இடுகைகள்

இந்தியா- வட இந்தியா தொழிலாளர்கள் இடம்பெயர்வு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வட இந்தியர்களின் இடப்பெயர்ச்சி!

படம்
வட இந்தியாவின் ஆக்கிரமிப்பு ! சிவசேனா கூறுவது போல பிற மாநில மக்களால் வாய்ப்பு பறிபோகிறது என பின்னாளில் சீமான் மேடைகள் பற்றியெரியும்படி பேசலாம். அப்போது அவர் பாஜகவுடன் கூட கூட்டணியில் இருக்கலாம். ஏன் நடக்க கூடாது? ஆனால் வட இந்தியர்கள் ஏன் தென்னிந்தியாவுக்கு இடம்பெயர்கிறார்கள்? காரணம் தென்னிந்தியர்கள் சட்டைக் காலர் அழுக்கு படாத வேலைகளுக்கு சென்றுவிட்டனர். இன்று தென்னிந்தியாவிலுள்ள ப்ளூகாலர் வேலைகளுக்கு போஜ்புரி, இந்தி பாடல்களை கேட்கும் மனிதர்களை தவிர வேறு வாய்ப்பே இல்லை.  வட இந்தியாவில் மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்ப சமூகநலத்திட்டங்கள் இல்லாத காரணத்தால் தொழிலாளர்களின் பார்வை தென்மாநிலங்களை நோக்கி திரும்பியுள்ளது . பீகார் , மத்தியப்பிரதேசம் , சத்தீஸ்கர் ஆகிய இடங்களில் மக்கள்தொகைக்கும் வளர்ச்சிக்கும் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை காரணமாக ஆந்திரா , கர்நாடகா , தமிழ்நாடு , கேரளா ஆகிய மாநிலங்களின் பல்வேறு வேலைவாய்ப்புகளை வட இந்தியர்கள் கைப்பற்றி வருகின்றனர் . சாலைவசதி , கல்வி , பாதுகாப்பு , வேலைவாய்ப்பு உள்ளிட்டவை வட இந்தியர்கள் வாழ்வதற்காக தென் மாநிலங்களை தேர்ந்தெட