இடுகைகள்

விதிமுறை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஃபேஸ்புக்கின் லிப்ரா புகழ்பெறுமா? - புதிய கிரிப்டோகரன்சி!

படம்
லிப்ரா கிரிப்டோ கரன்சி மக்களை ஈர்க்குமா?  சமூக வலைத்தளமான ஃபேஸ்புக், லிப்ரா எனும் புதிய கிரிப்ட்டோ கரன்சியை சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளது.  நவீன உலகில் அனைத்து டிஜிட்டல் சாதனங்களும் இணையத்தையே நம்பியுள்ளன. இதில் மக்கள் செய்யும் பணப்பரிமாற்றமும் கூட பல்வேறு வகையில் பாதுகாப்பானதாகவும் நவீனமாகவும் மாறிவருகிறது. இணையத்தில் கட்டற்ற வணிகம் செய்வதற்காக உருவானதுதான் கிரிப்டோகரன்சி. இதிலுள்ள பலமும் பலவீனமும் இதனை அரசும், மத்திய வங்கிகளும் கட்டுப்படுத்த முடியாது என்பதுதான். பிளாக்செயின் எனும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கிரிப்டோகரன்சிகள் இயங்கிவருகின்றன. இந்தியாவில் வணிகத்திற்கு கிரிப்டோகரன்சிகளைப் பயன்படுத்த ரிசர்வ் வங்கி அனுமதி அளிக்கவில்லை. இதனால், கிரிப்டோகரன்சிகளின் புழக்கம் குறையவெல்லாம் இல்லை. சட்டத்திற்கு புறம்பாகவும் பிட்காயின் கரன்சிகள், இணையம் வழியாக வணிகத்தில் புழங்கி வருகின்றன. சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தவிருக்கும் லிப்ரா கரன்சி, கட்டற்றதல்ல. இதனை சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிலுள்ள தன்னார்வ அமைப்பு கட்டுப்படுத்துகிறது. உலகெங்கும் உள்ள லிப்ரா அசோச