இடுகைகள்

செலவு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

போருக்கு செலவு செய்வதைவிட நிதியை ஆக்கப்பூர்வ செயல்பாடுகளுக்கு திருப்பலாம்!

படம்
           உள்நோக்கம் கொண்ட தேசபக்தி அரசியல்    ஒருவகையில் பாகிஸ்தான் நாட்டுடன் உறவுகள் மேம்படுவதாக  இருந்தாலும், இன்னொருவகையில் அந்நாட்டுடன் சுமூகமான உறவு ஏற்படக்கூடாது என்று விரும்புகிறோம். நமது பிரதமர் பாகிஸ்தான் பகுதிகளைப் பற்றிப்பேசும்போது நாடாளுமன்றத்தில் பல அணிகளாகப் பிரிந்து நின்று பேசுவது நடக்கிறது. நாட்டின் ஊடகங்களில் இரு தரப்பு பற்றி கடும் கூச்சல் இடுவதுமாக இரு நாட்டு உறவுகள் சமநிலையடையும் நிலையில், இச்செயல்கள் அதைக் குலைத்துப்போட்டுவிடுகின்றன.  நமது செயல்பாடுகள் பாகிஸ்தானுடனான ஒற்றுமையை உண்மையில் நாம் விரும்புவதில்லை என்பதையே வெளிப்படுத்துகிறது. உறுதியாக, நாம் உறவுகளை சிறந்ததாகவும், ஆழமானதாகவும் கொள்ள முயற்சித்தும் அங்கே மனக்கசப்பும், கோபமும்தான் இறுதியில் மிஞ்சுகிறது. அனைத்தையும் விட பாகிஸ்தானுக்கு சரியான பாடத்தை கற்பிக்கவேண்டும்; அவர்களை சரியான இடத்தில் வைக்கவேண்டும்; எனவும், பாகிஸ்தானை இகழ்ந்து பேசுவதுதான் தேசபக்தி என்று கூறுவதில் பெரும் அரசியல் உள்ளது.  மும்பை தீவிரவாதத் தாக்குதல் பிரச்சனைகளை தீர்க்காமல் பிரதமர் பாகி...

பட்ஜெட் 2024 இல் தமிழ்நாட்டிற்கு பயன்தரும் விஷயங்கள்!

படம்
      பட்ஜெட் 2024 இல் தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு எந்த நிதி ஒதுக்கீடும் வழங்கப்படவில்லை. அறிக்கையில், அறிவிக்கப்பட்ட மற்ற திட்டங்களில் இருந்து ஏதேனும் பயன்கள் உண்டா என்று பார்ப்போம். வேளாண்மை இத்துறையில் உள்ள ஆவணங்கள், தகவல்கள் அனைத்தும் டிஜிட்டல் வடிவில் மாற்றப்படவிருக்கின்றன. இதன் மூலம் விவசாயிகள் தங்கள் நில ஆவணங்களை வைத்து எளிதாக விவசாய கடன்களைப் பெறலாம். 102 வீரிய பயிர் ரகங்கள், காலநிலை மாற்றத்தை தாங்கும் 32 தோட்டப்பயிர் ரகங்கள் அறிமுகமாகியுள்ளன. பருப்பு, எண்ணெய் வித்துகள் ஆகியவற்றை பயிரிடவும் ஒன்றிய அரசு முனைந்துள்ளது. இயற்கை விவசாய பிரசாரமும் இதில் கூடுதலாக இணைந்துள்ளது. இவற்றை தமிழ்நாடு பயன்படுத்திக்கொள்ளலாம். சிறுகுறு தொழில்கள் நாட்டிலேயே இரண்டாவது மாநிலமாக சிறு, குறு தொழில்கள் அதிகம் கொண்டதாக தமிழ்நாடு உள்ளது. வேலை சார்ந்த ஊக்கத்தொகையை ஒன்றிய அரசு வழங்கவிருப்பதால், புதிய பணியாளர்கள் சிறுகுறு தொழில்துறையில் அதிகம் சேரக்கூடும். புதிதாக படித்துவிட்டு தொழில்துறைக்கு வரும் அனுபவமில்லாதவர்களுக்கு பணி வாய்ப்பை வழங்குவது சிறுகுறுதொழில்துறை மட்டுமே. அண்மைக்கா...

காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது! - அரசியல் கட்சிகளின் வருமானம்

படம்
            காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது! இந்தியாவில் தேர்தல் நன்கொடைகளை கட்சிகள் பெறுவது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கென வலதுசாரி மதவாத ஆளும்கட்சி, தனியாக சட்டம் ஒன்றை உருவாக்கியது. தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக பயன்களைப் பெற்றது. அதே சட்டங்களை பிற கட்சிகளும் பயன்படுத்தின. மதவாத ஆளும்கட்சி, இன்னும் சற்று மேலே போய் நிதி அளிப்பவர்களை, தொழில் நிறுவனங்களை அமலாக்கத்துறை, வருமானத்துறை, தேசிய புலனாய்வு முகமை வைத்து மிரட்டி பேரளவிலான நிதியைப் பெற்றது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதில் ஒரு பார்முலா உருவானது போல, ரெய்டு நடந்த சில வார, மாதங்களில் கட்சிக்கு நிதி வரவு அதிகரித்தது. இதைப்பற்றிய உண்மையான செய்திகளை அறிய நியூஸ்மினிட், நியூஸ் லாண்ட்ரி, தி வயர், கேரவன் ஆகிய ஊடகங்களை அணுகலாம். தேர்தல் பத்திரம் மூலம் பேரளவிலான நிதியை ஆளும் கட்சி திரட்டியபிறகு, அதுவரை மீளாத உறக்கத்திலிருந்த நீதிமன்றம் எழுந்தது. தேர்தல் பத்திரம் அச்சிடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. அதற்கு பிறகு நடந்ததெல்லாம் சன்டிவி சீரியல் திருப்பங்களை விட நகைச்சுவையானது. இரண்டு தேர்தல்கள...

ஏஐ வரவால் மாறும் ஊடக செய்தியறை!

படம்
  நவீன ஏஐகளால் செயல்வேகம் கூடும் ஊடகங்களின் செய்தியறைகள் தமிழகத்தின் இதயத்துடிப்பு, நம்பர் 1 வார இதழ் என தன்னைத்தானே புகழ்ந்துகொள்ளும் வார இதழ்கள் எல்லாமே வலதுசாரி கட்சிகளால் வாங்கப்பட்டு, அஜண்டாவிற்கு ஏற்ப போலிச்செய்திகளை, மக்களை மடைமாற்றும் கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றன. காசு கொடுக்கிறவனே கண்கண்ட தெய்வம் என மாறிவிட்டன. அதேசமயம் காலத்திற்கேற்ப எழுதும் செய்திகளை மேம்படுத்தி பல்வேறு வழிகளில் மக்களை அடைய முயற்சிக்கும் புதிய பாதைகளுக்கும் பஞ்சமில்லை.  அமெரிக்காவிலுள்ள வால்ஸ்ட்ரீட் ஜர்னல் என்ற நாளிதழ், டிக் டாக் அல்காரிதம் பற்றி ஆராய்ச்சி செய்தது. அமெரிக்காவில் உள்ள இளைஞர்கள் அனைவருமே பெரும்பாலும் டிக்டாக்கில் பயனர்களாக இருக்கிறார்கள். சிலர் அதில் வியாபாரம் செய்கிறார்கள். நடிக்கிறார்கள். ஏதோ ஒருவகையில் அந்த ஆப்பில் இணைந்திருக்கிறார்கள். அதைவிட்டு விலகாமல் இருக்கிறார்கள். அப்படியென்ன சிறப்பம்சம் மனதை கட்டிப்போடும்படி இருக்கிறது என நாளிதழ் ஆசிரியர் குழு யோசித்தது. 2021ஆம் ஆண்டு, பதிமூன்று வயதான பயனர் ஒருவர் டிக்டாக்கில் கணக்கு தொடங்கினார். ஒன்லி பேன்ஸ் என்ற டிக்டாக்கின் கணக்கில் இ...

எர்டோகனுக்கு ஆதரவில்லாத நிலைமை - உள்ளூர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றி

படம்
  துருக்கியில் அதிபருக்கு எதிரான நிலை - உள்ளூர் நிர்வாகத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றி துருக்கியில் அதிபராக உள்ளவர் ரிசெப் எர்டோகன். இவரது கட்சி, நீதி மேம்பாட்டு கட்சி. அண்மையில் அங்கு நடந்த உள்ளூர் தேர்தலில் அவரது கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றுள்ளனர். இருபது ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள அதிகாரத்தை சுவைத்து வரும் எர்டோகனுக்கு இது பெரிய சறுக்கல்.  துருக்கி நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி, குடியரசு மக்கள் கட்சி. இந்த கட்சியினர், உள்ளூர் தேர்தலில் போட்டியிட்டு 36 முனிசிபாலிட்டிகளை கைப்பற்றியுள்ளனர். இதில் இஸ்தான்புல், அங்காரா, இஸ்மிர், புர்சா, அன்டால்யா ஆகிய முக்கிய நகரங்கள் உள்ளடங்கும்.  தேசிய அளவிலான தேர்தலில் எர்டோகன் வென்று ஓராண்டு கூட நிறைவடையவில்லை. அதற்குள் அதிபருக்கும், அவரது கட்சிக்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.  தேர்தலில் எதிர்க்கட்சிகள் 37 சதவீதம் வாக்குகளைப் பெற்றன. 2019ஆம் ஆண்டு 44 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்த அதிபரின் நீதி மேம்பாட்டுக் கட்சி, 36 சதவீத வாக்குகளை உள்ளூர் தேர்தலில் பெற்றது. அதிபரின் கட்சி, இஸ்தான்புல் நகரை இழந்து...

காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான செலவு

படம்
  காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான செலவு காலநிலை மாற்றம் என்பதைப் பொறுத்தவரை வளர்ந்த நாடுகள் ஒருவிதமாகவும், வளரும் நாடுகள் ஒருவிதமாகவும் நடந்துகொள்கின்றன. வளர்ந்த நாடுகள், காலநிலை மாற்ற விதிகளை பயன்படுத்தி வளரும் நாடுகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்த முயல்கின்றன. வளரும் நாடுகள், பணக்கார நாடுகளின் விதிகள் தங்களுக்கு பொருந்தாது. நாங்கள் இன்னும் பொருளாதார வளர்ச்சி பெறவில்லை என்று கூறி பசுமை விதிகளை அமல் செய்ய மறுக்கின்றன. எதிர்காலத்தில் காலநிலை மாற்றத்தை அமல்படுத்த குறிப்பிட்ட தொகையை வளர்ந்த நாடுகள் தர வேண்டியிருக்கும். இதற்கான அடித்தளத்தை காப்29, அசர்பைஜானில் நடக்கும் மாநாடு அமைக்கும் என நம்பலாம்.  துபாயில் கடந்த ஆண்டு நடைபெற்ற காலநிலை மாநாட்டில், 2030ஆம் ஆண்டிற்குள் தூய ஆற்றல் வளங்களை மூன்று மடங்கு வளர்ச்சி கொண்டதாக மாற்ற வேண்டும் என தீர்மானம் கொண்டு வரப்பட்டது. நடப்பு ஆண்டில், இலக்கு என்பது நாடுகள் அளிக்க வேண்டிய நிதியாக இருக்கும். இதை என்சிக்யூஜி என சுருக்கமாக குறிப்பிடுகிறார்கள். புதிய ஒருங்கிணைந்த கூட்டு இலக்கு என தமிழில் கூறலாம்.  2025ஆம் ஆண்டு தொடங்கி வளர்ந்த ந...

சூழல் சட்டங்களுக்கு எதிராக ஐரோப்பாவில் விவசாயிகள் போராட்டம்!

படம்
  ஐரோப்பாவில் விவசாயிகள் போராட்டம்! விவசாயிகள் மேற்குலக நாடுகளில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, அரசு விதிமுறைகளை மாற்றக்கோரி பெரும் திரளாக போராடி வருகிறார்கள். போலந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளில் உக்கிரமான போராட்டங்கள் நடந்து வருகின்றன. காலநிலை மாற்றம், ஐரோப்பிய யூனியனின் சூழல் பாதுகாப்பு விதிமுறைகள், இறைச்சி, தானியங்களை மலிவான விலைக்கு அரசுகள் இறக்குமதி செய்வது, உரவிலை ஏற்றம் ஆகியவை முக்கியமான காரணங்கள். உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போரும் இன்னொரு மறைமுக காரணி.  உலக நாடுகளில் வேறுபாடுகள் இன்றி வெப்ப அலை, வெள்ளம், பஞ்சம், காட்டுத்தீ பாதிப்புகள் ஏறபட்டு வருகின்றன. இந்த பாதிப்புகள் ஏற்படும் கால அளவு நீண்டுகொண்டே வருகிறது. வெப்பம் இயல்பாகவே அதிகரித்து வருகிறது. ஐரோப்பாவில் கடந்த 2022, 2023 ஆண்டுகளில் ஆலிவ் எண்ணெய் உற்பத்தி எதிர்பார்த்த அளவு நடைபெறவில்லை. ஸ்பெயின் நாட்டில் கோதுமை, அரிசி, பார்லி ஆகிய தானியங்கள் உற்பத்தி பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.  ஜெர்மனி, போலந்து நாடுகளில் அதிக மழைபொழிவு காரணமாக கோதுமை பயிர் சேதமாகி அறுவடை செய்யும் காலம் தவறிப்போயுள்ளது. இத்த...

அகதிகளை சிறையில் அடைக்கும் இங்கிலாந்து அரசு!

படம்
  ஐக்கிய ராஜ்ஜியத்தைச் சேர்ந்த இங்கிலாந்து அரசு, தனது நாட்டுக்கு வந்து குடியேற விரும்பும் மக்களை போர்ட்லேண்டில் உள்ள பிபிஸ்டாக்ஹோம் எனும் மிதக்கும் சிறையில்(கப்பலில்) அடைத்து வருகிறது. ஏற்கெனவே தங்கள் நாடுகளில் இருந்து உயிர்பிழைக்க சிறு படகுகளில் தப்பித்து வருபவர்களை இப்படி கடல் நடுவில் கட்டுமானத்தை உருவாக்கி தங்கச் செய்யலாமா, இது அவர்களது உடல், மனநிலையை பாதிக்கும் என மக்கள் போராடி வருகிறார்கள். ஆனால், ஒப்பீட்டளவில் அகதிகளை வெறுக்கும் வலதுசாரித்துவத்திற்கு அதிக ஆதரவு கிடைத்துவருகிறது. மகத்தான இந்திய வம்சாவளி பெருமை கொண்ட பிரதமர் ரிஷி சுனக், அகதிகள்   இங்கிலாந்து நாட்டிற்கு வருவதைத் தடுக்க பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார். அதில் ஒன்றுதான், இப்படி வரும் மக்களை குடும்பமாக 500 படுக்கைகள் கொண்ட மிதக்கும் சிறையில் அடைத்து வைப்பது. அடுத்து, அகதிகளுக்கு வேலை கொடுக்கும், தங்க இடம் கொடுக்கும் உள்நாட்டு மக்கள் மீது அதிகளவு அபராதம் விதிப்பது ஆகிய அரிய செயல்களை முன்னெடுத்து தனது முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டுவருகிறார்.   கடந்த ஆண்டு அகதிகளை ஹோட்டலில் தங்க வைத்த வகையில் அரசுக்...

யாவரும் ஏமாளி 2 நூலை வாசியுங்கள்- அமேஸான் வலைத்தளம் வழியாக .....

படம்
  யாவரும் ஏமாளி 2 அட்டைப்படம் ஒரு பொருளை வாங்குவதை எப்படி முடிவுசெய்கிறோம், விலை என்பதை விட அதைத் தாண்டிய நிறைய காரணங்கள் உள்ளன. இந்த வகையில் யாவரும் ஏமாளி 2, நமது மூளையில் உள்ள சில அம்சங்களை அடையாளம் கண்டு வாங்கும் பழக்கத்தைப் பற்றிய அறிவியல் அம்சங்களைக் கூறுகிறது. இந்த வகையில், உங்களால் செலவுகளைக் கட்டுப்படுத்த முடியும். குறைந்தபட்சம் ஏன் பொருட்களை வாங்கினோம் என யோசிக்க முடியும். அந்த வகையில் இந்த நூல் ஒருவருக்கு சிக்கனமாக இருக்க கற்றுக்கொடுக்கிறது.  நூலை வாசிக்க.... https://www.amazon.in/dp/B0CB1S9R8Z

புத்தகத் திருவிழாவிற்கு சென்ற ஜீனியஸ்!

படம்
  நரசிங்கபுரம் 24/1/2023 அன்பரசு சாருக்கு, அன்பு வணக்கம். நலமா? வேலை இல்லாத சூழலில், பொருளாதாரம் மாபெரும் சிக்கலாக இருக்குமே? எப்படி எதிர்கொள்கிறீர்கள்? தோல் பிரச்னைக்கு கூடுதல் செலவாகுமே? வேலைக்கான முயற்சி எந்தளவில் உள்ளது? சென்றவாரம் திங்கட்கிழமை 16/1/2023 அன்று புக்ஃபேர் சென்றேன். சாணக்கிய நீதி, நினைவாற்றலை வளர்க்க என்ன செய்வது? ஆர்வமூட்டும் முல்லா கதைகள் ஆகிய நூல்களை வாங்கினேன். அறிவியல் தொடர்பாக ஒரு ஆங்கில நூல் கிடைத்தது. கணிதத்திற்கென எந்த புத்தகமும் இல்லை; சிவராமன் சார் எழுதிய நூல்கள் தவிர. வரும் மார்ச் பத்திற்குள் மாணவர் இதழ் வெளியீடு நிறைவடைகிறது. ஒரு வாரம், முன்னதாக கட்டுரைகளை வழங்கி வருகிறேன். யாரும் கேள்வி கேட்காத வகையில் காலம் நகர்கிறது. மார்ச் 10க்குப் பிறகு புத்தகம் ஏதேனும் வடிவமைக்கவேண்டும்.   அடுத்த ஆண்டுக்கான இதழ்   தொடங்குவதற்கு முன்…. முல்லாவின் கதைகளைப் படித்தேன். 46 பக்கங்கள் கொண்ட சிறு புத்தகம் அது. சுவாரசியமாக இருந்தது. பிரச்னைகளை எவ்வாறு சமாளிக்க வேண்டும், நுணுக்கமான தந்திரங்களை பேச்சில் எவ்வாறு சேர்க்க வேண்டும் என முல்லா நினைவூட்டியிருக...

உடல் எடையைக் கூட்டும் பதப்படுத்தப்பட்ட உணவுகள்! - உடல் எடையைக் குறைக்க என்ன செய்யலாம்?

படம்
  உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் தினசரி வாழ்வில் ஊறுகாய் முதல் உப்புக்கண்டம் வரை ஏராளமான பதப்படுத்தப்பட்ட பொருட்களை நாம் பயன்படுத்தி வருகிறோம். பதப்படுத்தப்பட்ட பொருட்களின் மூலம் உடலில் சேர்பவை என்னென்ன? சர்க்கரை, கொழுப்பு, உப்பு (சோடியம்). உண்மையில் பதப்படுத்தப்பட்ட பொருட்களை முழுக்க தவிர்க்க முடியாது. ஏனெனில், காய்கறி, பழங்களை விட பதப்படுத்தப்பட்ட பொருட்கள் நாற்பது சதவீதம் விலை குறைவானவை. பொருளாதார நோக்கில் பார்த்தால் மக்களுக்கு இப்பொருட்களை வாங்குவது பர்சைக் கடிக்காத விஷயம். ஆனால், ஆரோக்கிய நோக்கில் பார்த்தால் உடல் ஆரோக்கியத்தை இழக்க வேண்டி வரும். உடல் பருமன் அதிகரித்து நீரிழிவு நோய் வந்தால் அதை எதிர்கொள்வது இன்னும் கடினமானது. வெளிநாடுகளில், 2022ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் 70 ஆயிரம் மக்கள் பங்கேற்றனர். பதப்படுத்தப்பட்ட பொருட்களை ஒருவர் பத்து சதவீதம் உண்டபோது, அவருக்கு நீரிழிவு ஏற்படும் வாய்ப்பு 25 சதவீதம் அதிகரித்தது. அதாவது, ஆரோக்கியமான உணவுகளை உண்பவர்களை விட ஏழு மடங்கு அதிக எடை ஆபத்து உருவானது. வீட்டுச் சமையலில் பயன்படுத்தாத பதப்படு...

கட்டுமானங்களுக்கு குப்பைகேள போதும்!

படம்
  கட்டுமானங்களுக்கு குப்பைகளே போதும்!  கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சூளகிரியில் சூழலுக்கு உகந்த வகையில் வீடு ஒன்றைக் கட்டி வருகிறார்கள். இந்த வீட்டை அங்குள்ள மக்கள் ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள். இதில் பயன்படுத்தும் பொருட்கள் , பலவும் குப்பைக்கிடங்கில் இருந்து பெறப்பட்டவை.  இந்த வீட்டுக்கு உரிமையாளர் அபிஷேக், பெங்களூருவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிகிறார்.  இவருக்கு சூழலை மாசுபடுத்தாதபடி வீட்டைக் கட்டும் ஐடியாவைக் கூறியது பொறியாளர் வினு கோபால்.  அதனை வடிவமைத்தவர் கேரளத்தைச் சேர்ந்த பவாஸ் தென்கிலன். வினு கோபால், குப்பைச் சுவர் (Debris wall ) என்ற நுட்பத்தை காப்புரிமை செய்து வைத்துள்ளார். இதன்படி, 2007ஆம் ஆண்டு முதல் கட்டடங்களை வடிவமைத்து வருகிறார். இவர், உருவாக்கும் கட்டடங்கள் அனைத்துமே பிறர் தூக்கியெறிந்த குப்பைகளாலானவை.   கட்டுமானப் பொருட்களை 5 கி.மீ. தொலைவுக்குள் உள்ள குவாரி, கட்டுமான இடங்கள் ஆகியவற்றிலிருந்து கழிவுப்பொருட்களிலிருந்து பெறுகிறார்.  அதை சேகரித்து வீடுகளை கட்டிவருகிறது வினுவின் குழு. இந்த வகையில்  தூக்கியெறியப்பட்ட ...

பயன்பாடற்ற சுரங்கத்திலிருந்து மின்சாரம் எடுக்கமுடியுமா?

படம்
  பயன்பாடற்ற சுரங்கத்திலிருந்து மின்சாரம்! பிரான்சில் உள்ள நகரம், ஏவியன். இங்கு முன்னர் நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்பட்டு வந்தது. தற்போது பயன்பாடற்ற அதிலிருந்து வெளியாகும் மீத்தேன் வாயுவை சேகரித்து மின்சாரம் உற்பத்தி செய்து வருகிறார்கள். 50 அடி ஆழத்தில் குழாய்களைப் பதித்து அதன் மூலம் மீத்தேன் வாயுவை சேகரித்து பயன்படுத்துகிறார்கள்.  பொதுவாக பயன்பாடற்ற நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு வெளியாகும். இதனைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம் சிலர் முயன்று வருகிறார்கள். மீத்தேனிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வது புதிய முயற்சி அல்ல. 1950ஆம் ஆண்டிலிருந்து இங்கிலாந்தில் பயன்பாடற்ற சுரங்கங்களிலிருந்து மீத்தேன் வாயுவிலிருந்து மின்சாரத்தை பெற்று வருகிறார்கள். ஜெர்மனியில் இப்படி பெறும் மின்சாரம் மூலம் 1,50,000 வீடுகள் பயன்பெறுகின்றன.  சுரங்கத்தில் வெளியாகும் மீத்தேனை தடுப்பது கடினம். இந்த வாயு, நீருடன் சேர்ந்தால் நச்சுத்தன்மையை உருவாக்கும். வாயுவை அப்படியே வளிமண்டலத்தில் சேருமாறு விட்டால், பசுமை இல்ல வாயுக்களின் அளவு கூடும். பிரான்ஸில் ஃபிராங்கைஸ் டி எனர்ஜி என்ற அமைப்பு,...

காலாவதியான சோலார் செல்களைப் பயன்படுத்தி உருவான கட்டடம்!

படம்
  சோலார் பேனல் கட்டடம்!  சோலார் பேனல்களைப் பயன்படுத்திய பிறகு என்ன செய்வதென பலருக்கும் குழப்பம் ஏற்படலாம். அதற்காகவே பெங்களூருவிலுள்ள இந்திய அறிவியல் கழகத்தில் செயல்படும் சூழல் தொழில்நுட்ப மையம், தீர்வொன்றை கண்டுபிடித்துள்ளது. அறிவியல் கழகத்திலிருந்து 30 கி.மீ. தொலைவில் நெலமங்கலா எனும் இடத்தில் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. அறிவியல் கழகத்தின் சூழல் மையத்தினர், கட்டடத்தைக் கட்ட பயன்பாடற்ற சோலார் பேனல்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.  ”நாங்கள் இக்கட்டடத்தை உருவாக்க 60 சதவீதம் போட்டோவால்டைக் செல்களைப் (PV) பயன்படுத்தியுள்ளோம்” என்றார்  சூழல் மையத்தின் உதவி பேராசிரியரான மான்டோ மணி.  2018ஆம் ஆண்டு, வெப்பம் சார்ந்த சில சோதனைகளைச் செய்ய சூழல் மையக் குழுவினர் விரும்பினர். இதற்கென தனி கட்டடம் தேவைப்பட்டது. ஆனால், அறிவியல் கழகத்திடம் நிதியில்லா சூழல். இந்நிலையில், பயன்பாடற்ற சோலார் பேனல்களையும், சிமெண்டையும்  பயன்படுத்தி கட்டடம் கட்ட திட்டமிட்டார் உதவி பேராசிரியர் மணி. இப்படி கட்டப்படும் கட்டடம் சோலார் பேனல்கள் பற்றிய ஆராய்ச்சிகளையும் செய்ய உதவுகிறது. பயன்பாடற்ற நிலையி...

ஸ்மார்ட் ஸ்ப்ரேயர்- செலவை மிச்சப்படுத்தும் சிறந்த கண்டுபிடிப்பு!

படம்
  ஆந்திர விவசாயி கண்டுபிடித்த ஸ்மார்ட் ஸ்ப்ரேயர்! விவசாயமுறைகளை தொழில்நுட்பங்கள் காலம்தோறும் மேம்படுத்தி  வருகின்றன.  தொழில்நுட்பங்களை ஏற்பதன் மூலம், விவசாயிகளின்  உற்பத்தி கூடுவதோடு, இதற்கான செலவுகளும் குறைகின்றன. அந்தவகையில் ஆந்திரத்தின் அம்ருதலூரு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி, ஸ்மார்ட் ஸ்ப்ரேயரைக் கண்டுபிடித்துள்ளார்.  கண்டுபிடிப்பாளரான விவசாயி மல்லேபெடி ராமகிருஷ்ணாவுக்கு வயது 50.  இவர், தனது 100 ஏக்கர் நிலத்திற்குப் பயன்படுத்த டிராக்டரில் பொருத்தும்படியான ஸ்மார்ட் ஸ்ப்ரேயரை உருவாக்கியுள்ளார். ஸ்மார்ட் ஸ்ப்ரேயரில் 1,800 லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்கர் உள்ளது. இதனை  இயக்க  5 ஹெச்பி மோட்டாரும் உள்ளது. இதன் மூலம் அவரது மொத்த நிலங்களுக்கும் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க, 3 லிட்டர் எரிபொருள் தான்  செலவாகியுள்ளது.  ஸ்ப்ரேயரை உருவாக்க பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று பாகங்களை வாங்கியுள்ளார்.   ராமகிருஷ்ணா தனது விவசாயப் பணிகள் போக, ஸ்மார்ட் ஸ்ப்ரேயரை அருகிலுள்ள விவசாயிகளுக்கு  வாடகைக்கும் தந்து வருகிறார். தனது நிலத்தைப் பார்வையிட...

அம்மா உணவகம் செயல்படுமா? மூடப்படுமா? - நெருக்கும் பிரச்னைகள்

படம்
  மொத்த அம்மா உணவகங்கள்  403 தினசரி ஏற்படும் நஷ்டம்  10--1000 மாதம்  1.2 லட்சம் மொத்த ஊழியர்கள் 4,500 ஒரு உணவகத்தில்... 12-25 பேர் ஆண்டு வருமானம்  15.5 கோடி ஆண்டு செலவு 102 கோடி மாநில அரசின் பொதுவிநியோகத்துறை உணவகத்திற்கு தேவையான பொருட்களை வழங்குகிறது.  புதிய விதிகள் மாதம் கட்டாயம் ஐந்து நாட்கள் விடுப்பு எடுக்கவேண்டும். இதன்மூலம் மாநகராட்சி மாதம் ஒரு கோடி ரூபாய் சேமிக்கலாம்.  பொருட்கள் உள்ளிருப்பு, வாங்குவது  என அனைத்தையும் ஊழல் இன்றி பராமரிக்க ஏராளமான பதிவேடுகள் நடைமுறையில் உள்ளன.  தவறுகள் கண்டறியப்பட்டால் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  கொரோனா காலத்தில் அம்மா உணவகம் இயக்கப்பட்டது. அப்போது உணவகத்திற்கு 120 முதல் 500 பேர் வந்தனர். ஆனால் இப்போது 20 முதல் 50 பேர் வந்தாலே பெரிய விஷயம். மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் உணவகத்தில் அதிக ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கணக்கு என்றால் இருபது வாடிக்கையாளர்களுக்கு ஒரு ஊழியர் என்பதுதான். ஆனால் வாடிக்கையாளர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஊழியர்கள் ஒருவருக்கு சம்பளம் ரூ.300 என வழங்குகிறா...

குழந்தை பெற்றுக்கொள்வதற்கான கொள்கைகளை தளர்த்தும் சீன அரசு

படம்
                மூன்று குழந்தை - சீனாவின் புதிய கொள்கை ரெடி சீனாவில் ஒரு குடும்பத்தில் இரண்டு குழந்தைகள் மட்டுமே இருக்கவேண்டும் என்ற கொள்கையை கடைபிடித்து வருகின்றனர் . இதனால் மூன்றாவது குழந்தையை ஒருவர் பெற முயன்றால் , குழந்தையை அரசே கருக்கலைப்பு செய்வதோடு அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது . சீன அரசு , இந்த கொள்கையை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக திட்டமிட்டு நடைமுறைப்படுத்தியது . நகரங்களில் குழந்தைகளுக்கான கல்விச்செலவு , வீட்டுக்கான வாடகை பெருமளவு அதிகரித்து வந்ததால் பெரும்பாலானோர் மிகவும் கஷ்டப்பட்டனர் . இதை தீர்க்கும் விதமாக அரசே இரண்டு குழந்தைகள் சட்டம் உருவாக்கப்பட்டது என சீன அரசு நாளிதழ்கள் கூறின . 1970 இல் ஒரே குழந்தை சட்டம் அமலாகி 2016 ஆம் ஆண்டு வரையில் நடைமுறையில் நடைமுறையில் இருந்தது . சிறுபான்மையினருக்கு மட்டும் இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது . பிறகு அரசு இந்தக் கொள்கையை மாற்றிக்கொண்டது . இப்படி பிறக்கும் குழந்தைகளுக்கான ஊக்கத்தொகையை அரசு வழங்கவேண்டியிருந்தது நிதிச்சுமையை ஏற்படுத்தியது ...

தானியங்கி கார் ஆராய்ச்சி உண்மையில் நிஜமாகும் வாய்ப்புள்ளதா?

படம்
              தானியங்கி கார் ஆராய்ச்சியில் தேக்கம் ! டெஸ்லா கார் நிறுவனம் அண்மையில் புதிய கார் ஒன்றை அறிமுகப்படுத்தியது . தானியங்கி முறையில் இயங்கும் டெஸ்லா காரில் எச்சரிக்கை வாசகம் ஊடகங்களில் கவனிக்கப்பட்டது . ’’’ தானியங்கி முறையில் இயங்கும் காரில் , தவறுகள் நேரவும் வாய்ப்புள்ளது . எனவே ஸ்டீரியங் வீலில் கைவைத்து வண்டியை இயக்குங்கள் . கவனமாக இருங்கள்’ ' என்று பொறுப்பு துறப்பு வாசகங்கள் கூறப்பட்டிருந்தன . தற்போதைய வாகனங்களில் டெஸ்லா நிறுவனம் தொழில்நுட்ப முன்னேற்றங்களில் முன்னிலை வகிக்கிறது . ஆனாலும் முழுமையாக தானியங்கி முறையில் கார்களை இயக்கும் முறையில் அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது . சில ஆண்டுகளுக்கு முன்னர் தானியங்கி கார்கள்தான் எதிர்காலம் என உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் கூறின . தானியங்கி கார்கள் தயாரிப்புக்கான காலக்கெடுவை விதித்து ஆராய்ச்சி செய்யத் தொடங்கின . ஆனாலும் இன்றுவரை ஒரு நிறுவனம் கூட முழுமையான ஓட்டுநர் இல்லாத தானியங்கி கார்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வர முடியவில்லை . இதற்கு தடையாக இருக்கும் கார...