இடுகைகள்

லான்செட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கொரோனாவின் மூன்றாவது அலையில் குழந்தைகள் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது!

படம்
                டாக்டர் எஸ் பாலசுப்பிரமணியன் லான்செட் இந்தியா டாஸ்க் போர்ஸ் குழு மூன்றாவது அலை கொரோனா தொற்று குழந்தைகளை தாக்கும் என்று கூறப்படுகிறதே ? பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் நான்கு சதவீதம் பேர் நோய்த்தொற்றுக்கு உள்ளாக வாய்ப்புள்ளது . இந்த எண்ணிக்கை விரைவில் 12 சதவீதமாக உயரலாம் . பிற நாடுகளிலும் இதேபோன்ற நிலைதான் காணப்படுகிறது . ஐரோப்பிய நாடுகளில் குழந்தைகளின் மீதான நோய் பாதிப்பு 9 சதவீதமும் , அமெரிக்காவில் பதினெட்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 12. 4 சதவீதம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் . ஐரோப்பாவில் நோயால் தாக்கப்பட்டவர்களின் வயது பதினைந்துக்கும் குறைவுதான் . இந்த தாக்குதலும் கூட முதல் , இரண்டாவது அலையில் ஏற்பட்டதுதான் . மூன்றாவது அலையில் இப்படி தாக்குதல் நடைபெறுமா என்று கூற முடியாது . தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்தினால் வயது வந்தோருக்கும் குழந்தைகளுக்கும் பெரியளவு பாதிப்பு நேராது என்று கூறலாம் . படுக்கைகளும் வெண்டிலேட்டர்களும் அதிகம் தேவைப்படுமா ? முதல் மற்றும் இரண்டாவது அலையில் பெரியளவு குழந்தைகள் பாதிக்கப்படவில்லை . ஆனால் இரண்டாவது அல