போதைப்பொருட்களை மருத்துவதற்கு பயன்படுத்த முடியுமா? பதில் சொல்லுங்க ப்ரோ? வின்சென்ட் காபோ

 

 

 Drugs, Drug, Tablets, Pills, Capsule, Harmful, Syringe

 

நியூரோமாடுலேஷன் என்றால் என்ன?


நியூரோமாடுலேஷன் என்பதில் நிறைய பிரிவுகள் உண்டு. புரியும்படி சொன்னால், தேவையான நினைவுகளை வைத்துக்கொண்டு தேவையில்லாதவற்றை மூளையில் இருந்து அகற்றுவது என கூறலாம். எம்ஐபி படத்தில் மக்களின் நினைவிலிருந்து நினைவுகளை வில் ஸ்மித் சிம்பிளாக ஒரே ஃபிளாஷில் நீக்குவாரில்லையா? அதேதான். டிரான்ஸ்கிரானியல் மேக்னடிக் ஸ்டிமுலேஷன் எனும் முறையில் காந்தப்புலத்தைப் பயன்படுத்தி, மூளையில் நடைபெறும் நியூரான் தகவல்தொடர்பை மாற்றி நினைவுகளை அழிப்பதுதான் இதன் நுட்பம். பொதுவாக இதன்மூலம் நினைவுகளை அழிப்பது மட்டுமன்றி, மூளையில் ஏற்படும் பல்வேறு குறைபாடுகளை கட்டுக்குள் கொண்டுவரலாம் என சில ஆய்வுகள் கூறுகின்றன. மேலும், மூளைக்கு அதிக திறனில்லாத மின்சாரத்தை பயன்படுத்தி, செல்களை ஊக்கப்படுத்தும் ஆராய்ச்சிகளும் நடந்துவருகின்றன. இதனால் எதிர்காலத்தில் கிரியேட்டிவிட்டி இப்படியும் தூண்டிவிடப்படலாம்.


மருத்துவத்திற்கு பயன்படும் போதைப்பொருட்கள் உள்ளனவா?


சட்டவிரோதமாக விற்கப்படும் அனைத்து போதைப்பொருட்களும் மருத்துவத்தில்பயன்படுத்தப்படுபவைதான். அதில் சிலவற்றைப் பார்ப்போம்.


எல்எஸ்டியை இன்றுவரை பலரும் ஆபத்தான போதைப்பொருளாகவே பார்க்கிறார்கள். ஆனால், இதனை 2017ஆம் ஆண்டு தொடங்கி மனப்பதற்றம் தணிக்கும் மருந்தாக ஆராய்ச்சியில் பயன்படுத்தி வெற்றிகண்டிருக்கிறார்கள். இதற்கு 25 ஆண்டுகளாக செய்துவந்த ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுத்தகவல்ளள் உதவியுள்ளன. கீட்டமைன், இதனை பல்லாண்டுகளாக மருத்துவத்தில் அனஸ்தீசியாவாக பயன்படுத்தி வந்தனர். இதனை அதிகம் பயன்படுத்தும்போது கல்லீரல், சிறுநீரகம் சார்ந்த பிரச்னை ஏற்படும். ஆனால் முறையாக மருத்துவர்களின் ஆலோசனையோடு பயன்படுத்தினால் இதனை மன அழுத்த பிரச்னைக்கு மருந்தாக பயன்படுத்தலாம் என கண்டுபிடித்திருக்கிறார்கள். 1960 தொடங்கி மருத்துவத்துறையில் பயன்பாட்டில் உள்ள மருந்துப்பொருள் இது.


சிலோசைபின்


காளான்களிலிருந்து பெறப்படும் வேதிப்பொருள். எல்எஸ்டி மூளையில் ஏற்படுத்தும் பாதிப்பை சிலோசைபின் ஏற்படுத்துகிறது. மன அழுத்தம், பதற்றம் ஆகியவற்றுக்கு மருந்தாக இதனை பயன்படுத்துகிறார்கள். 2017ஆம் ஆண்டு இம்பீரியல் கல்லூரியில் இதனைப் பயன்படுத்தி, நோயாளிகளின் பாதிப்பை குறைத்திருக்கிறார்கள்.


பிபிசி




கருத்துகள்