காலாவதியான சோலார் செல்களைப் பயன்படுத்தி உருவான கட்டடம்!

 









சோலார் பேனல் கட்டடம்! 

சோலார் பேனல்களைப் பயன்படுத்திய பிறகு என்ன செய்வதென பலருக்கும் குழப்பம் ஏற்படலாம். அதற்காகவே பெங்களூருவிலுள்ள இந்திய அறிவியல் கழகத்தில் செயல்படும் சூழல் தொழில்நுட்ப மையம், தீர்வொன்றை கண்டுபிடித்துள்ளது. அறிவியல் கழகத்திலிருந்து 30 கி.மீ. தொலைவில் நெலமங்கலா எனும் இடத்தில் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. அறிவியல் கழகத்தின் சூழல் மையத்தினர், கட்டடத்தைக் கட்ட பயன்பாடற்ற சோலார் பேனல்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.  ”நாங்கள் இக்கட்டடத்தை உருவாக்க 60 சதவீதம் போட்டோவால்டைக் செல்களைப் (PV) பயன்படுத்தியுள்ளோம்” என்றார்  சூழல் மையத்தின் உதவி பேராசிரியரான மான்டோ மணி. 

2018ஆம் ஆண்டு, வெப்பம் சார்ந்த சில சோதனைகளைச் செய்ய சூழல் மையக் குழுவினர் விரும்பினர். இதற்கென தனி கட்டடம் தேவைப்பட்டது. ஆனால், அறிவியல் கழகத்திடம் நிதியில்லா சூழல். இந்நிலையில், பயன்பாடற்ற சோலார் பேனல்களையும், சிமெண்டையும்  பயன்படுத்தி கட்டடம் கட்ட திட்டமிட்டார் உதவி பேராசிரியர் மணி. இப்படி கட்டப்படும் கட்டடம் சோலார் பேனல்கள் பற்றிய ஆராய்ச்சிகளையும் செய்ய உதவுகிறது. பயன்பாடற்ற நிலையிலும்  பேனல்கள்  10-20 வாட் வரையிலான ஆற்றலை சேகரிக்கிறது. இந்த ஆற்றலைக் கொண்டு வைஃபை ரூட்டர் அல்லது ஸ்மார்ட்போனை இயக்கலாம் என மணி எண்ணுகிறார்.

சோலார் பேனல்களில் கட்டடங்களை உருவாக்குவதில் சில சவால்கள் உள்ளன. கோடை, குளிர் காலங்களில் அதன் உள்ளே இருக்க தேவையான வெப்பம், குளிர் ஆகியவற்றை உருவாக்குவது, அதற்கு தேவையான மின்சாரம் பற்றி சூழல் மையத்தினர் ஆலோசித்து வருகின்றனர். சோலார் பேனல்களில் பயன்படுத்தப்படும் வெள்ளி, டின், காரீயம் ஆகிய உலோகங்களின் நச்சு பாதிப்பு ஏற்படுத்தலாம். அடுத்து, பேனல் உட்புறத்திலுள்ள பாலிமர்கள் மைக்ரோபிளாஸ்டிக்குகளாக மாறினால் புற்றுநோய், நீரிழிவு நோய் அபாயங்களும் சவாலாக உள்ளன. 


டவுன் டு எர்த் 

மே 2022

The Charged view

Rohini krishnamurthy

downtoearth

 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்