இடுகைகள்

கோதாவரி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காவிரி - கோதாவரி இணைப்பு விவசாயிகளை காக்குமா?

படம்
 காவிரி - கோதாவரி ஆறுகளை இணைப்பதற்கான திட்டத்தை மத்திய அரசு தயாரித்துள்ளது. அண்மையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, ”காவரி - கோதாவரி ஆறுகளை இணைக்கும் திட்டத்தை தயாரித்துவிட்டோம். 60 ஆயிரம் கோடி மதிப்புள்ள திட்டத்தை மத்திய அமைச்சரவையிடம் அனுமதி பெற்று உலகவங்கியின் நிதியுதவியுடன் திட்டத்தை செயல்படுத்த உள்ளோம்” என்று கூறியுள்ளார். புனித கோதாவரி! மகாராஷ்டிரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள திரியம்பக்கேஷ்வரில் உருவாகும் கோதாவரி 1,465 கி.மீ  தொலைவுக்கு பயணிக்கிறது. மகாராஷ்டிரம், மத்தியப்பிரதேசம், ஒடிஷா, சட்டீஸ்கர், ஆந்திரம், தெலுங்கானா, புதுச்சேரி  ஆகிய மாநிலங்களை பொன் கொழிக்கும் பரப்பாக மாற்றும் நீளமான இந்திய ஆறுகளில் ஒன்று இது. மத்தியப் பிரதேசத்தை வடக்குப்புற எல்லையாக கொண்டு தெலுங்கானாவின் நிஜாமாபாத், ஆந்திரம் ஆகிய மாநிலங்களை வளப்படுத்தி பின்னர் வங்காள விரிகுடாவில் கலக்கிறது கோதாவரி. செல்லும் வழியில் தார்ணா, பூர்ணா, மஞ்சிரா, பிரான்கிதா, இந்திரவதி ஆகிய துணை ஆறுகளை தன்னுடன் இணைத்துக்கொண்டு புகையிலை சாகுபடியை அள்ளித் தருகிறது கோதாவரி. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆந்