இந்தியா டுடே சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியல்! ரகுராம் ராஜன், அபிஜித் பானர்ஜி, ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி மற்றும் பலர்..
abhijeet banerjee |
raghuram rajan |
இந்தியா டுடே சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியல்
ஆர்.சி. பார்க்கவா 86
தலைவர், மாருதி சுசுகி
அண்மையில் தனது வாழ்க்கை தொழில் அனுபவங்களை கெட்டிங் காம்பெட்டிட்டிவ் ஃபார் இந்தியா என்ற நூலாக எழுதி வெளியிட்டுள்ளார். இதில் இந்தியாவை வலிமையாக்குவது பற்றியும் கூறியுள்ளார்.
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான பார்க்கவா முப்பதாண்டுகளா மாருதி சுசுகி நிறுவனத்தை வழிநடத்தி வருகிறார். இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாகவும், அதிகம் விற்பனையாகும் ஐந்து கார்களில் நான்கு கார்கள் மாருதிக்கு சொந்தமாக இருக்கவும் பார்க்கவாவின் அயராத உழைப்பே முக்கியமான காரணம்.
மாருதி அண்மையில் குறிப்பிட்ட தொகைக்கு கார்களை வாடகைக்கு எடுத்துக்கொள்ளும் சந்தா திட்டத்தை தொடங்கியுள்ளது. இதுபோல வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப, காலமாற்றத்தோடு இணைந்து பயணிக்கும் பார்க்கவாவின் முடிவுகள் மாருதியை எப்போது உயரத்தில் வைத்துள்ளன.
வணிக வரலாறு தொடர்பான ஆழமான அறிவு கொண்டவர். மேலும் பொருளாதாரம் வணிகம் பற்றி ஊடகங்களில் தொடர்ச்சியாக உரையாடி வருகிறார்.
ஆனந்த் மகிந்திரா |
ஆனந்த் மகிந்திரா
65
தலைவர், மகிந்திரா குழுமம்
1.4 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனத்தை வைத்திருக்கிறார். இதோடு ஐ.டி, நிதி நிறுவனங்கள், விடுமுறை சுற்றுலா நிறுவனங்கள் ஆகியவற்றையும் வைத்திருக்கிறார். இந்தியாவில் நடைபெறும் பல்வேறு இசை விழாக்களுக்கு மகிந்திரா நிறுவனம்தான் நிதியுதவிகளை வழங்கி வருகிறது. நடப்பு கால நிகழ்வுகளோடு எப்போதும் இணைந்து பயணிக்கிறார். ட்விட்டரில் எப்போது தீவிரமாக இயங்கி வருகிறார்.
இன்றுவரையும் ஆண்டுக்கு 3 லட்சம் ட்ராக்டர்களை உலகமெங்கும் விற்று வருகிற பெருநிறுவனம் மகிந்திராதான்.
கோவிட் -19 தொடர்பான பல்வேறு பணிகளுக்கு நிதியுதவிகளை வழங்கினார். தனது தொழிற்சாலையிலேயே மாஸ்க், சானிடைசர்களை தயாரித்து அரசுக்கு வழங்கினார். டெக் மகிந்திரா மூலம் டிஜிட்டல் சுகாதார வசதிகளை உருவாக்கியுள்ளார்.
மகிந்திரா தொடங்கி அக். 2உடன் 75 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. இதையொட்டி தார் எஸ்யூவி 2 வாகனத்தை அறிமுகப்படுத்தினார். தொழில்முயற்சிகளில் பல்வேறு புதுமைகளை புகுத்துவது இவரின் பாணி. வெற்றியோ தோல்வியோ முயன்று பார்த்துவிடுவது ஆனந்திற்கு மிகவும் பிடிக்கும். அந்த வகையில் தனது பேரனிடமிருந்து இப்போது ஸ்பானிஷ் மொழியைக் கற்று வருகிறார்.
சஞ்சீவ் பூரி
58 தலைவர், ஐடிசி
பிரிட்டானியா, நெஸ்லே ஆகிய நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக உணவுப்பொருட்களை தயாரிக்கு்ம பெரிய தொழிற்சாலைகளைக் கொண்டுள்ள நிறுவனம் ஐடிசி.
தற்போது அரசு கொண்டு வந்துள்ள விவசாய சட்டங்களை பணமாக்கிக்கொள்ளும் அளவுக்கு பல்வேறு கிடங்குகளை முன்னமே கட்டிவைத்துவிட்ட நிறுவன் ஐடிசி. சூபால் எனும் பெயரில் விவசாயிகளுக்கான வானிலை, பயிர்களின் கண்காணிப்பு தொடர்பான பல்வேறு சேவைகளை ஐடிசி உருவாக்கி வைத்துள்ளது. பஞ்சாபின் காபூர்தலாவில் நாட்டிலேயே பெரிய உணவுப்பூங்காவை உருவாக்கி வைத்துள்ளது.
சஞ்சீவ் பூரி, ஐடிசி நிறுவனத்தில் பணியாற்றி மெல்ல படிநிலையில் உயர்ந்து தலைவராக மாறியுள்ளார். தினசரி 30 நிமிடங்கள் யோகா செய்து வருகிறார்.
3
விஜய் சேகர் சர்மா
42
நிறுவனர், இயக்குநர், பேடிஎம்
2017ஆம் ஆண்டில் போர்ப்ஸ் பட்டியலில் பணக்கார ர் என்று அறிவிக்கப்பட்ட பெருமை உடையவர் சேகர். பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பெரும் பயனடைந்த நிறுவனங்களில் பேடிஎம்மும் ஒன்று. இன்று இவரின் நிறுவன மதிப்பு 16,800 கோடி.
நாட்டில் முதல் முறையாக மொபைல் வாலட் என்ற கருத்தை டிஜிட்டலில் அமல்படுத்தி வெற்றிகண்டார். ரொக்கமாக கொடுத்து வாங்கும் மக்களின் வழக்கத்தை மாற்றி அமைத்த சாதனை இவருடையது. இதற்கு சாட்சியாக இன்று பெட்டிக்கடை முதல் சூப்பர் ஸ்டோர் வரை தொங்கும் பேடிஎம் வழி பணப்பரிமாற்ற விளம்பரங்களே உள்ளன. பேடிஎம்மிற்கு இன்று 450 மில்லியன் பயனர்கள் உள்ளனர். கூகுளின் பிளே ஸ்டோரை எதிர்த்து இவர் உருவாக்கிய மினி ஆப் ஸ்டோர் முக்கியமான முயற்சி. இவரின் நிறுவனத்திற்கு அலிபாபாவின் முதலீடு பக்கத்துணையாக உள்ளது.
பேடிஎம் கார்ப்பரேட் அலுவலகத்தில் வாசலில் பெரிதாக தேடு அல்லது வீட்டுக்குப் போ என எழுதி வைக்கப்பட்டுள்ளது.
4
டாக்டர் நரேஷ் டிரேகான்
74
தலைவர் இயக்குநர்
மெலந்தா ஹார்ட் இன்ஸ்டிடியூட்
பெருந்தொற்று காலத்தில் நன்கு வளர்ந்த மருத்துவமனைகளில் நரேஷின் மருத்துவமனையும் ஒன்று. இங்கு சிகிச்சை எடுத்தவர்கள் நலம்பெற்றுச்செல்லும் எண்ணிக்கை அதிகம். தோராயமாக 90 சதவீதம். உள்துறை அமைச்சர் அமித்ஷா கூட இங்குதான் சிகிச்சை எடுத்துக்கொண்டார். டெஸ்லா எம்ஆர்ஐ, சைபர் நைப் ஆகிய புதிய வசதிகளை மருத்துவமனையில் வைத்திருக்கின்றனர்.
நரேஷ் இதுவரை 48 ஆயிரம் இதய அறுவை சிகிச்சைகளை செய்திருக்கிறார். இவருக்கு அரசு பத்ம ஶ்ரீ, பத்ம பூசன் விருதுகளை அளித்துள்ளது.
சேட்டன் பகத் 46
எழுத்தாளர்
கோமாளிமேடையில் அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட கட்டுரைகள் இவருடையதுதான். இந்தியாவில் ஆங்கிலத்தில் எழுதப்படும் எழுத்தாளர்களில் செம மாஸ் காட்டுவது இவர் ஸ்டைல். புத்தக வெளியீட்டு விழாவே சினிமாவின் முதல் காட்சி போல அமளி துமளிப்படும். ஒன்பதாவது நூலாக ஒன் அரேஞ்சுடு மேரேஜ் என்ற நாவலை எழுதியிருக்கிறார். மெல்ல காதல் செக்ஸ் விஷயங்களிலிருந்து டிராக் மாற்றி சாகச நாவலுக்கு செல்லும் முயற்சி என பேட்டிகளில் சேட்டன் பகத் கூறியுள்ளார். வெளியானது முதல் இப்போது வரை இணைய தளங்களில் நெ.1 ஆக உள்ளது.
நெட்பிளிக்ஸ் தொடர் ஒன்றில் எழுத்தாளராகவே நடிக்கவிருக்கிறார் என்பது புதிய செய்தி. நாவல்கள், கட்டுரைகள் எழுதுவது கடந்து டைம்ஸ் ஆப் இந்தியாவில் நடுப்பக்க கட்டுரைகளை சுவாரசியமாக எழுதி வருகிறார். நடப்பு கால விஷயங்கள், பொருளாதார பிரச்னைகளை பற்றி எழுதும் தாராளவாதி எழுத்தாளர் இவர். இளைஞர்கள் இவர் எழுப்பும் கேள்விகளை கவனித்து கேட்கிறார்கள் என்பதற்கு இவர் பின்னே திரளும் இளைஞர் கூட்டமே சாட்சி.
depinder goyal |
depinder goyal
ஸோமாடோ
உணவுகளை வாங்கவேண்டாம். வீட்டுக்கே கொண்டு வந்து தருகிறோம் என்று யாராவது இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் சொல்லியிருந்தால் பலரும் நம்பியிருக்கமாட்டார்கள். இன்று அதனை சாத்தியப்படுத்தி வெற்றிகளை குவிக்கிறது ஸோமாடோ. உபர் ஈட்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்தியிருக்கிறது. உணவு விநியோகப்பிரிவில் இன்று ராஜாதி ராஜா என்றால் அது ஸோமாடோதான்.
பெருந்தொற்றில் முதலில் சற்று தேக்கம் காட்டினாலும் பின்னர் உணவுப்பொருட்கள், மருந்துகள் , காய்கறிகள் என அனைத்தையும் நூறு நகரங்களுக்கு கொண்டுபோய் சேர்க்கும் பணியை ஸோமாடோ ஏற்றது. மாதவிடாய்க்காக பெண்களுக்கு பத்து நாட்கள் விடுமுறை கொடுத்த நிறுவனம். உலகம் முழுக்க 24 நாடுகளுக்கு தொழிலை விரிவுபடுத்தியுள்ளது.
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் படித்து வளர்ந்தவர். இவரது நண்பர் ஆன்லைனில் உணவு தேடி கஷ்டப்படுவதைப் பார்த்துதான், உணவு விநியோக முறையை உருவாக்க நினைத்திருக்கிறார்.
மம்தா பானர்ஜி
மேற்கு வங்கத்தின் அக்கா. பாஜகவை எதிர்க்கும் காங்கிரஸ் கட்சியல்லாத வலிமையான தலைவி. மத்திய அரசை உள்ளே விடாமல் கறாராக மாநில உரிமைகளை கைவிடாமல் ஆட்சி நடத்தும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவி. மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பள வெட்டு இல்லாமல் பார்த்துக்கொண்டதோடு பென்சனும் கூட சரியான நேரத்தில் கிடைக்கும் என்று கூறி செயல்படுத்திக் காட்டிய வெற்றிகரமாக தலைவர்.
கோவிட் 19 இறப்பு தொடர்பாக இவர் அரசு வெளியிட்ட டெம்பிளேட் எண்ணிக்கை அறிக்கைகளை பலரும் விமர்சித்தனர். ஆனால் பிறகு பல்வேறு மாநிலங்களும் அப்படியே பின்பற்றத் தொடங்கிவிட்டன.
துர்கா பூஜைக்கான ஏழு பாடல்களை தீதி உருவாக்கியுள்ளார். ஒரு பாடலை பாடிய வீடியோவை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
ராகுல்காந்தி
ராகுல்காந்தி |
50
காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்.
பாஜகவின் பல்வேறு திட்டங்களைப் பற்றி நேர்மையாக விமர்சிக்கும் ஒரே எதிர்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர். இவரைச் சமாளிக்கவே பாஜகவின் டிஜிட்டல் ஆர்மி தனது சக்தியை பெருமளவு செலவு செய்கிறது. பெரும்பாலும் டிவிட்டரில்தான் தனது கருத்துகளை வெளியிடுகிறார்.
பெருந்தொற்று காலத்தில் உலகளவில் முக்கியமான துறை ஆளுமைகளை காணொலி வழியாக சந்தித்து பேசினார். இவர் பேசும் எந்த விஷ
யத்திற்கும் உடனடியாக பாஜக அமைச்சர்களிடமிருந்து பதில் கிடைத்துவிடும் என்பது இவரின் முக்கியத்துவத்தை உங்களுக்கு உணர்த்தும்.
எதிர்கட்சி தலைவர்கள் எந்தளவு இழிவுபடுத்தினாலும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தனது கருத்துகளை முன்வைக்கும் திறன் கொண்டவர். ஜான்சி சோனேபாட் ஆகிய நகரங்களுக்கு இடம்பெயர் தொழிலாளர்கள் செல்ல வாகனங்களை ஏற்பாடு செய்தார் ராகுல். இதனை டில்லி போலீசார் ஆட்சேபித்தனர். அதற்கு அவர்களின் சுமைகளை தூக்கிக்கொண்டு நடந்துசெல்வேன் என பதில் சொல்லி அவர்களை அதிர வைத்தார்.
ரிஷி சுனக்
40
சான்சலர் ஆப் எக்ஸ்செக்யூர், இங்கிலாந்து
இங்கிலாந்தில் கோவிட் -19 விவகாரத்தை பிரதமர் போரிஸ் ஜான்சனை விட சிறப்பாக செயல்பட்டு சமாளித்த இந்தியர். பொதுமக்களின் பணத்தைப் பயன்படுத்தி வேலைவாய்ப்பு இழப்பை தடுத்து மக்களைக் காப்பாற்றிய அரசியல்வாதி. இத்தனைக்கும் இவருக்கு ஐந்தாண்டு அரசியல் அனுபவம்தான் உண்டு.
1970ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு சான்சலர்களில் யாரும் ரிஷி அளவுக்கு பிரபலம் ஆகவில்லை. மக்களுக்கே இவரைப் பிடிக்குமளவு இவரது செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன.
கிழக்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த அகதிகளுக்கு பிறந்தவர் ரிஷி. பின்னாளில் ஸ்டான்போர்டில் படிப்பில் சிறந்த மாணவரும் கூட. அங்குதான் தன் எதிர்கால மனைவி அக்ஷதாவைச் சந்தித்தார். கோல்ட்மேன் சாக்ஸில் பணியாற்றினார். பின்னாளில் யார்க்ஷையரில் உள்ள ரிச்மாண்டில் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பல்வேறு பிரச்னைகளுக்கும், அழுத்தங்களுக்கும் ஈடுகொடுத்து அமைதியாக இருப்பது இவர் பாணி. இதனால் கன்சர்வேட்டிவ் கட்சியிலிருந்து ஒருவர், ஆங்கிலேயே இந்திய பிரதமராக இவர் எப்போது வருவார்? என்றே சபையில் கேட்டிருக்கிறார்.
சுந்தர் பிச்சை
48
இயக்குநர், ஆல்பபெட், கூகுள்
2019ஆம் ஆண்டு லாரி பேஜ், செர்ஜி பிரின் நிறுவன இயக்குநர் பொறுப்பை துறந்தபிறகு சுந்தர் பிச்சை அந்த இடத்தை நிரப்பியுள்ளார்.
இந்தியாவிற்கென இருபது தனித்துவமான திட்டங்களை உருவாக்கியுள்ளார். இதற்காக 10 பில்லியன் டாலர்கள் நிதியை ஒதுக்கியுள்ளார். கருப்பினத்தவர்களுக்கான ஆதரவு தெரிவித்த முதல் கார்ப்பரேட் இயக்குநர் சுந்தர்பிச்சைதான்.
2020ஆம் ஆண்டிற்கான டைம் பட்டியலிலும் இடம்பெற்றிருக்கிறார். கூகுள் தனி நிறுவனமான போட்டி நிறுவனங்களை முடக்குவதற்காக அதன் மீது அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதனை சந்திக்கும் சவாலும் சுந்தருக்கு உள்ளது. இதேபோன்ற வழக்கு மைக்ரோசாப்ட் மீதும் முன்னர் தொடரப்பட்டது. ஆனால் அந்த வழக்கில் மைக்ரோசாப்ட் வெற்றிபெறமுடியவில்லை.
அஜய் சிங் பங்கா
தலைவர், இயக்குநர்
மாஸ்டர் கார்டு
நான் பத்து ஆண்டுகள் மட்டும்தான் நிறுவனத்தின் இயக்குநராக இருப்பேன் என்று சொல்லிவிட்டு பதவிக்கு வந்தவர். 2021ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியோடு பதவி விலகவிருக்கிறார். அதையும் நிறுவனப் பணியாளர்கள் போர்டுக்கு அறிவித்து விட்டார். எக்சிகியூட்டிவ் தலைவராக நிறுவனத்தில் தொடருவது அவரது திட்டம்.
இவர் பதவி ஏற்கும்போது மாஸ்டர் கார்டின் வருமானம், 26.5 பில்லியன் டாலர்கள். இப்போது 301 பில்லியன் டாலர்கள் வருமானம் கொட்டும் நிறுவனமாக மாறியுள்ளது.
சூழலுக்கு உகந்த மாஸ்டர் கார்டு திட்டங்கள் என்பதை அறிவித்து பலரையும் கவனிக்க வைத்துள்ளார். தொடக்க காலத்தில் இவர் அறிவித்த டீசன்சி கொட்டேஷன்ஸ் எனும் திட்டம் மிகப்பெரும் வெற்றி பெற்ற ஒன்று.
ரகுராம் ராஜன்
57, சிகாகோ பல்கலைக்கழக பொருளாதார பேராசிரியர்.
பேசுவது அனைத்தும் நிதி சார்ந்துதான் என்றாலும், அதில் தனக்கு பிடித்தது, பிடிக்காத து என வேறுபாடின்றி பேசுவது ரகுவின் ஸ்டைல். வங்கிகளை நிதிச்சுமை, வாராக்கடன் ஆகியவற்றிலிருந்து காப்பாற்ற தன்னால் முடிந்தளவு முயற்சிகளை செய்தவர். அதற்காக அரசை பகைத்துக்கொள்ளவும தயங்கவில்லை. எனவே பாஜக அரசு இவரை நீக்கிவிட்டு தனக்கு உவப்பான ஆட்களை ரிசர்வ் வங்கியின் தலைவராக்கிக் கொண்டது.
கோவிட் -19 தொடர்பான பாதிப்பை பற்றி நேரடியாகவே பேசினார். சுதந்திரத்திற்கு பிறகு இந்தியா எதிர்கொள்ளும் முக்கியமான அவசர நிலை என மிகச்சரியாக கணித்து ஏப்ரல் மாதமே சொல்லியிருந்தார். அவர் சொன்னளவு சேதங்கள் அப்படியே அரசியல்வாதிகளின் செயல்பாடின்மையால் நேர்ந்தன.
இவரது பேச்சைப் பார்ப்பவர்கள் பலருக்கும் அரசியலுக்கு வருவாரோ, அதற்குதான் இப்படி உண்மையை படீரென போட்டு உடைக்கிறாரோ என்று கூட தோன்றும். ஆனால் அதற்கு பதிலாக, என் மனைவி நான் அரசியலுக்கு சென்றால் என்னை விட்டு பிரிந்துவிடுவதாக முன்னமே சொல்லிவிட்டார். எனவே எனக்கு அரசியலுக்கு வருவதில் விருப்பமில்லை என தூய்மையான குடும்பத்தலைவராக பதில் சொல்லியிருக்கிறார்.
பிரீத்தி படேல்
48
இங்கிலாந்து உள்துறை அமைச்சர்
தீவிரவாதம், அகதிகள் பிரச்னை ஆகியவற்றை தீவிரமாக எடுத்துக்கொண்டு செயல்பட்டு வருகிறார். எந்த விமர்சனங்களும் இவரை ஏதும் செய்யமுடியவில்லை. இவரை பிரதமர் போரிஸ் ஜான்சனின் காது என்று குறிப்பிடுகின்றனர். இவரை யாராவது கிண்டல் செய்து விமர்சனம் செய்தால் போரிஸ் ஜான்சன் உடனே இவரை காப்பாற்றுகிறார். பல்வேறு வெள்ளையர்கள் உள்ள சபையில் பிரீத்தி படேல் தைரியத்துடன் செயல்பட்டு வருகிறார். இ
பிரித்தீ படேலின் பெற்றோர் உகாண்டாவிலிருந்து வெளியேறி இங்கிலாந்திற்கு 1960 வாக்கில் வந்தவர்கள். அப்போது அகதிகளுக்கு எதிரான மனநிலை இங்கிலாந்தில் நிலவியது. பெற்றோர் இங்கிலாந்தில் எதிர்கொண்ட நிலையை கவனித்துதான் அரசியல் சார்ந்த விஷயங்களை பிரீத்தி படேல் கற்றுக்கொண்டிருக்கிறார்.
அபிஜித் பானர்ஜி
59
எம்ஐடி பொருளாதார பேராசிரியர்.
வறுமையை எப்படி அளவீடு செய்வது என பல்வேறு கணக்கிடல் முறைகளை உருவாக்கியவர்.
கோவிட் -19 பிரச்னையை மோசமான முறையில் எதிர்கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று என பாரபட்சமில்லாமல் பேசினார். அரசு இழப்பீடாக மக்களுக்கு வழங்கிய தொகையும் கூட குறைவு என்பதையும் சொல்லிவிட்டார்.
அனைத்து இந்தியர்களுக்கும் ரூ.1000 வழங்க கோரினார். ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை விரிவாக்க வலியுறுத்தினார். அபிஜித்தின் பெற்றோர்கள் இருவருமே பொருளாதார வல்லுநர்கள். இவரது முறையை கோல்கட்டா அரசு கையாண்டு வறுமையில்வாடும் மக்களின் அளவைக் குறைக்க முயன்றது.
கருத்துகள்
கருத்துரையிடுக