இடுகைகள்

சுழற்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கடல்நீரில் தங்கம் உண்டா?

படம்
              அறிவுப்பற்று மிஸ்டர் ரோனி கடல்நீரில் தங்கம் உண்டா? உலகிலுள்ள ஒவ்வொருவரும் கடல் நீரை அலசி ஆராய்ந்தால் நபர் ஒருவருக்கு நான்கு கி.கி. அளவுக்கு தங்கத்தை பெறமுடியும். கடல்நீர் சுழற்சி அடைகிறதா? வடதுருவம், தென்துருவம் ஆகிய இருமுனைகளிலும் உள்ள கடல்நீர் கடிகார சுழற்சி, அதற்கு எதிர்சுழற்சி எனுமாறு நீரோட்ட சுழற்சியைக் கொண்டுள்ளன. செங்குத்து, கிடைமட்டம் என இரு வேறுபட்ட அளவுகளில் கடல்நீரோட்டம் உலகமெங்கும் சென்று வருகிறது. கடல்நீரிலுள்ள வேதிப்பொருட்கள் என்னென்ன? குளோரைடு, சோடியம், சல்பேட், மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம், பைகார்பனேட், புரோமைடு, ஸ்ட்ரான்டியம், போரோன், புளுரைடு ஆகிய வேதிப்பொருட்கள் கடல்நீரில் உள்ளன. கடலில் அலையடிக்க என்ன காரணம்? பூமிக்கு கீழே நடக்கும் நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, காற்று ஆகியவை காரணமாக கடலில் அலைகள் உருவாகுகின்றன. பூமியின் ஈர்ப்புவிசை, நீரின் அழுத்தம் அலைகளை தொடர்ச்சியாக உருவாகி வரச்செய்கின்றன. கடலின் ஆழம் என்ன? கடலின் தோராய ஆழம் நான்காயிரம் மீட்டர்கள்.  

எவ்வளவு வேகமாக நகர்கிறோம்? - மிஸ்டர் ரோனி பதில்

படம்
pixabay மிஸ்டர் ரோனி எவ்வளவு வேகமாக நாம் நகர்கிறோம்? பஸ், கார், பைக் என நகர்ந்து செல்வது வேறு. ஆனால் பூமி தன்னைத்தானே சுற்றியபடி நகர்கிறது. அப்படியே நகர்ந்து சூரியனை சுற்றி வருகிறது. பூமி மட்டுமல்ல அனைத்து கோள்களும் நகர்ந்துகொண்டே இருக்கின்றன. பஸ்சில் அறுபது கி.மீ வேகத்தில் செல்லும்போது நாம் நகர்கிறோமா இல்லையா? நிச்சயமாக நகர்கிறோம். நகரும் வேகத்தை மட்டும் பார்ப்போம். பூமியின் வட்டப்பாதை பூமி தன்னைத்தானே சுற்றி வருவதால் நாம் நகருவது தெரியவில்லை. ஒரு நொடிக்கு 30 கி.மீ வேகத்தில் பூமி சுற்றி வருவதால், அதிலுள்ள நாமும் அதே வேகத்தில் சென்று கொண்டிருக்கிறோம். அதேநேரத்தில் இந்த வேகம் நின்று போனால், என்னாகும்? நாம் தூக்கி எறியப்படும். சூரிய மண்டலத்தின் வட்டப்பாதை ஒரு நொடிக்கு 230 கி.மீ வேகத்தில் சுற்றி வருகிறது. இந்த வேகத்தில் நமது சூரியமண்டலம் சுற்றி வருகிறது. பால்வெளியின் வேகம் ஒரு நொடிக்கு  ஆயிரம் கி.மீ. வேகத்தில் நகர்கிறது. நன்றி - ஹவ் இட் வொர்க்ஸ்

பூமி சுற்றுவதை நாம் ஏன் அறிய முடிவதில்லை?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி பூமி சுற்றுவதை நம்மால் ஏன் அறிய முடியவில்லை? காவேரி ஆற்றை படகில் நீங்கள் கடக்கிறீர்கள் என்றால் அப்போது ஆற்றில் ஏற்படும் சுழலை நீங்கள் உணர்வீர்கள். காரணம் அதன் வலிமை அப்படி. படகில் செயல்படும் துடுப்பு விசையை விட சுழலின் விசை அதிகமாக இருக்கும்போது அதனை நீங்கள் உணர முடியும்.  பூமி, விண்வெளியில் சுற்றும் வேகம் மணிக்கு ஆயிரம் கி.மீ வேகம்(இங்கிலாந்து அடிப்படையில்). இதனை உணர முடியாத தற்கு காரணம், நம்மீது செயல்படும் ஈர்ப்புவிசைதான்.  நன்றி: பிபிசி