இடுகைகள்

பல்கலைக்கழகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இவான் பாவ்லோவ் செய்த உளவியல் ஆராய்ச்சி

படம்
          இவான் பாவ்லோவ்     1890 ஆம் ஆண்டு , ரஷ்ய மருத்துவரான இவான் பாவ்லோவ் உளவியல் கோட்பாடுகளை ஆய்வு மூலம் அமெரிக்கா , ஐரோப்பாவிற்கு நிரூபிக்க நினைத்தார் . விலங்குகளை பழக்க முடியும் . அவற்றை குறிப்பிட்ட முறையில் பழக்கி எதிர்வினையைப் பெறலாம் என்பதே இவானின் ஆய்வு நோக்கம் . ஆய்வகம் என்பது கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலைகளைக் கொண்ட இடம் . அங்கு விலங்குகளை வைத்து சோதனை செய்து அதன் வழியாக முடிவுகளைப் பெறுவது , அதை வைத்து சோதனைகளை மனிதர்களுக்கு செய்வது என்பதே இறுதி திட்டம் . ஒருவரின் குணநலன் என்பது அவர் வாழும் சூழலோடு தொடர்புள்ளதாகவே உள்ளது . அதன் அடிப்படையில்தான் குண மாறுதல்கள் அடையாளம் காணப்படுகின்றன . ஊக்கமூட்டுதல் – எதிர்வினை என்ற கோட்பாட்டை ஜான் வாட்சன் உருவாக்கினார் . இந்தக் கோட்பாடு ஒரு சிறிய உதாரணம்தான் . இதன் அடிப்படையில் ஏராளமான கோட்பாடுகள் உருவாகின . அமெரிக்கா , ஐரோப்பாவில் உள்ள மக்களும் இதை ப்பற்றி அறிந்துகொள்ள முயன்றனர் . அப்போது , வியன்னா நாட்டைச் சேர்ந்த நரம்பியலாளர் மனம் பற்றிய புதிய கோட்பாட்டை உருவாக்கினார் . அதுவரை உளவியல் பற்றிய ஆய்வறிக்கைகள் கோட்பாடுகள்

பெண்கள் அழகுக்காக மட்டும்தான்-

படம்
  பெண்கள் அழகுக்காக மட்டும்தான்- திட்டமிட்டு பொதுபுத்தியை உருவாக்கும் ஜப்பான் பல்கலைக்கழகங்கள்   கல்லூரிகளில் மாணவர் தேர்தல் நடைபெறும். அதில் வெற்றி பெறுபவர் பின்னாளில் மாநில அரசியல் கட்சியில் ஏதாவதொரு பதவியில் உயர்வார். அடுத்தடுத்த இடங்களுக்கு நகர்வார். இது பொதுவான காட்சி. ஆனால் ஜப்பானைப் பொறுத்தவரை அங்கு பெண்கள் என்றால் எப்படி இருக்கவேண்டும் என்பதை படிக்கும்போதே மனதில் உறுதிபடுத்திவிடுகிறார்கள். ஜப்பான் வளர்ச்சி பெற்ற நாடு. பொருளாதார அளவில் இதைக் கூறுகிறேன். அதேசமயம் கலாசாரம் சார்ந்தும் அந்த நாடு உலகிற்கு கொடுத்த கொடைகள் அதிகம். ஆனால் பெண்களை அவர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதே அதிர்ச்சிக்குரியதாக உள்ளது. இளம்பெண்ணின் வனப்பு, ஆனால் சிறுமியின் உடல் என்பது ஃபேஷன் உலகில் எதிர்பார்க்கப்படும் உடல் தகுதி. இதனால் நிறைய பெண்கள் வாழ்க்கை ஊட்டச்சத்து பற்றாக்குறையாகி நோய்வாய்ப்படுவதையெல்லாம் கட்டுரைகளில் வாசித்திருப்பீர்கள். ஆனால் இப்படி பெண்கள் இருப்பதை ஒரு சமூகமே விரும்பினால், அப்படித்தான் இருக்கவேண்டுமென சமூக வலைத்தளங்களில் மக்கள் கருத்துக்களை தெரிவித்தால் எப்படியிருக்கும்? இதுபோ

ஊடகங்களைப் பயன்படுத்தி நீதியின் முதுகெலும்பை முறிக்கும் அதிகார அரசியல்- ஜனகனமண -2022

படம்
  ஜனகனமண பிரிதிவிராஜ் சுகுமாரன் (நடிப்பும், தயாரிப்பும்) மம்தா மோகன் தாஸ்  இசை - ஜேக்ஸ் பிஜாய்    கல்லூரி பேராசிரியர் சபா, வல்லுறவு செய்யப்பட்டு எரித்துக்கொல்லப்படுகிறார். அவர் சென்ட்ரல் யுனிவர்சிட்டியில் பணியாற்றி வருகிறார். அவரின் இரங்கல் கூட்டத்தை கூட  அதன் தலைவர் விட்டேத்தியாக நடத்துவதோடு அவமானப்படுத்தி பேசுகிறார். இதனால் பல்கலைக்கழகம் முழுக்க போர்க்களமாகிறது. காவல்துறை பல்கலைக்கழகத்திற்குள் புகுந்து தாக்க ரணகளமாகிறது சூழ்நிலை. இதை விசாரிக்க ஏசிபி சாஜன் குமார் நியமிக்கப்படுகிறார். சபா என்ற பெண்ணைக் கொன்றவர்களை அவர் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதே கதை.  படத்தின் நாயகன் சாஜன் குமாராக நடித்துள்ள சூரஜ் வெஞ்சரமூடுதான். தொடக்க காட்சியில் பிரிதிவிராஜை கைது செய்து சிறைக்கு அழைத்து செல்கிறார்கள். அதற்குப் பிறகு தொடரும் காட்சிகளில் சபாவின் வழக்கு வருகிறது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு பிறகு, பிரிதிவிராஜ் திரையில் வருகிறார். முதல்முறை வந்தது போல இளமையாக அல்ல. மத்திய வயது ஆளாக, ஒரு கால் செயலிழந்தவராக , வழக்குரைஞராக இருக்கிறார். படத்திற்கு இரண்டாவது பாகத்திற்கான முன்னோட்டத்தையும் கொடுத்து விட

டிஜிட்டல் கல்வியும், வளாக கல்வியும் மாற்றங்களை தரும்!

படம்
  கலப்புக் கல்வி தற்போது பல்கலைக்கழகங்கள்  இயங்கத் தொடங்கியுள்ளன. ஆன்லைன் கல்வியுடன் இனி வளாக கல்வியும் தொடர அதிக வாய்ப்புகள் உள்ளன.  சிறப்பான இணைய இணைப்பு உள்ள இடங்களில் ஆன்லைன் வகுப்புகள்  நல்ல பயனைக் கொடுத்துள்ளன. இதனை குறைவான கட்டணத்தில் உலகில் உள்ள யாருமே அணுக முடியும் என்பது முக்கியமானது.  சுயமாக கற்றல் ஆன்லைனில் பாடங்கள் நடைபெற்றாலும் அதனை புரிந்துகொள்ளவும் மேற்கொண்டு பாடங்களிலுள்ள விஷயங்களை அறியவும் இணையம் உதவுகிறது. பாடங்களைப் பற்றி எளிதாக கருத்துக்களை கூறமுடிவது முக்கியமான சாதக அம்சம்.  வெளிநாட்டிலும் கல்வி ஆன்லைன் கல்வி முறையில் நாட்டின் எல்லைகள் தலையிடமுடியாது. இம்முறையில் வெளிநாட்டு மாணவர்களும் கூட விரும்பினால் கட்டணம் கட்டி பாடங்களை படிக்க முடியும்.  ஆன்லைன் கல்விமுறையை இந்திய கல்வி நிறுவனங்கள் மேம்படுத்தினால் எதிர்காலத்தில் ஏராளமான வெளிநாட்டு மாணவர்களைப் பெற முடியும்.  வயது வந்தவர்களுக்கான கல்வி முதலில் கல்வி கற்பது என்பது வயது வரம்பைத் தாண்டி வளரவில்லை. ஆன்லைன் முறை அதனையும் மாற்றியுள்ளது. கொரோனா காலத்தில் திறனில் பின்தங்கியுள்ளவர்கள் கூட புதிய ஆன்லைன் படிப்புகளை படிக்க

இங்கிலாந்தில் தேர்ச்சியைக் கணிக்கும் அல்காரிதம்! - ஏழை மாணவர்களை ஓரங்கட்டும் புதிய முறை

படம்
          தேர்ச்சியைக் கணிக்கும் அல்காரிதம் ! இங்கிலாந்தில் கொரோனா தொற்று பிரச்னையால் , மாணவர்களின் தேர்வு நிறுத்திவைக்கப்பட்டு முந்தை ஆண்டு மதிப்பெண்களே வழங்கலாம் என தீர்மானிக்கப்பட்டது . ஆனால் இதற்கிடையில் அவர்களின் மதிப்பெண்களை மதிப்பிட கல்வி அமைச்சகம் அல்காரிதம் ஒன்றைப் பயன்படுத்தியது . இதன் விளைவாக வெளியான தேர்வு முடிவுகளில் ஏ கிரேட் மாணவர்கள் 40 சதவீதம் பேர் மிகவும் குறைவான மதிப்பெண்களைப் பெற்றிருந்தனர் . ஆசிரியர்களின் கணிப்பை விட அல்காரிதத்தின் கணிப்பு முறை மாணவர்களின் தேர்ச்சி தரத்தை குறைத்துள்ளது நாடெங்கும் சர்ச்சையானது . மாணவர்கள் தெருவுக்கு வந்து போராடத்தொடங்கினர் . இப்பிரச்னையைத் தீர்க்க இங்கிலாந்து கல்வி அமைச்சகம் , ஆசிரியர்களின் யூக தேர்ச்சி முறையை செயல்படுத்துவதாக அறிவித்துவிட்டது . அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் பலரும் அல்காரித முறையில் தேர்ச்சியை இழந்துள்ளனர் . இவர்கள் சட்டம் , இலக்கியம் ஆகிய படிப்புகளை படித்தவர்கள் ஆவர் . அல்காரிதத்தில் ஆசிரியர்களின் பரிந்துரை , மாணவர்களின் முந்தைய ஆண்டு மதிப்பெண்கள் ஆகியவை உள்ளீடு செய்யப்படவில்லை . எனவே வ

வாரி வழங்கும் ஆசிய பணக்காரர்கள்! கல்வி, சமூகம், வறுமை ஆகியவற்றுக்கே முதலிடம்

படம்
      asia rich mans- pixabay       மானுவேல் வில்லர் விஸ்டா மால் அண்ட் விஸ்டா லேண்ட் அண்ட் லேண்ட்ஸ்கேப்ஸ் பிலிப்பைன்ஸ் நாட்டின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தக்காரர் . இரண்டு ஹெக்டேர் நிலத்தை கத்தோலிக்க பள்ளி கட்டுவதற்கு தானமாக அளித்துள்ளார் . பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகத்திற்கு ஐந்து ஹெக்டேர் நிலத்தை தானமாக அளித்துள்ளார் . மேற்சொன்ன தான நடவடிக்கையின் மதிப்பு 165 மில்லியன் டாலர்கள் . நான்கு பிலிப்பைன்ஸ் பள்ளிகளுக்கு பல்வேறு வசதிகளை செய்துகொடுத்துள்ளார் . தேவாலயங்களுக்கான நிதியுதவி , கொரோனாவுக்கு எதிரான பல்வேறு பொருட்கள் என வழங்கி வருகிறார் . எலினார் க்வோக் லா க்வாய் சுன் சா சா இன்டர்நேஷனல் ஹாங்காங் ஆசியாவின் அழகு சாதனப் பொருட்கள் நிறுவனமான சா சா நிறுவனத்தின் துணை நிறுவனர் சுன்தான் . இவர் தற்போது துணைத்தலைவராக நிறுவனத்தில் உள்ளார் . 9 மில்லியன் டாலர்களை பல்வேறு அறப்பணிகளுக்கு வழங்கியுள்ளார் . 19 ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த போ லியுங் குக் என்ற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான நிறுவனத்திற்கு நிதியுதவியை அளித்துள்ளார் . கடந்த ஆண்டு இயற்கை பாதுகா