கலவரம் போர் என இரண்டிலும் தப்பி பிழைப்பது எப்படி?
எப்போதுமே ஆபத்து நேரும் என விழிப்புணர்வோடு இருங்கள் என ஹூவாய் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் நிறுவனர் ரென் கூறியுள்ளார். அப்படியான விழிப்புணர்வு சாதி, மதத்தால் உடைந்து நொறுக்கிப்போயுள்ள பெயரளவு ஜனநாயகம் கொண்ட இந்தியாவுக்கும் பொருந்தும். இங்கு எப்போது எந்த மேல்சாதிக்காரன், பழங்குடிகளை, தாழ்த்தப்பட்டவர்களை, தலித்துகளை தீ வைத்து எரிப்பான், அந்த இன பெண்களை வல்லுறவு செய்து கொன்று மரத்தில் தூக்கிக்கட்டுவான் என்று தெரியாது. பாதிக்கப்பட்டவர்களே குற்றவாளிகளாக்கி தண்டனை வழங்குவது இந்திய காவல்துறையின் தனிச்சிறப்பு. இப்படியான பண்பட்ட தேசத்தில் நீங்கள் விழிப்புணர்வோடு இருந்தால் மட்டுமே உங்களைக் காத்துக்கொள்ள முடியும். கூடவே சொத்துகள், குடும்பம் ஆகியவையும் அழியாமல் காக்கலாம். வாட்ஸ்அப் வழியாக மதவாத அரசு சுயமாகவே தனித்தனி குழுக்களை வைத்து போலிச்செய்திகளை பரப்பி வருகிறது. எனவே, இதைக்குறித்து அறிந்து கொண்டு கலவரத்தில் சிக்காமல், வீடு, தொழிற்சாலை, கடை எரிக்கப்படாமல் பார்த்துக்கொள்வது அவசியம். இந்தியாவில் இயற்கை பேரிடர்களை, மதவாதிகள் உருவாக்கும் பேரிடர்களே அதிகம். எனவே, விழிப்போடு மீதமுள்ள நேர்மையான ஊடகங...