போர்க்குணத்துடன் வெளிப்படையான பேச்சின் தேவை!
போர்க்குணத்துடன் வெளிப்படையான பேச்சின் தேவை! சுவாரசியமான போக்கு நம் நாட்டின் அரசியலில் தொடங்கியிருக்கிறது. பிடிவாதமும், போர்க்குணமும் கொண்ட அரசியல்வாதிகள் உருவாகி வருவதுதான் அது. இந்தியாவின் பெரும்பாலான முக்கிய முன்னாள் இந்நாள் முதலமைச்சர்களான நரேந்திரமோடி, நிதீஸ்குமார், ஜெயலலிதா, மாயாவதி, மம்தாபானர்ஜி, ஷீலா தீக்ஷித் ஆகியோர் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்ற தனித்தன்மையான, கருத்துகளைக்கொண்ட ஆளுமைகள் எனலாம். இந்நிலை, ஒரேமாதிரியான எப்போதும் பேசாத (அ) கட்டாயப்படுத்தினால் பேசக்கூடிய அதனை யாரிடமும் கலந்து பேசாத ராஜதந்திர தன்மைக்கு முழுமையாக எதிராக உள்ளது. காங்கிரஸ் கட்சியில் அமைதியான ஒரேமாதிரியான தன்மை வெற்றிகரமான மர்ம நிலைப்பாடாக கடந்த இருபது ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட தலைவர்கள் இதனை மறுபரிசீலனை செய்யவேண்டிய நேரம் இதுவே. மிகச்சிறந்த முதல்வர்களில் ஒருவராக இந்திய வாக்காளர்களை ஒன்றிணைக்க நினைத்தால் வெளிப்படையாக பேசவேண்டும். இதற்கான மிகச்சிறந்த செவ்வியல் உதாரணமாக காலங்கடந்த மௌனத்தலைவராக ஐந்து ஆண்டுகள...