இடுகைகள்

தமிழ் உரை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஜனநாயக இந்தியா - நேருவின் உரைகள் தமிழில் - புதிய மின்னூல் வெளியீடு

படம்
  இந்தியாவின் நவீன சிற்பிகளில் ஒருவரான நேரு, மேற்குலகில் மிகச்சிறந்த நிர்வாகி என்பதை விட சிந்தனையாளராகவே அறியப்படுகிறார். தனது வாழ்நாளில் நேரு ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். இவரளவுக்கு உலக வரலாற்றை ஆய்வு நோக்கில் அணுகி இந்தியாவின் நிலை என்ன எப்படி வளரவேண்டும் என்று கனவுகண்ட தலைவர் யாருமில்லை எனலாம். இந்த நூலில் மொத்தம் 24  உரைகள் உள்ளன. இவை மதவாதம், தேசியவாதம், ஹைதரபாத்தை இந்தியாவுடன் இணைத்தது, கலவரங்கள், தேசியகீதம் உருவாக்கம் பல்வேறு விஷயங்களைப் பற்றிய தனது கருத்துகளை கூறுகிறார்.  உலகம், இந்தியா, இந்திய மாநிலங்கள் பற்றி பிரதமர் ஒருவர் வெளிப்படையாக பேசுவது ஆச்சரியமான ஒன்று. இதில் அரசியல் கலக்காமல் தனது சிந்தனைகளை பேசியுள்ளார். பிரதமரின் பெருமை குலையும்போது நாட்டின் பெருமையும் குலைந்துவிடும் என்று பிரனாப் முகர்ஜி கூறிய கூற்றை நினைவுபடுத்திக்கொண்டால் நேரு சிறப்பாகவே அனைத்து விவகாரங்களையும் கையாண்டுள்ளார் என்றே சொல்லவேண்டும்.   காஷ்மீர் விவகாரம், இந்து முஸ்லீம் ஒற்றுமை பற்றி பேசும்போதும் இரு தரப்பினருக்குமான யோசனைகளை முன்வைத்து பேசியுள்ளார். ராணுவ தரப்பிலும் ஆதரவாக பேசவில்லை. மக்களின் எந்

நிகழ்காலத்தின் வாளின் முனையில் நாம் நிற்கிறோம்! - ஜவாகர்லால் நேரு - வின்சென்ட் காபோ

படம்
          குறிக்கோள்களை பின்பற்றுதல் ! மக்களவையில் தீர்மானங்களை பற்றி பேசுவதற்கு நான் முன்னமே ஆறு வாரங்களுக்கு முன்னமே தயாராகத் தொடங்கிவிட்டேன் . இதனை உங்களிடம் பெருமையாக கூறிக்கொள்கிறேன் . இந்த தருணம் தன்னகத்தே தனித்துவத்தையும் எடையையும் ஒரு்ங்கே கொண்டுள்ளது . இந்த தீர்மானத்தின் காரணமாக நான் கூறும் வார்த்தைகள் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்தலாம் . நான் இங்கு மக்களின் முன்னே நிற்பது அவர்களின் எதிர்காலத்தை சரியான முறையில் வடிவமைப்பதற்கான பணி காரணமாகத்தான் . நிகழ்காலத்தின் வாளின் முனை போன்ற முனையில் நாம் நிற்கிறோம் . பல கோடி இந்தியர்களின் பிரதிநிதியாக நான் இங்கு நிற்கிறேன் . நமது முன்னோர்கள் நாம் எதிர்பார்த்து நிற்கும் எதிர்காலத்தை உழைத்து பெறுவதற்கான ஆசிர்வாதத்தை வழங்குவார்கள் என நம்பலாம் . நான் கூறியுள்ள தீர்மானம் , மாநிலங்களிலுள்ள ஆட்சியாளர்களை குறிப்பிடவில்லை என்று புதுமையான் விமர்சனங்களும் , மறுப்புகளும் எழுந்துள்ளன . இதுபோன்ற மறுப்பான கருத்தை மாநில ஆட்சியாளரான ராஜா அல்லது மக்களின் பிரதிநிதிகள் எழுப்பலாம் . இவற்றைப் பற்றி மக்களவையில் கூட விவாதிக்கலாம் .