இடுகைகள்

வங்காளம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சத்யஜித்ரே - மறக்கமுடியாத சினிமாக்கலைஞன்

படம்
  சத்யஜித்ரேவுக்கு நிறைய அடைமொழிகள் உண்டு. சினிமா இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், எழுத்தாளர், பாடலாசிரியர், இதழ் ஆசிரியர், ஓவியர், சித்திர எழுத்துக்கலைஞர், இசை அமைப்பாளர் என பல்வேறு விஷயங்களில் ஆர்வம் கொண்டவர்.  1921ஆம் ஆண்டு மே 2 அன்று பிறந்தவர், சத்யஜித்ரே. வங்காளத்தின் கொல்கத்தா நகரில் பிறந்தார். இவரது குடும்பமே அன்று வங்காளத்தில் புகழ்பெற்றதுதான். பத்து தலைமுறையாக புகழ்பெற்ற மனிதர்கள் அந்த குடும்பத்தில் இருந்து வந்தனர். சத்யஜித்ரேவின் தாத்தா, உபேந்திர கிஷோர் ரே எழுத்தாளராக இருந்தார். கூடுதலாக, அன்றைய பிரம்ம சமாஜத்தின் தலைவராகவும் இருந்தார். சத்யஜித்ரேவின் தந்தை ஓவியராக இருந்தார். இவர் குழந்தைகளின் புத்தகங்களுக்கு நூல்களுக்கு படம் வரைந்துகொண்டிருந்தார்.  ரே, பாலிகுங்கே அரசுப்பள்ளி மேல்நிலைப்பள்ளியில் படித்தார். கொல்கத்தாவில் இருந்த பிரசிடென்சி கல்லூரியில் பொருளாதாரப் பாடத்தில் பட்டம் பெற்றார்.  ரேவுக்கு கலைகளின் மீது பெரும் ஆர்வம் இருந்தது. தொடக்கத்தில் இருந்தே வரைவதில் ஆர்வம் கொண்டிருந்தார். இதன் காரணமாக, விளம்பர ஏஜென்சி ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார்.  இதன் மூலமாக வங்காள மொழி நூல்கள

மத்திய அரசு நிதியை நேரடியாக ஏழை மக்களின் கையில் வழங்குவதே சிறந்த முடிவு! அபிஜித் பானர்ஜி, நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநர்

படம்
                அபிஜித் பானர்ஜி நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநர் கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பை சமாளிக்க உலக நாடுகள் பணத்தை அச்சிடத் தொடங்கியுள்ளன . இந்தியா இந்த வழியில் சென்றால் மட்டுமே தடுப்பூசி திட்டத்தை முன்னெடுத்து வறுமையில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும் என அபிஜித் கூறுகிறார் . மத்திய அரசு பணத்தை அச்சிடவேண்டும் என பொருளாதார வல்லுநர்கள் கூறி வருகின்றனர் . நீங்கள் அதுபற்றி என்ன கூற விரும்புகிறீர்கள் ? நான் அரசு பணத்தை அச்சிடவேண்டுமென சில காலம் முன்பிருந்தே கூறிவருகிறேன் . நான் இந்த கருத்தை ஆதரிக்கிறேன் . முதல் அலையின்போது இதனை செய்திரு்ந்தால் மக்களுக்கு ஏற்பட்ட வலியை பெருமளவு குறைத்திருக்கலாம் இதனை நிச்சயமாக அரசு செய்திரு்க்க முடியும் . மக்களை முதலில் தடுப்பூசியைக் கொடுத்து காப்பாற்றியிருந்தால் பின்னால் கூட கடன்களுக்கான வாக்குறுதியை அரசு நிறுவனங்களுக்கு வழங்கியிருக்க முடியும் . ஆனால் அரசு தேவையில்லாமல் பயந்துவிட்டது . ஊக்கத்தொக்கையை அளித்தது நிச்சயம் அரசுக்கு வருவாயை வழங்கக்கூடியதுதான் . கடன்களை பற்றி கவலைப்படும் அரசு இப்படி ஒரு கோணத்தில் யோசிக்க

என்னைக்கொல்பவன் யார்? - பியோம்கேஷை மிரட்டும் புதிய வழக்கு!

படம்
ஹோய்சோய் ஒரிஜினல்ஸ் அனிர்பன் பட்டாச்சார்யா, சுப்ரதா தத்தா, ரிதிமா கோஷ் சக்ரபோர்த்தி நடிக்கும் பியோம்கேஷ் சீசன் 2 இயக்கம் சௌமிக் சட்டோபாத்யாய இம்முறை வித்தியாசமான வழக்கை பியோம்கேஷ் எதிர்கொள்கிறார். தான் இறக்கப்போகிறோம் என்று தெரிந்தே அதனைக் கண்டுபிடிக்க காசு கொடுக்கிறார் ஊதாரி ஸ்த்ரீ லோலரான சத்ய காம்தாஸ். தான் இறக்கப்போகிறோம் என்பதை விட யார் மூலம் இறக்கப்போகிறோம் என்பதை அறியவே அவர் விரும்புகிறார்.  அப்போது பணத்தேவையில் இருந்த பியோம்கேஷ் ஆயிரம் ரூபாயை வாங்கிக்கொண்டு, துப்பு துலக்க சுசித்திரா எம்போரியம் செல்கிறார். அங்கு, அதன் முதலாளியான தாஸின் அப்பாவைச் சந்திக்கிறார். ஆனால் அவர்களின் வருகையைக் கண்டுபிடித்துவிட்ட தாஸ், அவர்களுக்கு அவராகவே கம்பளிக் கோட்டை தேர்ந்தெடுத்து 230 ரூபாய் பில்லை 100 ரூபாயாக குறைத்து தருகிறார். கூடவே என்னை பின்தொடர்ந்து வராதீர்கள் என எச்சரிக்கிறார்.  அப்போது தாஸின் காதலில் விழுந்து, கற்பைப் பறிகொடுக்கிறார் அன்னபூர்ணா தேவி. அவரின் கடையில் வந்து நின்று கல்யாணத்திற்காக கெஞ்சுகிறார். அங்கு கண்ணீர் மல்க நிற்பவருக்கு,  உடனே புடவை ஐந்தைக் க