இடுகைகள்

பாய்சன் ஐவி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அல்சீமர் நோயின் அறிகுறிகள்!

படம்
  அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி அல்சீமர் நோயின் அறிகுறிகள் என்னென்ன? ஒரே கேள்வியை திரும்பத் திரும்ப கேட்பது, ஒரே கதையை திரும்ப கூறுவது, கூறிக்கொண்டே இருப்பது, சமைப்பது, பழுதுபார்ப்பது போன்ற வேலைகளை மறந்துபோவது, திசை, முகவரி தெரியாமல் தடுமாறுவது, கட்டணம் செலுத்துவதை மறப்பது, குளிப்பதை மறப்பது, ஒரே உடையை அப்படியே அணிந்திருப்பது, இன்னொருவரின் முடிவுக்காக காத்திருப்பது, இன்னொருவரை சார்ந்திருப்பது. புற்றுநோயின் வகைகள் என்னென்ன? கார்சினோமா, சர்கோமா, லுக்குமியா, லிம்போமா பாய்சன் ஐவி செடியை தொட்டவுடன் ஒவ்வாமை பாதிப்பு ஏற்படுமா? 85 சதவீதம் பேருக்கு ஒவ்வாமை பாதிப்பு ஏற்படுகிறது. தோலில், உடையில் பாய்சன் ஐவி இலைகள் பட்டால், அந்த இடத்தை மென்மையான சோப்பு போட்டு கழுவவேண்டும். ஒவ்வாமை காரணமாக தலைவலி, காய்ச்சல், உடல் பலவீனம் ஏற்படலாம். இந்த பாதிப்பு ஆறு மணிநேரத்திற்கு நீடிக்கும். நன்றி சயின்ஸ் ஹேண்டி புக்

பாய்சன் ஐவி தாவரம் ஏற்படுத்தும் ஒவ்வாமை பாதிப்புகள்!

படம்
        அறிவுப்பற்று மிஸ்டர் ரோனி சல்பைட்டுகளால் ஏற்படும் ஒவ்வாமை பாதிப்பு என்ன? உலர் பழங்கள், புதிதாக பறிக்கப்பட்ட காய்கறிகள், ஒயின் வகைகள் ஆகியவற்றில் சல்பைட்டுகள் சேர்க்கப்படுகின்றன. சல்பைட்டுகள், பொருட்கள் கெட்டுப்போகாமல் காக்கின்றன. நுண்ணுயிரிகளை அழிக்கின்றன. ஒவ்வாமை உள்ளவர்களுக்கு சல்பைட்டுகள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. சல்பைட்டுகள், உடலுக்குள் செல்லும்போது மூச்சு திணறல் ஏற்படும். சுயநினைவை இழந்து கீழே வீழ்வார்கள். அனபைலாடிக் ஷாக் பாதிப்பு ஏற்படும். உடனே மருத்துவ உதவிகளை செய்யவேண்டும். மாரடைப்பை மருத்துவத்தில் எப்படி குறிப்பிடுகிறார்கள்? மையோகார்டியல் இன்ஃபார்க்சன். இதய தசைகளுக்கு ரத்தம் செல்லாமல் தடுக்கப்படும்போது, அந்த செல்கள் இறந்துபோகின்றன. இதனால் உண்டாவதே மாரடைப்பு. அமெரிக்காவில், ஒருமுறை மாரடைப்பு வந்துவிட்டால் நோயாளிகளில் 33 சதவீதம் பேர் அடுத்த இருபது நாட்களில் மரணித்து விடுகிறார்கள். உடனே இறந்துபோகிறவர்களின் எண்ணிக்கையும் இப்போது அதிகரித்து வருகிறது. உடலை குறிப்பிட்ட இடைவேளையில் சோதித்துக்கொள்வது நல்லது. மாரடைப்பு அபாயத்தை முன்னரே கண்டறிந்தால் சிகிச்சை ...