இடுகைகள்

கன்னையாகுமார் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காங்கிரஸ் கட்சியின் எதிர்கால நம்பிக்கை - கன்னையா குமார், காங்கிரஸ் கட்சி உறுப்பினர்

படம்
இடதுசாரி அமைப்புகள் இவருக்கு ஆதரவாக இருந்தபோதிலும் கூட அதிகாரத்திற்கு வர காங்கிரஸ்தான் சரியான கட்சி என அதில் சேர்ந்துவிட்டார். இப்போது பீகாரில் செயல்பட்டு வருகிறார். நேரு பல்கலைக்கழக காலத்திலிருந்து ஜனநாயகத்தை காக்கும் புரட்சி குரலாக ஒலித்து வந்தார். நாடு முழுவதும் இவரது புகைப்படங்கள சென்றன. பிறகு தேர்தலில் நின்றார். பாஜகவின் கிரிராஜ் சிங் என்பவரிடம் தோற்றுப்போனார். ஆனால் இப்போது நாம் கன்னையாவைப் பற்றித்தானே பேசுகிறோம். கிரிராஜைப் பற்றி அல்ல. அதுதான் கன்னையாவின் செல்வாக்கு. இவரின் பேச்சுகளை சமாளிக்க முடியாத பாஜக, உதைப்பதற்குள் ஓடிவிடு என மிரட்டியும் பார்த்தது. அப்போதும் பணியாத ஆள் என்பதால், தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் மூன்றாவது நினைவுநாளில் தேசவிரோத ஸ்லோகன்களை சொன்னதாக உபா சட்டத்தைப் பயன்படுத்தியது. 2016ஆம் ஆண்டு பிப்ரவரி இந்த சம்பவம் நடைபெற்றது. 2019இல் தேர்தலில் நின்று தோற்றுப்போனவரை காங்கிரஸ் கட்சி அரவணைத்து ஏற்றுக்கொண்டது. இந்த சம்பவம் நடந்தது செப்டம்பர் மாதம் 28. சவால்கள் இதோடு நின்றுவிடவில்லை. பீகாரில் புகழ்பெற்ற பெரிய கட்சி ஆர்ஜேடி. பெயரைப் பார்த்தால் ஏதோ ரியல் எஸ

மக்களிடமிருந்து மக்களுக்காக பணம் பெறலாம்!

படம்
மக்களுக்காக மக்கள் பணம் தரலாமா? தேர்தல் என்பது பெரும் பட்ஜெட்டில் நடத்தப்பட்டு வருகிறது. இதனை நடத்துவதற்கு அரசுக்கு ஆகும் செலவைவிட கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் அதிக செலவு பிடிக்கிறது. தொழிலதிபர்கள், நடிகர்கள் போட்டியிடும்போது, தொண்டர்களைத் திரட்டுவதற்கான செலவு, உணவு ஆகியவற்றை அவர்கள் பார்த்துக்கொள்ள முடியும். ஆனால் சாதாரண நிலையில் உள்ள கம்யூனிஸ்டுகள் போன்றோர் போட்டியிடும்போது, உண்டியல் குலுக்கித்தான் நிலையை சமாளிக்க வேண்டி உள்ளது. ஆனாலும் இது போதுமானதல்ல. எனவே, தற்போது அவர் டெமாக்கிரசி என்ற இணைய வழி நன்கொடை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. உங்களுக்கு பிடித்த வேட்பாளருக்கு நீங்கள் நன்கொடைகளை வழங்கலாம். கிக்ஸ்டார்ட்டர் இணையதளம் பொருட்களை வெளியிட்டு, அப்பொருள் உங்களுக்கு பிடித்திருந்தால் நிதியுதவி செய்யுங்கள் என்று கேட்கிறார்களே அதே பாணிதான். தற்போது அவர் டெமாக்கிரசி நன்கொடைத் திட்டத்தில் 14 வகை நிதிகோரும் முறைகள் செயல்பாட்டில் உள்ளன. இதனை பிலால் ஸைதி தொடங்கினார். “எங்களுடைய திட்டத்தின் வெற்றியால், இன்று சர்வர் மீது சிலர் தாக்குதல் நடத்தி வலைத்தளத்தை மூட முயற்சிக்கின்றனர். டெ