மூளையில் ஏற்படும் வினோதமான பிரச்னைகள்!

 














லெதோலாஜிகா (Lethologica)

நண்பரை சந்தித்து ஏதாவது பேசிக்கொண்டிருக்கிறீர்கள். திடீரென இடையில் உங்களால் தொடங்கிய வாக்கியத்தை முடிக்க முடியவில்லை. பேச நினைக்கும் வார்த்தை உங்களுக்கு நினைவுக்கு வரமாட்டேன்கிறது. நாக்கில் இருக்கிறது ஆனால் வெளியே வரமாட்டேன்கிறது என்பார்களே அந்த நிலை இதுதான். வார்த்தைகளை சரியாக நினைவுகூர முடியாத நிலைக்கு லெதோலாஜிகா. வயது வந்த ஒருவர் தோராயமாக 50 ஆயிரம் வார்த்தைகளை நினைவுகூர முடியும் என மூளை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 

தேஜா வூ (Deja Vu) 

தேஜா வூ  என்பதற்கு, பிரெஞ்சு மொழியில் ஏற்கெனவே பார்த்தது என்று பொருள். நிகழ்காலத்தில் நடக்கும் சம்பவத்தை ஏற்கெனவே அறிந்தது போலவே தோன்றும் நினைவு தான் தேஜா வூ. உலகிலுள்ள மூன்றில் இருபங்கு ஆட்களுக்கு தேஜா வூ என்ற நிகழ்ச்சி நடந்திருக்கும். மனநிலைக் குறைபாடு கொண்டவர்களுக்கு தேஜா வூ என்பது பதற்றமான சூழலில் ஏற்படுகிறது. புதிய சூழலில் மூளையில் ஏற்படும் தூண்டல் செயல்பாடுகளால் தேஜா வூ ஏற்படுகிறது. இதனால் செயற்கையான நினைவு மூளையில் உருவாகிறது. பொதுவாக தேஜா வூ என்பது புதிய இடங்களுக்குச் செல்லும்போதும் புதிய அனுபவங்களை எதிர்கொள்ளும்போதும் நடைபெறுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். 

மிசோபோனியா (Misophonia)


புத்தக பிரியர்களுக்கு அவர்களின் நூல்களை மடித்து வைத்தால், தலைகீழாக நூல்களை வைத்தால் பிடிக்காது. மிசோபோனியா என்பது சில ஒலிகளைக் கேட்டால், தீவிரமான பதற்றத்திற்குள்ளாகுபவர்கள் பற்றியது. இவர்களுக்கு சூயிங்கம் மெல்லும் ஒலி, காலை தரையில் தட்டும் ஒலி, கடிகாரத்தின் டிக் ஓசை இவை கூட கடுமையான பதற்றத்தை ட்ரிக்கர் செய்யும்.  இந்த மிசோபோனியா நிலையை  உளவியலாளர்கள் இன்னும் முழுமையாக ஆய்வு செய்யவில்லை. டூரெட் சிண்ட்ரோம், ஓசிடி குறைபாடு கொண்டவர்களுக்கு ஏற்படும் குறைபாட்டு நிலை என கூறுகிறார்கள். 

டோர்வே எஃபக்ட் (Doorway effect)


ஒரு இடத்திற்கு ஏதாவது வேலையை நினைத்துக்கொண்டு செல்வீர்கள். ஆனால் அங்கு போனவுடன் எதற்காக அங்கு வந்தோம் என்பது மறந்துவிடும். இதற்கு காரணம், மூளை இடம் பற்றிய நினைவுகளை சரியாக முழுமையாக இணைத்துப் பார்க்கவில்லை. கதவுகளைத் திறந்து உள்ளே நுழையும்போது பலருக்கும் தான் எதற்கு அங்கு வந்தோம் என நினைவுக்கு வரும். அதுதான் டோர்வே எஃபக்ட். நினைவுகளின் தொடர்ச்சியை அறையின் கதவு தடுத்து சூழலுக்கு ஏற்றபடி நம்மை மாற்றியமைக்கிறது. 

How it works






கருத்துகள்

பிரபலமான இடுகைகள்