ஆண்கள் கருத்தடை மாத்திரைகளை சாப்பிடலாமா?
மிஸ்டர் ரோனி
ஆண்கள் கருத்தடை மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாமா?
தாராளமாக. பெண்களே அம்மாத்திரைகளை சாப்பிட நேர்ந்துகொண்டவர்கள் என ஏன் நினைக்கவேண்டும். ஆண்கள் புரோஜெஸ்டிரான் மாத்திரைகளை குறிப்பிட்ட கால அளவு சாப்பிட்டால் விந்தணுக்களின் எண்ணிக்கை குறையும். நிரந்தரமாக குறைந்துவிடாது. குறிப்பிட கால அளவில் மட்டும் குறையும். பாலினம் மாறுபவர்கள் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் மாத்திரைகளை சாப்பிடுவார்கள். அது உடலில் பெண்தன்மையை அதிகரிக்கும். அதேசமயம் இயற்கைக்கு மாறாக ஹார்மோன் ஊசி, மருந்துகளை சாப்பிடும்போது பல்வேறு பக்கவிளைவுகளை எதிர்கொண்டே ஆகவேண்டும்.
எனவே, பெண்களுக்கான கருத்தடை பற்றி கவலைப்படாமல் ஆண்களும் இந்த சமாச்சாரத்தில் பெண்களுக்கு உதவலாம். மருத்துவரின் ஆலோசனைப்படிதான் இம்மாத்திரைகள் சாப்பிடவேண்டும் என்பதை மறக்காதீர்கள். மேலும் இன்று ஆண்களுக்கான கருத்தடை மாத்திரைகள், ஜெல்கள் என நிறைய உள்ளன. எனவே பயப்பட வேண்டாம்.
நன்றி: சயின்ஸ் ஃபோகஸ்