பெண்கள் அழகுக்காக மட்டும்தான்-

 












பெண்கள் அழகுக்காக மட்டும்தான்- திட்டமிட்டு பொதுபுத்தியை உருவாக்கும் ஜப்பான் பல்கலைக்கழகங்கள்
 

கல்லூரிகளில் மாணவர் தேர்தல் நடைபெறும். அதில் வெற்றி பெறுபவர் பின்னாளில் மாநில அரசியல் கட்சியில் ஏதாவதொரு பதவியில் உயர்வார். அடுத்தடுத்த இடங்களுக்கு நகர்வார். இது பொதுவான காட்சி. ஆனால் ஜப்பானைப் பொறுத்தவரை அங்கு பெண்கள் என்றால் எப்படி இருக்கவேண்டும் என்பதை படிக்கும்போதே மனதில் உறுதிபடுத்திவிடுகிறார்கள்.

ஜப்பான் வளர்ச்சி பெற்ற நாடு. பொருளாதார அளவில் இதைக் கூறுகிறேன். அதேசமயம் கலாசாரம் சார்ந்தும் அந்த நாடு உலகிற்கு கொடுத்த கொடைகள் அதிகம். ஆனால் பெண்களை அவர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதே அதிர்ச்சிக்குரியதாக உள்ளது.

இளம்பெண்ணின் வனப்பு, ஆனால் சிறுமியின் உடல் என்பது ஃபேஷன் உலகில் எதிர்பார்க்கப்படும் உடல் தகுதி. இதனால் நிறைய பெண்கள் வாழ்க்கை ஊட்டச்சத்து பற்றாக்குறையாகி நோய்வாய்ப்படுவதையெல்லாம் கட்டுரைகளில் வாசித்திருப்பீர்கள். ஆனால் இப்படி பெண்கள் இருப்பதை ஒரு சமூகமே விரும்பினால், அப்படித்தான் இருக்கவேண்டுமென சமூக வலைத்தளங்களில் மக்கள் கருத்துக்களை தெரிவித்தால் எப்படியிருக்கும்?

இதுபோல உதவாக்கரையான கருத்துகளை ஜப்பானில் கல்வி நிறுவனங்களே உருவாக்கி வருகின்றன. அங்குள்ள பல்கலைக்கழகங்களில் மிஸ்.கான்டெஸ்ட் என்ற அழகுப்போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த போட்டிகள் அங்கு கலாசார அளவிலும், சமூக வலைத்தளங்களிலும் வெகு பிரபலம். கெய்கோ, டோக்கியோ பல்கலைக்கழகங்களில் இத்தகைய போட்டிகள் சிறப்பு பெற்றவையாக நடக்கின்றன.

இதில் தேர்வாகி பட்டம் வெல்லும் பெண்கள், டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக, டிவி தொடர், சினிமாவில் வாய்ப்புகளை வெல்கிறார். இந்த பெண்களுக்கு மாடல் வாய்ப்புகளையும் பெருநிறுவனங்கள் வழங்குகின்றன. கல்லூரியில் பெண்கள் அழகுப் போட்டிக்கு தயாராகும்போது அவர்களை பின்பற்றும் மாணவர்கள், மாணவர் சங்கங்களே நிதியுதவி செய்கின்றன. இந்த பெண்கள் மரபான கலாசார தன்மையில் வட்டமான கண்களோடு, ரயில் போன்ற மாறாத உடல் அமைப்போடு இருக்கவேண்டும். இப்படி இருக்கும் பெண்களை கவாய் என்கிறார்கள். அதாவது அழகு.

சினிமாவில் சூப்பர் நட்சத்திரங்கள் பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டுமென சொல்லுவார்களே அதுபோன்ற இயல்பில் பெண்களை வற்புறுத்தி வார்த்தெடுக்கிறார்கள். ஆனால் இப்போது பல்கலைக்கழக அளவில் இதுபோல அழகுப்போட்டி நடத்துவதால் என்ன பிரயோஜனம் என கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன.

ஒரு பெண்ணை அவளின் உடல் வனப்புக்காக புகழ்வீர்களா, அல்லது அவள் கற்று தேர்ச்சியான சிறப்பான திறன்களுக்காகவா என்று கேட்டால் இந்த கட்டுரை எளிதாக அதன் பொருளை அடைந்துவிடும். பெண் என்றால் கலயம் போல மார்பகங்களும் உடுக்கை போல இடுப்பும், புடைத்த பெண்குறியும்தான் என்று வரையறை செய்தால் எப்படி? ஏறத்தாழ ஜப்பானிய பல்கலைக்கழகங்கள் பெண் என்பவளை இப்படித்தான் வரையறுக்கிறார்கள்.

முழுக்க எதிர்மறையாகவும் சொல்லவில்லை. சில மாற்றங்களும் உண்டு. டோக்கியோவில் உள்ள சோபியா பல்கலைக்கழகம், தனது அழகிப்போட்டியை பங்கேற்கும் பங்களிப்பாளர் சமூக செய்திகளை சமூக வலைத்தள கணக்கில் பகிரவேண்டும் என நிபந்தனையாகவே விதித்திருக்கிறது. ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால் இறுதிப்போட்டியில் பங்கேற்ற பங்கேற்பாளரான பெண் தனது முகத்தை மறைத்தபடி அழகு என்பது போட்டியின் முக்கியமான இலக்கு அல்ல என்பதை சொன்னதுதான். இப்படி சொன்னால் அந்த பெண் எங்கே போட்டியில் வெற்றி பெறுவது, தோற்றுப்போனதாக அறிவிக்கப்பட்டு விட்டார்.

இதில் பங்கேற்ற பெண் மாய் இகாவா என்ற பெண் ருவாண்டா நாடு பற்றிய தனது சமூக அக்கறையை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார். ஆனால் அதற்கும் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என பதில் வந்திருக்கிறது. இதை அவர் கவலையுடன் பதிவு செய்திருக்கிறார்.  

சமூகம் பற்றிய பிரக்ஞையோடு சோபியா பல்கலைக்கழகம் போல பிற நிறுவனங்களும் மாறும்போது மாற்றங்கள் சாத்தியமாகலாம்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்

Whole university culture contaminated inside japan skin deep pageants

https://www.japantimes.co.jp/news/2016/10/31/reference/bright-side-dark-japans-university-beauty-contests/

கருத்துகள்