இடுகைகள்

சிறுகுறு விவசாயி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கடனால் பாதிக்கப்பட்ட விவசாயியை அடையாளம் காண்பது இனி ஈஸி!- நபார்ட் வங்கியின் விவசாயிகளுக்கான தொகுப்பு பட்டியல்(FDI)

படம்
  நபார்ட் வங்கியை கேள்விப்பட்டிருப்பீர்கள். விவசாயத்திற்கான கடன்களை வழங்கிவரும் வங்கி இது. தற்போது பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கான தொகுப்பு பட்டியல் ஒன்றை உருவாக்க உள்ளது. இதன் மூலம் உண்மையில் உதவி தேவைப்படும் விவசாயிகளை எளிதாக அடையாளம் காண முடியுமாம்.  சின்ன டேட்டாவைப் பார்த்துவிடுவோம்.  தேசிய முற்போக்கு கூட்டணி அரசு வழங்கிய கடன் தள்ளுபடி தொகை ரூ.60 ஆயிரம் கோடி - 2008 2012 - 2013 ஆம் ஆண்டில் கடன் தள்ளுபடியை அறிவித்த மாநிலங்களின் எண்ணிக்கை 13 2019ஆம் ஆண்டு உ.பி அரசு அறிவித்த கடன் தள்ளுபடி தொகை  36 ஆயிரம் கோடி 2017இல் மகாராஷ்டிர அரசு அறிவித்த கடன் தள்ளுபடி தொகை 30 ஆயிரம் கோடி  இத்தனை தள்ளுபடி கொடுத்தபிறகுதான் ஒன்றிய அரசுக்கு உண்மை ஒன்று தெரிந்தது. நாம் சரியான ஆட்களுக்குத்தான் கடனை தள்ளுபடி செய்தோமா இல்லையா என்று. பஸ்ஸை விட்டு இறங்கியபிறகு கண்டக்டரிடம் மீதி சில்லறையை வாங்கவே இல்லையே என்பது போலத்தான் இதுவும். இருந்தாலும் அரசு யோசிக்கிறதே, அந்த மட்டில் அதனை பாராட்டித்தான் ஆக வேண்டும்.  கடன் தள்ளுபடி அறிவிப்பை அரசு வழங்கினாலும் கூட 60 சதவீத சிறு குறு விவசாயிகள் இப்பயன்களை பெற முடியவில்லை