இசட் டிரக்ஸ் - தூக்கமாத்திரைகளை ஒழுங்குமுறை செய்வதன் அவசியம் என்ன?

 

 

 

"Sleep Aids" or Z-drugs | Inner Compass Initiative

 

 

இசட் டிரக்ஸ்


தூக்கமின்மைக்கு மருத்துவர்கள் வழங்கும் மருந்துகளை இசட் டிரக்ஸ் என்று அழைக்கின்றனர். ஸோல்பைடம், ஸோபிகுளோன், ஸால்ப்ளோன் ஆகிய மருந்துகள் ஆம்பியன், இன்டர்மெஸோ, சோனாடா என்ற பெயரில் விற்கப்படுகின்றன. 1980களில் இம்மருந்துகள் புகழ்பெறத்தொடங்கின.


பென்ஸோடியாஸ்பைன்ஸ் போன்ற வகையில் இசட் மாத்திரைகள் வேலை செய்கின்றன. ஒருவகையில் உடலில் வேகமாக செயல்படும் திறன் கொண்டவை. தினசரி களைப்பை குறைத்து உற்சாகம் அளிக்கிறது. ஆனால் இம்மாத்திரை அடிமைத்தனம் ஏற்படுத்துவதில் குறைவான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்கின்றனர்.


கோடைன், பென்ஸோடயாஸ்பைன்ஸ் ஆகிய மருந்துகளைப் போலவே இவையும் பயன்படுத்துவர்களை மெல்ல அடிமையாக்கும் குணம் கொண்டவை. இந்த மருந்துகளை ஒருவர் குறைந்தகாலத்திற்கு மட்டுமே பரிந்துரைக்க வேண்டும். அதாவது ஒருமாதம் என்ற கால அளவிற்கு.


இன்சோம்னியா ஏற்படுவதற்கு மனநிலைக் கோளாறுகளான பிளவாளுமை, பிடிஎஸ்டி, மன அழுத்தம் ஆகியவையும் முக்கிய காரணம். இம்மருந்துகளைப் பயன்படுத்தி பாதிப்பு ஏற்படுவது பற்றிய புரிதல் மருத்துவர்களுக்கு இல்லை என்கிறார் மருத்துவர் ஸ்டெபானி சியாபினி. ஐரோப்பிய நாடுகளில் இசட் மருந்துகள் இன்னும் பரவலாகவில்லை. ஆனால் பல்வேறு நாடுகளில் இம்மருந்துகளை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இங்கிலாந்தில் மட்டும் 2017-2018 ஆண்டுகளில் பத்து லட்சம் பேர் இசட் மருந்துகளை பயன்படுத்தியுள்ளனர். மக்கள்தொகையில் மூன்று சதவீதம்.


மருந்துகளை பரிந்துரைக்கும்போது அதன் பலம், பலவீனங்களை மருத்துவர்கள் நோயாளிகளுக்கு கூறுவது முக்கியம். இந்த வகையில் இங்கிலாந்தின் என்ஹெச்எஸ் அமைப்பு, 75 ஆயிரம் பேர்களுக்கு இசட் மருந்துளள் பற்றிய பயிற்சியை வழங்கியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் 2017ஆம் ஆண்டு ஸோலோபைடம் என்ற மருந்தை பரிந்துரைப்பதற்கான விதிமுறைகளை வகுக்கப்பட்டுவிட்டன. இந்த பிரச்னைகளை தீர்க்க ஒரே வழி பொதுமக்களுக்கும் மருத்துவர்களுக்குமான கல்விதான் என்கிறார் மருத்துவர் மேரிஸே லேபையர் மேஸ்ட்ரே. பிரான்ஸில் புதிய விதி மூலம் ஸோலோபைடமின் பயன்பாடு பாதியாக குறைந்துள்ளது.


ரீடர்ஸ் டைஜஸ்ட்



 

 

கருத்துகள்