர்களுக்கு இந்த வாட்ச் ரொம்ப பிடிக்கும். இசையின் தரம் அப்படி.

விலை  40 ஆயிரம்


ஹெச்டிசி வைவ் காஸ்மோஸ்

உலகம் முழுக்கவே ஏஆர், விஆர் என சென்றுகொண்டிருக்க ஹெச்டிசி அதில் அப்டேட்டாக முன்னணியில் உள்ளது.  ஆறு கேமராக்களைக் கொண்ட விஆர் செட் இது. உங்களிடம் கம்ப்யூட்டர் கேம்ஸ்களை தலைகீழாக படுத்துக்கொண்டு விளையாடும் திறன் இருந்தால் இதனை தேர்ந்தெடுக்கலாம்.

விலை - எப்படிக் கேட்டாலும் சொல்லவில்லை.


ஆசுஸ் ரோக் போன் 2

கம்ப்யூட்டர் விளையாட்டுகளை போனில் விளையாடலாம். கம்பெனி அப்படித்தான் சொல்லுகிறது. 12 ஜிபி ராம், 6.59 இன்ச் திரை, க்வால்காம் ஸ்னாப்டிராகன்  புரோசசர் 855, 6000 எம்ஏஹெச் பேட்டரி  என அசத்துகிறது. விலை 37,000


ஐபால் இயர்வியர் பேஸ் புரோ

அலெக்சாவுடன் இணைத்து பாடல்களைக் கேட்கலாம். ப்ளூடூத் 5.0 வசதி, இரைச்சலை தடுக்கும் அம்சம் ஆகியவையும் உண்டு. பேட்டரி பத்து மணிநேரம் தாங்குகிறது. மேனுவலாக மாற்றிக்கொள்ளும்படி பட்டன்களும் கொடுக்கப்பட்டிருப்பது அசத்துகிறது.

விலை - 2499

ஐபால் மியூசி பூம்

இரண்டு ஸ்பீக்கர்கள் இருந்தால் உங்கள் வீட்டை ஐமேக்ஸ் தியேட்டராக்கலாம். ஒருமுறை சார்ஜ் செய்தால் 10 மணிநேரம் பாடல்களை இசைக்கிறது. வாட்டர் ப்ரூஃப் கொண்டது.  இதனை வெளியில் போகும் போது தூக்கிச்செல்வதற்கான விஷயங்களையும் இணைத்து விற்கிறார்கள். வாங்கினால் ஜாலியாக போகுமிடமெல்லாம் சுறா பாடல்களைப் போட்டு அடுத்தவர்களை காண்டாக்கலாம்.

விலை - 14,990