நேரத்தை வீணாக்கிய சாணக்கியத்தனம்! - சாணக்கியா படம் எப்படி?
சாணக்கியா
இயக்கம் - திரு
ஒளிப்பதிவு - வெற்றி பழனிசாமி
இசை - விஷால் சந்திரசேகர்
ஆஹா
கோபிசந்த் மட்டும்தான். கூடவே துணைக்கு விஷால் சந்திரசேகர். வேறு யாருமில்லை. ஒளிப்பதிவாளர் சொன்ன வேலையைச் செய்திருக்கிறார்.
ஐயையோ
மற்ற எல்லாமும்தான். மெஹ்ரின் பிர்சாதா, பாட்டுக்கான நாயகியாக மாறிவிட்டார். தன் குடும்பத்தைப் பற்றிப் பேசும் இடம் மட்டும்தான் தேறுகிறது. ஹீரோ எப்போதும் தன் நண்பர்கள் சகிதமாக இருக்கிறார். அவர்களுக்காக சண்டை போடுகிறார். ஓடுகிறார். அடிக்கிறார். ரா தலைவருக்கே கட்டளைகள் பிறப்பிக்கிறார்.
கதை: நண்பர்களைக் காப்பாற்றும் ரா ஏஜெண்டின் கதை. எப்படி இருக்க வேண்டும் என நினைப்பீர்களோ அப்படியெல்லாம் இல்லை. கதையும் பிரமாண்டம் என்றால் படத்தையும் அப்படித்தானே எடுக்கவேண்டும்? படத்தில் எந்த விஷயமும் அப்படி இல்லை. குத்துப்பாடலில் அறிமுகமாகும ஜரின் கானைக்கூட ஏற்றுக்கொள்ளலாம். மெரினை இம்மியளவும் ஏற்க முடியவில்லை. திணிப்பாகவே இருக்கிறது. பின்னே பாட்டு வெச்சாச்சு. அதுக்கு ஒரு பொண்ணு வேண்டாமா என்ற கேள்விக்கு நம்மிடம் பதில் இல்லை. அலி, சுனில் ஆகியோரை வீணடித்து இருக்கிறார்கள். டெம்ப்ளேட் தேசபக்தி படம். சொல்ல வேறெதுமில்லை.
படம் பார்ப்பது உங்கள் விருப்பம். இந்த படத்தின் வீடியோ சாங்குகளை மட்டுமே பார்த்தால் போதும் என்பது எங்கள் கருத்து.
-கோமாளிமேடை டீம்