தொன்மைக்காலத்திலிருந்து மக்களை துன்பத்திலிருந்து காக்கும் காவலர்கள்! - தி ஒல்டு கார்டு
தி ஓல்டு கார்டு |
தி ஓல்டு கார்டு
உலகை காக்கும் பணியில் ஆதி காலம் முதல் இன்று வரை ஈடுபடும் குழு ஒன்று உள்ளது. இவர்கள் ஒருவரையொருவர் கனவுகள் மூலம் கண்டுபிடிக்கிறார்கள். தங்களோடு இணைத்துக்கொள்கிறார்கள். பிறருக்கு வயதானாலும் இவர்களுக்கு வயதாகாது. இவர்களின் உடலிலுள்ள மரபணுக்களை திருட மருந்து நிறுவனம் திட்டம் தீட்டுகிறது. இதற்கு காப்பான் குழுவிலுள்ள ஒருவரே உடந்தையாகிறார். அந்த சதியில் அவர்கள் வாழ்க்கை என்னவானது? துரோகியை கண்டுபிடித்தார்களா? உலகை காப்பாற்றும் பணியை தொடர்ந்தார்களா என்பதுதான் கதை
படத்தின் தயாரிப்பாளரும், நாயகியும் சார்லீஸ் தெரோன்தான். எனவே அந்த குழுவின் பாஸ் கூட அவரேதான். கதை திடுக்கென தொடங்கி, குழந்தைகளை மீட்கும் பணியின்போதுதான், அவர்கள் யார், அவர்கள் சக்தி என்ன என்பது பார்வையாளர்களுக்கு அறிமுகமாகிறது. படத்தின் சிஜி சமாச்சாரங்கள் சிறப்பாக உள்ளன. அடுத்தடுத்த பாகங்கள் எடுப்பதற்கான அடிப்படைக் கதையை இப்படத்தில சொல்லி விட்டடார்கள். எனவே அடுத்த பாகங்கள் படமாக எடுக்கப்பட்டால் இப்படத்தை பார்ப்பது முக்கியம்.
கிறிஸ்துவர்கள் சிலுவைப் போரில் ஈடுபடும், மதம்தான் அரசியலை நிர்ணயித்த காலம் தொடங்கி ஆன்னி என்ற பெண்ணும் அவளது தோழியும் பல்வேறு போர்களில் பங்கேற்று மக்களைக் காக்கிறார்கள். மக்களைக் காக்கும் மனிதர்களுக்கு நேர்வதுதான் அவர்களுக்கும் நேர்கிறது. ஒருவரை மதவாதிகள் இரும்பு பெட்டியில் அடைத்து கடலில் தூக்கிப் போடுகிறார்கள். இன்னொருவரை தீயில் எரித்துக்கொல்கிறார்கள். ஆனால் ஆன்னி இதில் சாவதில்லை. தோழி இறந்துபோனதால் தீவிர குற்றவுணர்வு கொள்கிறாள். ஆயினும் தனக்கான குழுவைக் கண்டுபிடித்து கஷ்டப்படும் மக்களைக் கண்டுபிடிக்க முயல்கிறாள். இப்படித்தான் மூன்று உறுப்பினர்கள் ஓல்டு கார்டு குழுவில் சேர்கிறார்கள்.
இவர்களுக்கு சிஐஏ அமைப்பில் இருந்து ஓய்வு பெற்ற ஒருவன் நட்பாகிறான். அவன் இவர்களின் மரபணு பற்றி ஆராய்ந்து புரிந்துகொண்டு அதனை பயன்படுத்தி வேறுவிதமாக மக்களுக்கு உதவ நினைக்கிறான். அது மருந்து நிறுவனங்களுக்கு லாபமாக மாறும் வழி. இந்த சதியில் மாட்டிக்கொண்டு ஓல்டு கார்டு குழுவில் இருவர் கடத்தப்படுகிறார்கள். மீதி இருக்கும் ஆட்கள் எப்படி அவர்களை மீட்கிறார்கள் என்பதை ரத்தமும் புல்லட் சத்தமுமாக சொல்லியிருக்கிறார்கள். சார்லீஸ் தெரோர்ன் ஆதிகாலத்திலிருந்து வந்ததால் தெலுங்கு நாயகன் பாலைய்யா பயன்படுத்துவது போல கோடாரி ஒன்றைப் பயன்படுத்துகிறார். வித்தியாசமான வடிவமைப்பு கொண்ட ஆயுதம் அது.
மக்கள் காவலன்
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக