ஆபத்தான உணவுக் கலாசாரம்! - நூடுல்ஸ் கலவரம்!





doritos eating GIF


ஆம். படத்தில் இருப்பது உண்மை. என்ன உடனே நாம் ஒத்துக்கொள்ள மாட்டோம். இந்தியர்கள் பொதுவாக தின்பண்டப் பிரியர்கள். தின்பதில் வஞ்சனை இல்லாத ஆட்கள். நான் 2 ஸ்டேட்ஸ் நூலில் தமிழர்களின் அரசியலோடு பஞ்சாபியர்களின் பால் பொருட்களின் மீதான  பாசத்தையும் எழுதியிருப்பேன். காரணம், உணவுதானே நம் உடலாகிறது. அதனை எப்படி பேசாமல் இருப்பது எழுதாமல் இருப்பது?

2015 ஆம் ஆண்டு மே மாதம் சுவிட்சர்லாந்து நிறுவனமான மேகி நூடுல்ஸ் மீது கடும் குற்றச்சாட்டு ஏவப்பட்டது. அதில் நூடுல்ஸில் காரீயம் அதிகமாக இருப்பதாக கூறப்பட்டது. அப்புறம் என்ன? அதைப் பயன்படுத்திக்கொண்டது பதஞ்சலி நிறுவனம்.  இந்த நேரத்தில் ராம்தேவ் தொடங்கிய பதஞ்சலி நிறுவனம் பூதாகரமாக சுதேசி வியாபாரத்தை தொடங்கியது. தேசிய உணர்ச்சி பொங்கியவர்கள் பதஞ்சலியைப் பின்தொடர்ந்தனர். பின் அதன் தரத்தைப் பார்த்து திகைத்தவர்கள் தானாகவே பன்னாட்டு நிறுவனத்திற்கு திரும்பினர். பேச்சுலர்களின் முக்கியமான உணவான மேகி நூடுல்ஸ் இந்த இடைப்பட்ட காலத்தில் நிறைய வாடிக்கையாளர்களை இழந்தது. 


bowl noodles GIF


சுதேசி நிறுவனமான பதஞ்சலி,  கோமாதா சோப் என பசுவின் கோமியத்தில்  சோப்பு தயாரித்து விற்று வருகிறது. அதைவிடுங்கள். இவர்கள் அச்சமயத்தில் வெளியிட்ட விளம்பரங்கள் கடுமையாக பன்னாட்டு நிறுவனங்களை வம்புக்கு இழுத்தன. அதற்கும் அவை பதில் சொல்லி தங்கள் நிரூபித்தன. இன்று மேகி நூடுல்ஸ் யார் வாங்கவில்லை என்று சொல்லுங்கள். 2015ஆம் ஆண்டு மேகி நூடுல்ஸ்,  பல்வேறு மக்கள் விழிப்புணர்வு விளம்பரங்களை வெளியிட்டது. அதை நாம் காசு கொடுத்து வாங்கிப்படிக்கும் நாளிதழில் நாமே படிக்கும் துரதிர்ஷ்டமும் வாய்த்தது.

நூடுல்ஸ் என்பதே மைதா எனும் உடலுக்கு ஆபத்தான பண்டம் என்பதை குற்றம் சாட்டியவர்கள் மறந்துவிட்டார்கள்.  அதன் ரெடிமிக்ஸில் சோடியம் இருந்தது, சாம்பல் இருந்தது  என குற்றம் சாட்டி செய்தித் தாள்களுக்கு பேட்டி கொடுத்தனர். நான் அவர்களைக் குறை சொல்லவில்லை. அடிப்படையாக மக்கள் மீதான அக்கறை எப்படி மாறிச்செல்கிறது என்று சொன்னேன். 

காட்பரி நிறுவனத்தின் சாக்லெட்களில் கூட  புழு இருப்பதை குறையாக கூறினர். உலகம் முழுக்க சாக்லெட்டைத் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனம் அது.  விற்ற பல கோடி டன் சாக்லெட்டுகளில் இரண்டில்தான் பழுதாயின என்பதை அந்நிறுவனம் உணர்ந்தது. ஆனால் நம்பிக்கை முக்கியமாச்சே! உடனே அமிதாப் பச்சன் அவர்களது தொழிற்சாலைக்கு வந்து சாக்லெட் தயாரிப்பை பார்த்து அவர்களது சாக்லெட்டை சுவைப்பது போல விளம்பரம் தயாரித்து வெளியிட்டது. 

தன் குறைகளை ஏற்று அப்பிரச்னை ஏற்படாமல் தன்னை தயாரித்துக்கொண்டது காட்பரி. இன்றும் வெற்றிகரமான நிறுவனமாக விளங்கி வருகிறது. நான் கூற வந்த விஷயம், மேற்சொன்ன காரீயம், பொட்டாசியம்,சமாச்சாரங்கள் நீங்கள் சாதாரணமாகப் பாக்கெட்டைப் பார்த்தாலே புரிந்துகொள்ள முடியும். 

உங்களுக்கு குச்சிக்கிழங்கு சிப்ஸ் தேவையா, நேந்திரம் சிப்ஸ் தேவையா, உருளைக்கிழங்கு சிப்ஸ் தேவையா என தெரிந்திருக்க வேண்டும். நிறுவனத்தை குறை சொன்னால் ஆரோக்கியம் திரும்பி வந்துவிடாது.செலவழித்த பணம் பாக்கெட்டில் வந்து உட்காராது. உணவு விஷயத்தில் நான் முன்னமே சொன்னதுபோல நாம்தான் முடிவெடுக்க வேண்டும். காரணம், நம் உடலில் நாம் சாப்பிடும் உணவுதான் சதை, ரத்தமாகிறது. இறுதியில் நம் எண்ணமும் ஆகிறது. அதில் கவனமில்லாமல் இருந்தால் எப்படி?


எனவே வடாபாவ், பானிபூரி, சிப்ஸ் என அனைத்தையும் தரமான நிலையில் வாங்கி சாப்பிடுவோம். சந்தோஷமாக இருப்போம். 

சேட்டன் பகத்தின் மேக்கிங் இந்தியா ஆசம் நூலைத் தழுவியது. 
















பிரபலமான இடுகைகள்