பெற்றோரை கவனித்துக்கொள்ளும் கடமை, கனவுக்கு தடையாகுமா? ஜே கிருஷ்ணமூர்த்தி

 











அகம் புறம்
ஜே கிருஷ்ணமூர்த்தி கேள்வி பதில்கள்


நாம் வெற்றி பெற்றதும்  பெருமை என்ற உணர்வு உருவாகிறதே ஏன்?


வெற்றி பெறும்போது பெருமை என்ற உணர்வு ஏற்படுகிறதா? வெற்றி என்பது என்ன? வெற்றிகரமான எழுத்தாளர், கவிஞர், ஓவியர்,  தொழிலதிபர் என்று கூறுகிறார்கள். இதற்கு அர்த்தம் என்ன?  நீங்கள் உள்முகமாக குறிப்பிட்ட கட்டுப்பாட்டைப் பெற்று சாதித்திருக்கிறீர்கள். பிறர் அந்த முயற்சியில் வெற்றி பெற முடியாமல் தோற்றுவிட்டார்கள் என்பதுதானே? நீங்கள் பிறரை விட சிறப்பாக செயல்படுகிறீர்கள் என்பதுதான் இதன் அர்த்தம். நீங்கள் வெற்றி பெற்றவராக, பிறருக்கு எடுத்துக்காட்டாக கூறப்படும் இடத்தை அடைந்துவிட்டீர்கள். இப்படி நினைக்கும்போது மனதில் உருவாகும் உணர்வுதான் பெருமை என்பது. நான் சிறப்பானவன். நான் என்ற உணர்வுதான் பெருமைக்கு முக்கியமான காரணம்.

வெற்றிகள் பெறும்போது பெருமை உணர்வு வளருகிறது. ஒருவர் தன்னை மற்றவர்களுடன் ஒப்பீடு செய்து சிறப்பானவன் என்ற எண்ணதை பெறுகிறார். குறிக்கோள் கொண்டுள்ளவர் என்பது, ஒருவரின் நம்பிக்கையை அதிகரிக்கிறது. அதுதான் வலிமை, எதை நோக்கி செல்கிறோம், ஊக்கம் அளிக்கிறது. பிறரை விட நான் முக்கியமானவன் என்ற எண்ணம் மகிழ்ச்சி தருகிறது. இதுவே பெருமையின் முதல்படி.

பெருமை உணர்வு என்பது, ஈகோவை பெருக்குகிறது. இதனை நீங்கள் வயதானவர்களிடமும், உங்கள் உள்மனதிடமும் அறியலாம். நீங்கள் தேர்வில் வெற்றி பெற்றால், உங்கள் மனதில் பிறரை விட சற்று மேலானவர் சிறந்தவர் என்ற எண்ணம் உருவாகும். மகிழ்ச்சி அதற்குப் பிறகு பெருமை உணர்வு உருவாகும். வாதங்களில் வெல்வது, வலிமையாக இருப்பது, அழகாக இருப்பது  ஆகியவை உங்களை முக்கியமானவராக மாற்றும்.  பெருமை உணர்வு நான்  என்பதை வலுவாக்கி முரண்பாடு, போராட்டங்கள், வலி ஆகியவற்றை உருவாக்குகிறது. இதற்கு முக்கியக் காரணம், உங்களை நீங்கள் எப்போதும் முக்கியமானவராக நினைத்துக்கொள்வதுதான்.  


 பெற்றோர் வயதாகி பிள்ளைகளை சார்ந்து இருக்கும்போது ஒருவர் எப்படி தன்னை சுதந்திரமானவராக மாற்றிக்கொள்வது?


பெற்றோர்களுக்கு வயதாகிவிட்டது. எனவே அவர்கள் உங்களை சார்ந்து இருக்கிறார்கள். பிறகு என்ன நடக்கிறது? அவர்களைப் பார்த்துக்கொள்வதோடு உங்களது வாழ்க்கையையும் நடத்திச் செல்லும் அளவுக்கு பணம் சம்பாதிக்கவேண்டும் என எதிர்பார்ப்பு உருவாகிறது. நீங்கள் ஓவியர் அல்லது மர வேலைகள் செய்பவராக இருக்கிறீர்கள். அதில் உங்களுக்கு நினைத்த பணம் கிடைக்கவில்லை. ஆனால் பெற்றோர் உங்களை சம்பாதிக்க வற்புறுத்தினால் அது நன்மையா அல்லது தீமையா? உங்கள் பெற்றோரின் விருப்பப்படி சம்பாதித்தால் உங்கள் விருப்பத்தை தியாகம் செய்யவேண்டும். அவர்களது விருப்பத்தை புறக்கணித்தால் உங்களுக்கு சுயநலவாதி என்ற பெயர் கிடைக்கும். ஆனால் உங்கள் விருப்பத்துடன் பிடித்த வாழ்க்கையை வாழ்வீர்கள். பெற்றோரின் விருப்பத்தை ஏற்றால் அவர்களின் அடிமையாக வாழ்க்கை முழுவதும் இருப்பீர்கள்.

பொதுவாக ஒரு நாடு முதுமை அடைந்தவர்களுக்கு ஓய்வூதியம், உதவித்தொகை ஆகியவற்றை வழங்கவேண்டும் என நீங்கள் கூறலாம். ஆனால் அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளில் உதவித்தொகை திட்டம் என்பது சாத்தியம் கிடையாது. இதற்கு பொருளாதார பற்றாக்குறை, உற்பத்தித் திறன் குறைவு ஆகியவற்றைக் காரணமாக கூறலாம்.  எனவே இந்த விவகாரத்தில் அரசு பெரிதாக முதியவர்களுக்கு உதவ முடியாது. எனவே, முதுமையை எட்டியவர்கள் தங்களின் பிள்ளைகளை சார்ந்திருக்கிறார்கள். ஆனால் இளைஞர்கள் கலாசாரத்தை சார்ந்து அதை பின்பற்றி வாழ்ந்தால் அப்படியே அழிந்துவிடுவார்கள். ஆனால் நான் இங்கு அதைப்பற்றி பேசவில்லை. நீங்கள் இதைப்பற்றி பேசவேண்டும். பிறகு அதை செயல்படுத்த வேண்டும்.

நான் இயற்கையாகவே எனது பெற்றோருக்கு குறிப்பிட்ட வரம்பு அளவில்  உதவி செய்யவேண்டும் என நினைக்கிறேன்.  அதேசமயம் நான் செய்யும் தொழில் எனக்கு பிடித்தமானது. அதில் வருமானம் குறைவாக வருகிறது. கடவுளைத் தேடுகிறேன், தியானம் செய்துகொண்டு இருக்கிறேன் என்றால் அதில் வருமானத்திற்கான வாய்ப்பு குறைவு. அப்படியென்றால் பெற்றோர்களை பசியில் பட்டினியில் சாக விட்டுவிடுவதா? நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் இறப்பதை அறிந்திருப்பீர்கள். இப்போது நான் என்ன செய்வது? நான் என் கடமையைச் செய்யவில்லை, பயனில்லாத பிள்ளை, சுயநலவாதி என பிறர்  கூறும் வசைகளை கேட்டு பயப்படவேண்டுமா? அப்படி பயப்பட்டால் ஒருவர் புதுமைத்திறன் கொண்டவராக இருக்கமுடியாது. புதுமைத்திறன் கொண்டவராக ஒருவர் மகிழ்ச்சியுடன் பல புதிய விஷயங்களைச் செய்ய முடியும்.

 லைஃப் அகேட் நூலிலிருந்து....

 


கருத்துகள்